திருமணம் முடிந்து குழந்தை பெற்று பெயரும் வைத்த பிறகுதான் ஹனிமூன் செல்ல நேரமே கிடைத்ததாம் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிகளுக்கு.
சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு, செல்வராகவன் காதலித்து கைப்பிடித்த பெண் கீதாஞ்சலி.
திருமணம் முடிந்த கையோடு தனது இரண்டாம் உலகம் படத்தில் மூழ்கிவிட்டார் செல்வராகவன், இந்தப் படத்துக்காக ஜார்ஜியாவிலெல்லாம் ஷூட்டிங் நடத்தினார்.
இப்படி பிஸியாக ஓடிக் கொண்டிருந்ததால் ஹனிமூனே போகவில்லையாம் இருவரும். இதற்கிடையே கீதாஞ்சலிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. அதற்கு லீலாவதி என பெயர் சூட்டியுள்ளனர்.
ஜார்ஜியாவில் நீண்ட நாள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய செல்வராகவன், "இப்ப போகலாம் ஹனிமூன்... இடத்தை மட்டும் நீ செலக்ட் பண்ணு' என்று கூற, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை தேர்வு செய்தாராம் கீதாஞ்சலி.
அப்புறமென்ன... ஜாலியாக ஒரு ட்ரிப் அடித்து, உதய்பூரின் பிரபல தாஜ் லேக் பேலஸில் தங்கியிருந்துவிட்டு உற்சாகமாகத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கீதாஞ்சலி கூறுகையில், "2010-ல் திருமணமாச்சு எங்களுக்கு. ஹனி மூன் போக 2 வருஷம் ஆகிடுச்சி. செல்வாதான் ஒரு பிரேக் வேணும்னு இப்போ போகலாம்னு சொன்னார். பரந்து விரிந்த ஏரிக்கு நடுவில் உள்ள அந்த அரண்மனை ஹோட்டலில் தங்கியிருந்ததே புது அனுபவமாக இருந்தது," என்றார்.
"தாஜ் பேலஸ் ஹோட்டலில் கிடைத்த உபசரிப்பும், இனிய அனுபவமும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் இது," என ட்விட்டரில் கூறியுள்ளார் செல்வராகவன்