14 செப்டம்பர் 2011
முத்தக்காட்சியை படமாக்கும் போது முரண்டு பிடித்த நடிகை!
ஹனிரோஸ் ஹீரோயின். மற்றும் கஞ்சா கருப்பு, தண்டபாணி, கிரேன் மனோகர், நெல்லை சிவா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் சலங்கை துரை கூறியதாவது: சென்னையில் தண்ணீர் லாரி டிரைவராக இருக்கும் கதிருக்கும், கல்லூரி மாணவி ஹனிரோசுக்கும் காதல் மலர்கிறது. திடீரென்று அவர்கள் காதலுக்கு தடை ஏற்படுகிறது. இதற்கு அவர்களே காரணமாகிறார்கள். அது ஏன்? எப்படி என்பதுதான் கதை.
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும். படத்தில் ஒப்பந்தமாகும்போது, ஹனிரோஸ் கதை கேட்கவில்லை. பிறகு ஷூட்டிங்கில் அவருக்கும், கதிருக்கும் முத்தக்காட்சியை படமாக்க முயன்றபோது, நடிக்க மறுத்தார்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தோம். அவர்கள் விசாரித்தனர். நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படமாக்கினோம். மற்றபடி எங்களுக்கும், ஹனிரோசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.