ரவி அலவாத் என்பவர் தயாரிக்க நவீன் பத்ரா இயக்கும் படம்தான் இந்த சூப்பர் மாடல். இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள கவர்ச்சிகரமான புகைப்படக் குவியலை ரிலீஸ் செய்துள்ளனர்.
இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள போஸ் அனைத்துமே ஏடாகூட கவர்ச்சியில் உள்ளன. உடல் பாகங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் இப்படங்களில் வீணா.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை ஒரு சூப்பர் மாடலாக உணர வைத்துள்ளது இந்த போட்டோஷூட். எனது கவர்ச்சிகரமான உடலை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.
இப்படம் குறித்து பத்ரா கூறுகையில், சூப்பர் மாடல் படத்தை நான் தீர்மானித்தவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் வீண்தான். அவர்தான் இதற்குப் பொருத்தமானவர். சரியான உடல் வாகு அவருக்கே உண்டு. கடுமையாகவும் உழைக்கிறார், முகம் சுளிக்காமல் ஒத்துழைக்கிறார் என்று புகழாரம் பாடுகிறார்.
இந்தப் படத்தில் அவருடன் ஜோடி போடுபவர் அஷ்மித் படேல் ஆவார்.