Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூலை 2012

முத்தக்காட்சியில் துணிச்சலுடன் நடித்தேன்! இனியா



8

Iniya replies about liplock with santhannuதங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் அம்மாவின் கைப்பேசி படத்தில் நாயகன் சாந்தனுவுக்கு, நாயகி இனியா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியில் சாந்தனுவுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி இனியா பேட்டியொன்றில் கூறியுள்ளார். 




அவர் தனது பேட்டியில், தங்கர்பச்சான் தேவையில்லாமல் முத்தக்காட்சியை வைக்க மாட்டார். கதைக்கும், காட்சிக்கும் அத்தியாவசியமாக இருந்ததால்தான் அந்த காட்சியை படமாக்கினார். படம் பார்க்கும்போது தெரியும். அதில் விரசம் இருக்காது. ஒரு அத்தை மகனை, மாமா மகள் எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது அந்த காட்சியில் வெளிப்படும். அதனால்தான் துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தேன், என்று கூறியுள்ளார்.

இனியாவின் முத்தத்தை இன்முகத்துடன் பெற்ற சாந்தனு கூறுகையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்துக்காக என்னிடம் உடல் எடையை குறைக்க சொன்னார். ஆறரை கிலோ உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வீட்டில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அவர் நடித்துக்காட்டியபடி, படத்தில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதை எல்லாம் செய்கிறேன். அப்படித்தான் இந்த முத்த காட்சியும். ஒரே டேக்கில் படமாக்கி விட்டார், என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com