பிரபல இதழ்களில் வெளியாகும் பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு அவர்களின் சொந்த வாழ்வில் செக்ஸ் செயல்பாடுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இளம் பெண்களின் வாழ்வில் எவ்விதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காஸ்மோபாலிடன் இதழ்களில் உள்ள பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கின்றன. மேலும் இளம் பெண்கள் அவற்றை படிப்பதன் மூலம் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் Janna L. Kim and L. Monique Ward ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 150 கல்லூரி மாணவிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை சரி பாதியாக பிரித்து ஒரு பிரிவினருக்கு பொழுது போக்கு அம்சங்கள் கட்டுரைகள் அடங்கிய இதழ்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலியல் கட்டுரைகள் அடங்கிய புத்தகமும் படிக்கக் கொடுக்கப்பட்டது.

அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டன. இதில் பாலியல் தொடர்பான கட்டுரைகளை படித்த பெண்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகம் ஏற்பட்டது தெரியவந்தது. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது தொடர்பான உணர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெண்களின் பாலியல் உணர்வுகளை பாதிப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கயி பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியான உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.