Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

20 செப்டம்பர் 2012

உண்மையாக இருங்களேன் பெண்களை கவரலாம்!


பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள முடியாது என்கின்றனர். எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் கூட பெண்களின் மனதை கவர முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.
ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அனுபவசாலிகள் படியுங்களேன்.
How Win Woman S Heart
பாதுகாப்பு உணர்வு
பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு.
தோற்றத்தில் மாற்றம்
பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
குணத்தால் கவருங்கள்
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
அடிக்கடி விசாரியுங்களேன்
எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு.
சரியாக கணியுங்கள்
நாம் விரும்பும் பெண்ணுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என்று சரியாக கணியுங்கள். இதை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டால் சொதப்பல்கள் இருக்காது. பிடித்த உணவு, பிடித்த நிறம், பிடித்தவைகளை சரியாக செய்தால் பிடிக்காதவைகள் ஏதாவது ஒரு சில செய்ய நேரிட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
கவனியுங்களேன்
ஆண்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காகவே நடை, உடை, பாவனைகளை தினம் தினம் புதிது புதிதாக மாற்றிக்கொள்கின்றனர் பெண்கள். அதை சரியாக கவனித்து அவர்களை பாராட்டுங்களேன். இந்த உடை உங்களுக்கு சரியா இருக்கு. இந்த ஹேர் ஸ்டைல் உன்னோட அழகை அதிகரிக்கிறது என்று சும்மா சொல்லி வையுங்களேன். அதற்காகவே கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவரின் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஜென்டில்மேன் பேச்சு
எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் லாவகமும் கொண்ட ஆண்களை அதிகம் பிடிக்கிறதாம். எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுயத்தை இழக்காதீர்கள்
பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முயற்சி செய்து பாருங்களேன்
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com