சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!
சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.
கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.
அதன்பிறகு தமிழில் ரொம்ப நாள் வரை நடிக்காமலே இருந்தார் நயன்தாரா (இப்போது தமன்னா இருக்கிறாரே... அப்படி!!).
பின்னர் மெல்ல அவரை மீண்டும் தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம் தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன் படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார் (சிவாஜி, குசேலன்). அதைத் தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை கோலிவுட்டில் ஆரம்பித்த நயன்தாரா, மீண்டும் தனுஷுடன் இணைத்துப் பேசப்பட்டார்.
ஆனால் அது சிறிது காலம்தான். வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த நான்கு வருடங்களாக மீடியாவின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.
இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம் செய்ய, மதம் மாறி, கையில் அவர் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு நயன்தாரா தயாராக இருந்த நிலையில், இருவரின் காதலும் திடீரென முறிந்தது.
இதற்கும் காரணம், பிரபுதேவாவின் நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார் நயன்தாரா.
இப்போது, மீண்டும் தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல் தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும் தன் பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார் (பிரபு தேவாவுடன் காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் ராசியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது).
இந்த நெருக்கத்துக்கு சாட்சியாக இருவரும் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இது எத்தனை நாளைக்கோ...!