எப்போதோ தனக்கு உதவிய தெலுங்கு திரையுலகை நன்றியோடு நினைத்துப்பார்த்து பாராட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகம் சார்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ரஹ்மானை பாராட்டி அவருக்கு தங்க கிரீட்ம் அணிவித்தார் பின்னணி பாடகி பி.சுசிலா.
கிரீடம் அணிவித்ததும் கூச்சம் ஒளிவீசியபடி ரஹ்மான் பேச ஆரம்பித்தார். "இங்கு எனக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதற்காக இங்கு வரவில்லை. நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது எனது குடும்பம் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது.
அப்போது தெலுங்கு இசை அமைப்பாளர் ரமேஷ் நாயுடு என்னை அவரது குழுவில் இணைத்துக்கொண்டார். அதிலிருந்து என்னை வளர்த்துக்கொண்டேன். பிறகுதான் இளையராஜாவிடம் இரண்டு வருடம் பணிபுரிந்தேன். பிறகு ஆறு வருடங்கள் தெலுங்கு இசை அமைப்பாளர்கள்தான் எனக்கு உதவி புரிந்தார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னும் நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன்.
நான் ஐதராபாத்தில் குடியேறினால் எனக்கு பஞ்சரா ஹில்ஸில் வீடு வாங்கி தருவதாக 10 வருடத்துக்கு முன் தயாரிப்பாளர் சுப்புராமி ரெட்டி சொன்னார்" என ப்ளாஸ்பேக்கில் மூழ்கிய ரஹ்மான், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'ஜெய்ஹோ...' பாடலை பாடிக்காட்டினார். |