ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கடும் இழப்பு- போர்ப்ஸ் பட்டியலில் 36 வது இடத்துக்குப் போனார்!
நியூயார்க்: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கபெர்க்குக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் போர்ப்ஸ் பட்டியலில் இருந்தும் சரிந்துவிட்டார்.
கடந்த மே மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்நிறுவனத்துக்கு செம இறங்குமுகம்தான்! தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் 1 பங்கு மதிப்பு 12 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. மொத்தம் 4.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஜூக்கர்பெர்க்குக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்!
போர்ப்ஸ் பத்திரிகையில் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது 34வது இடத்துக்குப் போய்விட்டார்!
ஜூலை மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 96 மில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேர்ந்ததால் பங்கு மதிப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு முதன் முறையாக கருத்து தெரிவித்த ஜூக்கர்பெக். செல்போன் பயன்பாடுகளில் தமது நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தாமல் 2 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று கூறியிருந்தார்