ஜப்பானிய நிறுவனமான என்இசி நிறுவனம் 249 கிராம் எடை கொண்ட புதிய டேப்லட்டினை என்டிடி டோக்கோமோ மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனத்திற்கு வழங்குகிறது.
கூகுள் நெக்சஸ்-7 டேப்லட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த மீடியாஸ் டேப் யூஎல் என்08-டி டேப்லட் குறைந்த எடை கொண்டதாக இருக்கும். ஏனெனில் என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 249 கிராம் எடையினையும், நெக்சஸ் டேப்லட் 340 கிராம் எடையினையும் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய டேப்லட் 1.5 ஜிகாஹர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிரான் எம்எஸ்எம்8960 பிராசஸரினை கொடுக்கும். இதன் 7 இஞ்ச் திரை, 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை வழங்கும்.
இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா, 8 மெகா பிக்ஸல் கோமரா என்று சிறப்பாக டியூவல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும். இது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 3,100 எம்ஏஎச் பேட்டரியினையும் இதில் பெற முடியும்.
இந்த டேப்லட்டின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் சரி வர வெளியாகவில்லை. இந்த டேப்லட் ஜப்பானிய நிறுவனத்தில் செப்டம்பர் 20ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.