
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு விஷயம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஃபோட்டோவாக டவுன்லோட் செய்வது. ஆனால் இப்படி இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
இதற்கு ஃபேஸ்பேட் ஃபயர்பாக்ஸ் ஏட்ஆனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் டவுன்லோட் ஆல்பம் வித் ஃபேஸ்பேட் என்ற ஆப்ஷன் மூலம் எளிதாக அனைத்து புகைப்படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஃபேஸ்பேட் மட்டும் அல்லாமல் இன்னும் சில அப்ளிக்கேஷன்களும் உள்ளது. சோஷியல்ஃபோட்டோ டவுன்லோட் என்ற ஃபேஸ்புக் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து கொள்வது இன்னும் சிறந்தது. இதன் மூலமும் நிறைய புகைப்படங்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.