விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது தனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் என்பார் அடிக்கடி பிரபு தேவா.
இருவரும் இணைந்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தையும், வில்லு என்ற சுமார் படத்தையும் தந்துள்ளனர். மீண்டும் இணைவார்களா என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிரபு தேவாவின் இந்திப் படம் ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி கலக்கினார் விஜய்.
இந்த நிலையில் மும்பையில் திடீரென விஜய்யும் அசினும் பிரபு தேவாவைச் சந்தித்தனர்.
'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்றிருந்த விஜய், அருகில்தான் பிரபுதேவா வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்றார்.
விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று கூறப்படுகிறது!