உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அசின். இவர் அடுத்து நடித்த எம்.குமரன் படம் மூலம் ஸ்டார் அஸ்தஸ்து பெற்றார்.
சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி செம ஹிட். இதையடுத்து இந்திக்கு போனார். அங்கே அமீர்கானுடன் இந்தி கஜினியில் நடித்தார்.
தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவிட்டார்.
தான் நடிக்கும் படங்களால் ஏற்படும் பிரச்சனையை விட தன்னிடம் வேலை செய்பவர்களால் அசினுக்கு ஏற்படும் பிரச்சனைதான் பெரிதாக இருக்கிறது.
இதற்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் அசினின் உதவியாளராக இருந்து சென்னை போலீஸில் அசின் கொடுமை படுத்துவதாக புகார் சொன்னார்.
இப்போது அசினின் உதவியாளர்(ஆண்) காணாமால் போய்விட்டார். அசின் தான் அவரை கடத்திவைத்திருப்பதாக காணாமல் போனவரின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் முத்துகருப்பன். இவரது மனைவி சுடலைவடிவு. இவர்களது மகன் நல்ல முத்துக்குமார். கடந்த 7 வருடத்துக்கு முன்பு சென்னைக்கு வந்த முத்துக்குமார் நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்தார். 4 வருடத்துக்கு முன்பு நடிகை அசினிடம் முத்துக்குமார் வேலைக்கு சேர்ந்தார். அசின் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றபோது முத்துக்குமாரையும் அழைத்து சென்றார். ஒரு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டதால் முத்துக்குமார் சென்னை வந்து சிகிச்சை பெற்றார். 11/2 மாதம் கழித்து உடல் நலம் தேறிய பிறகு மும்பை சென்று மீண்டும் அசினிடம் வே
லைக்கு
சேர்ந்தார்.
கடந்த 1 மாதமாக முத்துக்குமார் தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு பேச வில்லை. இதுபற்றி சுடலை வடிவு அசினின் தந்தை ஜோசப்புக்கு போன் செய்து விசாரித்த போது, முத்துக்குமார் ஜனவரி 21-ந்தேதிக்கு பிறகு வேலையை விட்டு நின்று விட்டதாகவும், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என்றும் கூறினார். தன் மகன் மாயமானது பற்றி சுடலைவடிவு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப் பிரமணியம் விசாரித்தார்.
அப்போது சுடலைவடிவு போலீசாரிடம் தனது மகன் காணாமல் போனது பற்றி அசினும், அவரது தந்தையும் முன்னுக்குபின் முரண்பாடாக சொல்கிறார்கள். அவர்கள் எனது மகனை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சந்தேகப்படுகிறேன் என்று கூறினார். இது தொடர்பாக அசினின் தந்தை ஜோசப்பிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது, ஜனவரி 21-ந்தேதி முத்துக்குமார் வேலையை விட்டு நிற்பதாக கூறி சம்பளத்தை கணக்கு முடித்து வாங்கி சென்று விட்டார். அவர் வீட்டுக்கு செல்லவில்லை என்பதால் பிப்ரவரி 9-ந்தேதி போலீசில் புகார் செய்து விட்டோம் என்றார். இந்த நிலையில் உதவியாளர் மாயமானது தொடர்பாக நடிகை அசினிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், எனது உதவியாளர் நல்ல முத்துக்குமார் வேலையை விட்டு சென்ற உடனேயே நாங்கள் போலீசுக்கு சொல்லி விட்டோம். எனவே அந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விட்டார்.