நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜூக்கும், லலிதாகுமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார். நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த பிரகாஷ் ராஜ் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.
பிரகாஷ் ராஜ் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருத்தியிருந்தது. இதற்கிடையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜுடன் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்த மனுவும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜை பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கணவர் பிரகாஷ் ராஜுடம் இருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி விவாகரத்து பற்றி டிஸ்கோ சாந்தி கூறியதாவது,
என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். வடபழனியில் உள்ள முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.
ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு பேரும் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். என் தங்கை 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடிக்கிற தண்ணீர் சப்ளை செய்வதை கூட நிறுத்தி விட்டார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம், என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பூப்படைந்தாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியை நடத்தினேன்.
பெற்ற மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். குழந்தைகளுக்கு உடைகள் கூட வாங்கி தருவதில்லை. இரண்டாவது மகளின் பிறந்தநாளுக்கு நான்தான் உடை வாங்கி கொடுத்தேன்.
எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன் என்றார்.