15 மார்ச் 2009
இஷா கோபிகருக்கு கல்யாணம்!
தமிழில் பூ மாதிரி நடித்துப் புகழ்பெற்று, இந்தியில் கவர்ச்சிப் புயலாய் கலக்கிய இஷா கோபிகரும், இல்லற ஜோதியில் ஐக்கியமாகப் போகிறார்.
தனது காதலர் ரோத் நரங்கை திருமணம் செய்யப்போவதாக இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.
நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் இஷா. பின்னர் காதல் கவிதை, நரசிம்மா, என் சுவாசக் காற்றே படங்களில் பிரசாந்த், விஜயகாந்த், அரவிந்த்சாமி உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.
பின்னர் தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு சென்று, தனது தாராளக் கவர்ச்சியால் பிரபலமானார்.
ஆரம்பத்தில் இந்தி நடிகர் இந்திரஜித்தை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். பின்னர் ரோத் நரங் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். அந்தக் காதல்தான் இப்போது கல்யாணத்தில் முடியப் போகிறது.
மும்பையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார் ரோத் நரங்.
இதுகுறித்து பேசிய இஷா கோபிகர், "கடந்த ஆண்டு ஜூனில் ரோத்தை சந்தித்தேன். நட்பாக பழகி, காதலில் விழுந்தோம். இரு குடும்பத்தாரும் காதலை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த டிசம்பரில் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கு பட வேலைகள் பாக்கி இருந்தன. ரோத்தும் சில பணிகளில் பிசியாக இருந்தார். இதனால் திருமணத்தை தள்ளிவைத்தோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள் இஷா!