Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூலை 2012

கைதாகிறார் "போதை' ராகுல் சர்மா! * இந்திய கிரிக்கெட்டில் அதிர்ச்சி


மும்பை: நள்ளிரவு "பார்ட்டியில்' இந்திய வீரர் ராகுல் சர்மா, போதை மருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர் விரைவில் கைது செய்யப்பட இருப்பதால், இலங்கை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்தவர் ராகுல் சர்மா, 25. சுழற்பந்துவீச்சாளரான இவர், சமீபத்திய ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த மே 20ம் தேதி மும்பை ஓட்டலில் நடந்த நள்ளிரவு "பார்ட்டி'யில் சக புனே வீரர் பார்னலுடன்(தென் ஆப்ரிக்கா) கலந்து கொண்டார். இதில் பங்கேற்றவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 இது தொடர்பாக நடந்த "ரெய்டில்' ராகுல் சர்மா, பார்னல் உட்பட 90 பேர் பிடிபட்டனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின. இதில், ராகுல் சர்மா, பார்னல், முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கன் பேடி உட்பட 42 பேர் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக, துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் டிகோகர் தெரிவித்தார். இவர்கள் "கேனபிஸ்', "கோகெய்ன்' போன்ற போதை மருந்துகளை மாத்திரை வடிவில் உட்கொண்டுள்ளனர். அனைவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இன்று இலங்கை தொடர் துவங்க உள்ள நிலையில் ராகுல் சர்மா மீதான கைது நடவடிக்கை இந்திய அணியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் இத்தொடரில் பங்கேற்பது இனி சந்தேகம் தான். "நான் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், கிரிக்கெட்டை விட்டே விலகுவேன்,'' என அப்போது ராகுல் சர்மா சவால் விடுத்தார். இப்போது சோதனை முடிவு "பாசிட்டிவ்' என்ற நிலையில், என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. இவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி., தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பி.சி.சி.ஐ., நிதானம்:
இப்பிரச்னையில் அவசரப்படப் போவதில்லை என இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது. இதன் தலைவர் சீனிவாசன் கூறுகையில்,""அனைத்து தகவல்களையும் பெற்ற பின் ராகுல் சர்மா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,''என்றார்.


நல்ல பாடம்: கங்குலி 
ராகுல் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""இளம் வீரர் என்பதால் "பார்ட்டியின்' போது தெரியாமல் தவறு செய்திருக்கலாம். இவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது இவருக்கு சிறந்த பாடமாக அமையும். இதற்காக சிறிய தண்டனை அளிக்கலாம். இந்திய அணியில் பங்கேற்க தடை விதிக்கக் கூடாது,''என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com