
ஜி ஸ்பாட் என்பது சரியாக எந்த இடத்தில் இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒருசிலர் பெண்ணுறுப்பின் உள்ளே இரண்டு அங்குல ஆழத்தில் உறுப்பின் மேல்பகுதியில் மிகமிருதுவான பஞ்சு போன்ற மென்மையான சருமப்பகுதிக்குத்தான் ஜி ஸ்பாட் அல்லது உணர்வுப்பிரதேசம் என்று கூறுகின்றனர். முன்விளையாட்டுக்களின் போது இந்த உணர்வுப்பகுதியை தொடும் ஆண்கள் பெண்களை உணர்ச்சிப்பிழம்பாக மாற்றுகின்றனராம். அந்த இடத்தில் இரத்த ஓட்டம் அதிகமாகி அது உச்சி முதல் உள்ளங்கால் வரை உணர்வுகளை தூண்டுகிறதாம். இதனை பெண்களின் செய்கைகளாலேயே தெளிவாக உணரலாம்.
இந்த உணர்ச்சிப்பிரதேசம் தூண்டப்பட்டு விடும் போது பெண்கள் உடலுறவுக்குத்தயாராகி விடுகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மகளிர் நல மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் 1950 ம் ஆண்டு பெண் புணர்ச்சிப் பரவச நிலையில் சிறுநீர்க் குழாயின் பங்கு என்பது பற்றி எழுதியுள்ளார். அவரது நினைவாகவே கிராஃபென்பெர்க் ஸ்பாட் அல்லது ஜி - புள்ளி குறிப்பிடப்படுகிறது. ஜி - ஸ்பாட்டும் மனிதப் பாலின்பம் குறித்த பிற கண்டறிதல்களும் என்ற நூல் 1982 ம் ஆண்டு வெளியான பின்னர் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த நூல் வெளியான காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் பின்னர் படிப்படியாக இதன் முக்கியத்துவம் குறித்து உணரப்பட்டது.
அதேசமயம் ஜி - ஸ்பாட் என்பது கற்பனையான ஒன்று என்றும் அது மனித மனத்தோடு தொடர்புடையது என்றும் சில நம்பிக்கைகள் நிலவுகின்றன. பெண்ணை தொடும்போது உணர்வுகளும், கிளர்ச்சிகளும் அதிகரிக்கிறதோ அதுதான் ஜி - ஸ்பாட் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பெண்ணின் உடலில் உள்ள உணர்வு நரம்புகளை தூண்டும் போது உச்சக்கட்ட பரவசநிலை ஏற்படும் என்று உடற்கூறியல் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி -ஸ்பாட் இருக்கோ இல்லையோ உறவின் போது பெண்ணை திருத்தியுறச்செய்யும் ஆண்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் சுகமே அலாதியானது இதனால் இருவருக்குமே திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.