Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

20 ஜூலை 2012

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி






ஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.

                              
   முதலில் உங்கள் மெயின் ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள்.


                                                    




மெயின் ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another   address கிளிக் செய்யவும்.



 இங்கு எந்த ஈமெயிலை  லிங்க் செய்ய  வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்.

 




                                           
                                              Send verification கிளிக் செய்யுங்கள்
                                      

அடுத்து     VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில்       கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification   ஈமெயில் வரும்.
அங்கு சென்று Confirmation code number யை  verification box யில் தந்து விடுங்கள்.








வேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose  பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown  வந்திருக்கும் அதில் நீங்கள்  கேட்ட  ஈமெயில்  கணக்கு    வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள்  நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.

அதிகம்  பயன்படுத்தாத   சில   கணக்கை   லிங்க்   செய்து  கொள்ளுங்கள்.சில சமயம்  அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்
கணக்கிலிருந்தே  நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com