இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டனான விராத் கோஹ்லி, ஒருநாள் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். கலந்து கொண்ட 4 போட்டிகளில் 2 சதமடித்த கோஹ்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த ஜொலிக்கும் நட்சத்திர வீரராக விராத் கோஹ்லி திகழ்வார் என்று முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணியின் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் விராத் கோஹ்லி, தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவரது ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு தொடர்ந்து வெற்றிகள் கிடைப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தனி திறமை வாய்ந்த விராத் கோஹ்லி தொடர்ந்து இதேபோல சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணியின் அடுத்த ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறுவார்.
விராத் கோஹ்லி உடன், ரெய்னா, மனோஜ் திவாரி போன்ற வீரர்கள் இணைந்து செயல்படுகின்றனர். இதன் மூலம் இலங்கை பந்துவீச்சு தாக்குதல் முறியடிக்கப்பட்டது. விராத் கோஹ்லி இலங்கைக்கு எதிரான சதமடித்ததால் நான் இப்படி கூறவில்லை. அவரது பொறுப்பான ஆட்டத்தை பாராட்ட
விரும்புகிறேன்.
விரும்புகிறேன்.
மேலும் இளம் பந்துவீச்சாளர் அசோக் டின்டா சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் ஷாட் பிச் பந்துகளை வீச அவர் பயப்படுவதில்லை. இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் டின்டா தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.