Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 ஏப்ரல் 2009

SWINE FLU பரவுகிறது ! கவனம்.

அமெரிக்கா,சீனா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Swine Influenza அல்லது Swine Flu என்று பொதுவாக அழைக்கப்படும்.
இது Influenza எனும் நோயையே குறிப்பிடும்.
Influenza (பொதுவாக Flu) என்பது Orthomyxoviridae எனும் குடும்பத்திலுள்ள RNA வைரஸ்களால் பரப்பப்படும் தொற்றுநோயாகும்.
இது பொதுவாக பறவைகள் மற்றும் முலையூட்டிகளை பாதிக்கும்.
Swine என்பது பன்றியைக் குறிக்கும்.
இந்த Swine Flu ஆனது வளர்ப்பின பன்றிகளிடமிருந்து Swine Influenza Virusஆல் (SIV) கடத்தப்படுகிறது.
Swine Influenza Virus (SIV)
Swine Flu ஆனது பொதுவாக வளர்ப்பின பன்றிகளிடம் தொற்றும் நோயாகும்.
மனிதனுக்கு பரவுவது மிகவும் அரிதானது.
வளர்ப்பின பன்றிகளோடு மிகவும் அதிகமாக வேலை செய்வோருக்கு இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
எனினும் இந்த நோய்க்கான வைரஸ் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தப்படுவது மிகவும் அரிதானது.
மனிதனுக்கு பரவியுள்ள இந்த நோய்க்கான வைரஸின் உடற்கட்டமைப்பில் உள்ள சில புரதங்கள் வழமையாக பன்றிக்கு நோயைத் தோற்றுவிக்கும் வைரஸின் உடற்கட்டமைப்போடு ஒத்துப் போகின்றனவாம்...
நோய் பரவியுள்ள நாடுகளில் மக்கள் பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு செல்கின்றனர்...
மனிதனுக்கு இந்த நோய் பரவியுள்ளதற்கான அறிகுறிகள் பின்வருவனவாகும்...
வழமையாக Influenzaக்கான அறிகுறிகள் தான்.
காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை அடைப்பு, தசைகளில் வலி, கடுமையான தலைவலி, இருமல், உடல் வலுக்குறைவு மற்றும் அசாதாரண உடல் நிலைமைகள்.
இந்த அறிகுறிகள் யாருக்காவது காணப்படின் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வதே நல்லது...

27 ஏப்ரல் 2009

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1

முதலில் பொதுவான தமிழ் / பிறமொழி இணையத்தளமிருப்பின் அதன் மூலம் என்னென்ன செய்யலாமென பார்க்கலாம்.

எல்லாவிதமான விடயங்களையும் உங்கள் பதிவில் / வெப்பில் கவர் பண்ணுபவரா நீங்கள் ? உங்களுக்கு கூகிளிக் ஆட்சீன்ஸ்தான் முதல் தெரிவாகவிருக்கட்டும். மற்றயது Banner Ad போன்றவற்றையும் முயற்சிக்கலாம். பொதுவாக பதிவுகளில்Pay per clicks / Immpressions எல்லாம் பயன்படாது. மாதத்திற்கு இவ்வளவென விளம்பரப்படுத்தும் சேவைகளைத்தான் நம்பவேண்டும். அதுதான் அதிகமான வருவாயை தரும். தமிழில் இதுபோன்றதொரு தளம் இருக்கிறதாவென தெரியவில்லை. இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கலாம். தேவையான மென்பொருள் வசதியை என்னால் தர முடியும். ஆனால் பிரபலமாக வெகு நாளாகும். விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் போன்ற பிரபலமாகவுள்ள தமிழ் இணையத்தளங்கள் இச்சேவையை செய்ய முன்வந்தால் மிக உச்ச பயன் கிடைக்கும். ஏனெனில் விளம்பரதாரர்களும் நம்பிக்கையுடன் விளம்பரம்தர ஒத்துழைப்பார்கள்.

——————————————————————————

இத்தளம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்?

விளம்பரம் வெளியிட விரும்புவோர் தங்கள் தளம் பற்றிய விபரங்களை தரவேண்டும். அத்தள Hits விடயங்கள் automatic script / Tamilish or smiler Tamil web sites- votes அடிப்படையிலே திரட்டப்படும். ( Alexa / Google page rank போன்றவை இங்க உதவாது. ) இவர்கள் எந்த வகை வியாபார விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடலாமென தெரிவிக்க வேண்டும். மற்றும் எதிர்பார்க்கும் கட்டணத்தையும் தெரிவிக்கவேண்டும். இவையாவும் டேட்டாபேசில் ஒருமுகப்படுத்தப்பட்டு சேமிக்கப்படும்.

விளம்பரதாரர் தங்கள் விளம்பரங்கள் எந்த வகையான தளங்களில் வரவேண்டுமென நிர்ணயம் செய்து தங்கள் எதிர்பார்க்கும் அல்லது செலுத்தக்கூடிய உச்ச கட்டணத்தையும் தெரிவிப்பர்.

நமது Script ஆனது இவர்கள் இருவருக்கும் இணைந்தாற்போல வரும் விளம்பரதாரரையும் வெளியீட்டாளர்களையும் பட்டியல் போட்டு நொடியில் தந்துவிடும். பின்னர் இருவருக்கும் பிடித்திருந்தால் விளம்பரம் வெளியிடலாம். தரகாக இயைத்தளத்திற்கு ஒரு விகித அடிப்படையிலோ அல்லது fixed rate ஆகவோ பணம் செலுத்த இந்த தளத்திற்கும் வருமானம் பெருகும்.

அடுத்து 3ம் தரப்பாக இணையத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாகவிருப்பவருக்கும் இவ்விணையம் மூலம் வருமானமீட்டலாம். அதாவது உங்களின் ஏரியாவிலுள்ள வியாபா நிலையங்களிலிருந்து விளம்பரங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைத்தரகாக ஒரு வருமானத்தையும் பெறலாம். ஆக 4 தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும்.

சாதாரண Banner ad management script இனை சிறிது மேம்படுத்துவதன் மூலம் இவ்வசதிகள் கொண்ட ஒரு இணையத்தளமிருப்பின் வருமானம் பெருகும். ஆங்கில தளங்களுக்கு இவ்வாறெரு தளம் முற்றாக வடிவமைத்துக்கொடுத்திருக்கிறேன். இதைப்பற்றி வேறு தகவல் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். ( தெழில் காரணமாக என்னால் Script தரமுடியாது. என் பிழைப்பே இதுதான். ஆனால் என்னாலான யோசனைகளை தயங்காமல் தருவேன் )

——————————————————————————————

அடுத்து Google Adsense களை நம்பி ஆங்கிலத்தளங்களை வைத்திருக்கிறீர்களா?

உங்களின் தளம் கண்டிப்பாக ஏதாவதொரு குறித்த விடயத்ததை மட்டுமே விவாதிப்பதாகவோ வெளியிடுவதாகவோ இருக்கட்டும்.

அதாவது Google Adsense ல் Finance, Economics, debt, Loan போன்ற key words வரும் விடயங்களை உள்ளடக்கிய தளங்களில் வெளியிடப்படும் adsense ஆட்களை யாராவது கிளிக்கினால் இதற்கு அதிக பணம் தருவார்கள். ஏனெனில் இந்த கீ வேர்ட்ஸ்சுக்கு இருக்கும் மவுசு அப்படி. ஆக நீங்களும் இது சம்பந்தமான பதிவுகளை இட்டு அதை விளம்பரப்படுத்தி ஹிட் சேர்த்தீர்களெனில் உங்கள் வெப்பிலிருந்து வரும் கிளிக்ககளுக்கு அதிக பணம் கிடைக்கும். 1st year படிக்கும்போது Adsense அறிமுகம் கிடைத்தது(2005/2006 ). அப்போது 4 பதிவுகளை ஆரம்பித்தேன். 3 மாதத்திற்குப்பின்னர் ஒரு மாதத்திற்கு $80-100 வரை கிடைத்தது. 4 வாரங்களுக்கொருதரம் செக் வரும். பின்னர் இந்த சில்லரை வேலையை விட்டுவிட்டு Software development ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை நன்றாக நடக்கிறது. விரைவில் 3வருட நிறைவு வர இருக்கிறது:) .

பல ஐடியாக்களை நீண்ட நாட்களாகவே பதிவிடும் எண்ணம் இருந்தது. இன்றுதா கொஞ்சமாவது தட்டச்சு செய்திருக்கிறேன். எனது அறிவுக்கெட்டிய சில சில்லறை யோசனைகளைத்தான் சொல்லப்போகிறேன். உபயோகப்படுத்தலாமென நினைத்தால் விடாமுயற்சியாக முயன்றுபாருங்கள். யாருக்கும் ஐடியா சொல்லும் வயதில் நான் இல்லை. தவறாக நினைக்காமல் இருந்தால் சரிதான். இந்த ஐடியாக்கள் படிக்கும்பொது இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்கு ஏதாவது பொறி தட்டினால் தாமதிக்காமல் செயல்படுத்திவிடுங்கள். ( அதுதான் எல்லாவற்றிற்கும் மிக முக்கியம்.)

பின்னர், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் எழுதும் பதிவர்களுக்காக சில ஐடியாக்களை தருகிறேன். நீங்கள் திட்டாமல் ஆதரித்தால் மட்டும்.

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.
முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!

பாவாடை தாவணியில் ஸ்ரேயா! தமிழகத்தில் குட்டி ஃபீவர்?

குட்டிய எப்போ காட்டுவீங்க? மித்ரன் ஜவகரிடம் கேட்டால், இப்போதுதான் பாலிஷ் போட்டுகிட்டு இருக்கோம். சீக்கிரம்... என்கிறார். நாம் சொன்ன குட்டியில் நடிப்பவர்கள் தனுஷ்-ஸ்ரேயா ஜோடி! யாரடி நீ மோகினியில் நயன்தாராவுக்கு பாவாடை தாவணி கொடுத்து தமிழ்நாட்டையே நயன்தாரா காய்ச்சலுக்கு உள்ளாக்கிய மித்ரன் ஆர் ஜவகர், இப்போது குட்டி படத்தில் பிஸியாகிவிட்டார். இந்த முறை இவர் கிளப்பப் போவது ஸ்ரேயா ஃபீவர். "ஒரு பொண்ணுக்கு ஆயிரம் டிரஸ் கொடுங்க. பாவடை தாவணிக்கு இருக்கிற அழகே தனி. குட்டியிலும் பாவாடை தாவணியிலேதான் வர்றாங்க ஸ்ரேயா" என்றார். ஆனால் தாவணிதான் அப்படியே தொடர்கிறதே தவிர, படத்திற்கு முக்கியமான இசையில் ஒரு பெரிய மாற்றம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை விட்டு விட்டு தேவி ஸ்ரீ பிரசாத்துடன் கை குலுக்குகிறார் ஜவகர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்களாகட்டும், இயக்குனர்கள் ஆகட்டும், முதலில் டிக் பண்ணுவது தேவி ஸ்ரீ பிரசாத்தைதான். இரண்டு மொழி டேஸ்ட்டையும் ருசிக்கிற ஆள் அவர். இந்த முறை எனக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம, அவருக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி ட்யூன் போட்டிருக்காரு. கேட்கதானே போறீங்க என்றார் பெரிய எதிர்பார்ப்புடன். ஒவ்வாரு படத்தையும் மாமனாரிடம் காட்டி, அவரது பாராட்டுதல்களுக்காக காத்திருக்கும் தனுஷ், இந்த முறையும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். மாமனார் ரஜினி குட்டியை பார்த்து குட்டுவாரா? தட்டிக் கொடுப்பாரா? இன்னும் சில மாதங்களில் தெரியும்.

ஆஸ்பத்திரியில் அனுமதி தந்தை உதவியில்லாமல் அவதிப்படுகிறேன் - அசின்

அசின் சினிமா கால்ஷீட் விஷயங்களை கவனித்து கொள்பவர் அவரது தந்தை ஜோசப் தொட்டும்சல். தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி” யில் அறிமுகமானபோது ஜோசப்பும் கேரளாவில் தொழில் வியாபாரங்களை பிறரிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார். படப்பிடிப்பில் அசின் கூடவே செல்வார். நட்சத்திர ஓட்டல்களில் தங்கும்போதும் பக்கத்திலேயே ரூம் போட்டு கவனமாய் மகளை கண்காணிப்பார். இவர் அனுமதி இல்லாமல் அசினை எவரும் சந்தித்து விட முடியாது. அசின் செல்போனும் ஜோசப் கையில்தான் இருக்கும். அசினுடனேயே சதா ஒட்டிக்கொண்டு திரிவதால் ஜோசப் மீது ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு வெறுப்பு உண்டு. இந்தி “கஜினி” மூலம் வடஇந்தியாவில் பிரபலமானதால் இந்தி கதாநாயகர்கள் அசினுடன் ஜோடி சேர மொய்க்கின்றனர். ஆனால் யாரையும் கிட்டே நெருங்க விடாமல் தானே புதுப்படங்கள் பற்றி பேசி தீர்க்கிறார். மொத்த வேலையையும் தந்தையிடம் ஒப்படைத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய அசினுக்கு தற்போது தந்தை ஜோசப் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்பத்திரியில் படுக்கையிலேயே இருக்கிறார். ஜோசப்புக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. தாய் கேரளாவில் இருந்து வந்து அசினுக்கு துணையாக தங்கி இருக்கிறார். தந்தை உதவி இல்லாமல் தவிப்பது பற்றி அசின் சொல்கிறார். எனக்கு எல்லாமே அப்பாதான். சினிமா கால்ஷீட்களை அவர்தான் கவனித்து கொண்டார். என் கூடவே எப்போதும் இருப்பார். தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நான் சிரமத்துக்கு ஆளாகியுள்ளேன். அவர் இல்லாமல் எந்த புதுபடத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. கேரளாவுக்கு போய் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட முடிவு செய்து இருந்தேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. சினிமாவுக்கு வந்து முதல் தடவையாக தந்தை இல்லாமல் தனியாக பெங்களூர் சென்று வந்தேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மும்பை திரும்பியதுமே ஆஸ்பத்திரிக்கு ஓடோடி போய் தந்தையை பார்த்தேன். தந்தை உதவி இல்லாமல் என் வேலைகள், பாதிக்கப்பட்டு உள்ளன. என் சம்பந்தப்பட்ட விஷயங்களை யார் துணையுமின்றி நானே கவனித்துக் கொள்ள பழகி வருகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.

படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா

பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு. மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு
குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே? அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம். "அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம். பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும்,
பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்
யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை
பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".

25 ஏப்ரல் 2009

செல்வராகவனுடன் மோதலா? - ரீமா சென்

என்னுடைய ஒரு வருட கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக செல்வராகவனுடன் சண்டை போட்டேன் என்று வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என நடிகை ரீமா சென் கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' பட வெளியீடு, சிந்துபாத் கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிக்கும் இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன் துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு நாட்கள் நீண்டதால் அதில் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக ரீமாசென் அந்த ஒரு படத்திலேயே முடங்கினார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவரால் போக முடியவில்லை. நடிகைகளின் கேரியருக்கு தமிழில் ஆயுசு வெகு குறைவு என்பதால், கைநழுவிப்போன வாய்ப்புகளை நினைத்து ரீமா கலங்குவதாக தகவல் பரவியது. இதனால் செல்வராகவனுக்கும் ரீமா சென்னுக்கும் கடும் மோதல் எழுந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ரீமா சென் கூறுகையில், "ஆயிரத்தில் ஒருவன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம். இந்தியா முழுக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு செல்வராகவன் மடடுமே காரணமல்ல. இதற்காக நான் செல்வராகவனுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இன்னும் சில வாரங்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்துவிடும் என நம்புகிறேன்", என்ற ரீமா சென், விஷாலுடன் நடிக்கவிருந்த தீராத விளையாட்டுப் பிள்ளை வாய்ப்பையும் உதறிவிட்டாராம். "குறிப்பாகக் காரணம் என எதையும் சொல்ல விரும்பவில்லை. இந்தப்படம் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதனால் விலகிவிட்டேன்", என்றார் ரீமா.

பத்மஸ்ரீ விருதை உதறினார் பாரதிராஜா - திருப்பி அனுப்புகிறார்

சென்னை: மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பப் போவதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாரதிராஜா எதையும் எதிர்பாராதவன். எனக்கு நாற்காலி கனவு கிடையாது. `தமிழன்' என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது. இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. பிரபாகரனை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாக கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது. செயலில்தான் காட்ட தெரியும். அவரை ஜெயிக்க முடியாத காரணத்தால், ராஜபக்சேவுக்கு இந்திய அரசு கொல்லைப்புற வழியாக ஆயுதங்களை அனுப்பி ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. முழு முதல் குற்றவாளி மத்திய அரசுதான். உள்ளே போட்டாலும் கவலை இல்லை.. சோனியாவை விமர்சித்தால் தேச விரோத குற்றம் என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கி போட்டாலும் கவலை இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளை காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, எனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன் என்றார். சோனியா தான் சூத்திரதாரி-தாமரை: சினிமா பாடலாசிரியை தாமரை பேசுகையில், கலைஞர்கள் எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர்; நான் அப்படியில்லை; எதையும் வெளிப்படையாக பேசுவேன். தமிழ் ஒரு இனம்; மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்? இதைக் கேட்டால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்கின்றனர். சின்னதாகக் கூட உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போது "ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆட்சியிலிருப்பவர்கள் அப்படி பேச முடியாது'' என்று கருணாநிதி கூறுகிறார். முதல்வராக இருக்கும் கருணாநிதி "என்னால் முடியாது'' என்று சொல்லலாமா? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும். ஈழப் பிரச்னையை பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அமாவாசைக்கு மறுநாள். சோனியா தான் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என்றார். கவிஞர் புலமைப்பித்தன் பேசுகையில், ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்?. புறத்தே வெளுத்து அகத்தே கருத்துள்ள சோனியாவே சொல்லிவிடுங்கள் என்றார்.

உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ

இங்கிலாந்தைச் சேர்ந்த எப்.எச்.எம். இதழ் நடத்திய உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் போட்டியில், ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகி பரீதா பின்டோவும் இடம் பெற்றுள்ளார். பத்தாவது இடம் அவருக்குக் கிடைத்துள்ளது. பாடகி செர்லி கோல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த மாதம்தான் டாப் 5 ஹாலிவுட் செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ இடம் பெற்றார். இந்த நிலையில் உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் வரிசைக்கு அவர் முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர் மேகான் பாக்ஸ். ஆனால் இந்த ஆண்டு அவர் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது இடத்தை பாடகி செர்லி கோல் பெற்றுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு அழகி முதலிடத்தைப் பிடிப்பது கடந்த 3 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனிக்கு இந்தப் பட்டியலில் 40வது இடம் கிடைத்துள்ளது. உலகளவில் நடந்த கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வாக்களித்து இந்த அழகிகளைத் தேர்வு செய்துள்ளனராம்.

பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???

பிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே.... நயன்தாரா .........சந்திரமுகி, பில்லா. ஜெனிலியா.........சந்தோஷ் சுப்ரமணியம் சிம்ரன் ..............வாலி ஸ்ரேயா...................சிவாஜி ரீமா சென்.............. மின்னலே சினேகா..................வசூல் ராஜா திரிஷா.......................சாமி மீரா ஜாஸ்மீன்.........ரன் மேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா? நயன்தாரா..................... வில்லு ஜெனிலியா....................சச்சின் சிம்ரன்..............................உதயா ஸ்ரெயா..........................அழகிய தமிழ் மகன் ரீமா சென்.......................பகவதி சினேகா .........................வசிகரா திரிஷா ..........................ஆதி , குருவி மீரா ஜாஸ்மீன்............புதிய கீதை மேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது ஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்... எதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து..... அன்புடன்/ஜாக்கிசேகர்

23 ஏப்ரல் 2009

புரோட்டா சுட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட விந்தியா

கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார் நடிகை விந்தியா.கடந்த சட்டசபைத் தேர்தலில் விந்தியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகைகள் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து வருகிற லோக்சபா தேர்தலில் இவர்களில் பலர் பிரசாரத்திற்கு வர விரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டனர்.விந்தியாவும் நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்தும் ஒதுங்கியிருந்து வந்தார்.
இந் நிலையில் மீண்டும் அதிமுகவுக்கா தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.திருப்பூரில் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து திருப்பூர் நகரை வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்தார் விந்தியா.தனது பிரசாரம் குறித்து விந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலத்தில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். 22 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளேன்.எனது ஸ்டார் வேல்யூவை வைத்து நான் பிரசாரத்திற்கு வரவில்லை. அதிமுக சிறந்த கட்சி. அதன் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்தே பிரசாரம் செய்கிறேன்.விஜயகாந்த் சினிமாவில்தான் கேப்டன். நன்றாக சண்டை போடுவார். ஆனால் அரசியலில் அவர் கேப்டன் இல்லை. இன்னும் பல வருடம் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்னைகளை உணர்ந்து முதல்வர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும். உடனே முதல்வராக வேண்டும் என்றால் ஏற்க முடியாது.திருப்பூரில் அதிமுகவுக்கு சாதகமான நிலை உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக கூட செய்தி வந்திருக்கிறது.தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த ஊழல்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய உள்ளேன். காங்கிரஸ், பாஜவுக்கு மாற்றாக 3வது அணி ஆட்சி அமைப்பது அவசியம் என்றார் விந்தியா.சேலத்தில் புரோட்டா சுட்டு...இந் நிலையில் நேற்றிரவு சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் செம்மலைக்கு ஆதரவாக விந்தியா பிரசாரம் செய்தார். அம்மாபேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது அவர் குடை பிடித்துக் கொண்டு வீடு வீடாக சென்று செம்மலைக்கு வாக்கு சேகரித்தார்.பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர். உடனே விந்தியா அந்த கடைக்குச் சென்று மாவை தட்டி புரோட்டா போட்டார். கடையில் இருந்தவர்களிடம் வாக்கும் சேகரித்தார்.அந்த புரோட்டாவை சாப்பிட வாடிக்கையாளர்களிடையே பெரும் போட்டா போட்டி நடந்தது.விவாகரத்துக்கு விண்ணப்பித்த விந்தியா...!:இதற்கிடையே விந்தியா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளாராம்.கடந்த ஆண்டுதான் கோபியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சம்மதிக்காமலிருந்த கோபியின் குடும்பத்தார், பின்னர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.கோபி ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர்களது திருமணம் கேரளாவில் நடந்தது. திருமணமாகி ஓரு ஆண்டுக்குள் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டுவிட்டதாம் விந்தியாவுக்கு. இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளாரம்.இதுகுறித்து விந்தியா தரப்பில் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் பின்னர் பேசுவதாக விந்தியாவின் உதவியாளர் தெரிவித்தார்.பானுப்பிரியா குடும்பத்தினர் இதுகுறித்துக் கூறுகையில், வழக்கமாக எல்லா குடும்பங்களிலும் வரும் பிரச்சனைதான். விந்தியா அவசரப்பட்டு விட்டார். எங்களால் முடிந்த அளவு இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயன்றோம். ஆனால் விந்தியா விவாகரத்தில் உறுதியாக இருக்கிறார் என்றனர்.

அசின் வைரஸ்.. ஏவ்வ்வ்!

சினிமாவில் அசின் அறிமுகமாகற சீன்கள்லாம் கலர்ஃபுல்லாத்தானே இருக்கும். ஆனா.. 'அசினை பாப்பம்'னு ஆவலா கேரவான்ல உக்காந்திருந்த எனக்கு 'ஏ..வ்வ்வ்'ங்கிற ஒரு ஏப்பத்தோட அறிமுகமானார் அசின்!அசின் ஃபீவர் ஓவரா இருந்த சீஸன் அது. எடிட்டோரியல்ல ஆளாளுக்கு 'அசைன்மெண்ட் போறேன்'னு சொல்றதைக்கூட 'அசின்மென்ட்'னுதான் 'ஜொள்ளு'வாங்க.இப்படி பள்ளிக்கூட பாப்பா முதல் பல்லுப் போன தாத்தாவரை அத்தினிபேர் மனசிலும் பிசின் மாதிரி ஒட்டிக்கிட்டாங்க இந்த 'சித்தினி' வம்ச அசின்! கவர் ஸ்டோரிக்காக சந்திக்கப் போனேன். வாகினி ஸ்டுடியோவுல 'சிவகாசி' ஷ¨ட்டிங். ஸ்பாட்டுக்குப் போனா.. பஞ்சு மிட்டாய் கலர்ல பாவாடை தாவணி போட்டு அசின் விஜய்யை கொஞ்சிகிட்டிருந்தாரு.அசினோட அசிஸ்டண்ட் வந்து 'கேரவான்ல வெய்ட் பண்ணுங்க. மேடம் வந்துடுவாங்க!'னு சொல்ல உள்ள போயி ஜில்லுனு உக்காந்தேன். டோர் திறந்தது. 'அசின் வர்றாப்ல'னு ஆவலா எட்டி பாத்த எனக்கு.. 'தூர்வாராத கெணத்துல விழுந்து துருப்பிடிச்ச ஸ்பீக்கர்' சவுண்டுல ''ஏ..வ்வ்வ்''னு ஒரு ஏப்பம் மட்டுமே முதல்ல வர.. அதே செகண்ட்ல அசின் உள்ளே வந்தாங்க.''சத்தியமா அசின் குரல் இப்படி 'ட்ரிபிள் கரகரப்பா' இருக்காதே'னு யோசிச்சப்பதான் அடுத்த 'ஏ..வ்வ்வ்'வை அதே எஃபெக்ட்ல ஏவி விட்டபடி உள்ள வந்தாரு அசினோட அப்பா ஜோசப் தோட்டம்கல். மின்னலா என்னைப் பாத்து சிரிச்ச அசின்.. அப்படியே சன்னமா மலையாளத்துல அப்பாவைத் திட்ட ('ஏவ்'க்கு ஆப்பு!) ''ஓகே மோளே!''னு அவர் சிரிச்சு சமாளிச்சாரு. அப்பதான் ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். அசினுக்கு மீசை, தாடி வெச்சா.. அப்படியே அவங்க அப்பா! அவர் மழிச்சா அச்சுஅசலா அசின்!அசிஸ்டண்ட் ஆரஞ்சு ஜூஸ் தர வாங்கி கையில வெச்சுகிட்டு, ''உங்களப் பத்தி கேள்விப்படற நியூஸ் எல்லாமே ரொம்ப ஆச்சர்யப்படுத்தற மாதிரி இருக்கே?''ன்னேன். 'ஆ'னு அழகா ஆச்சர்யப்பட்ட அசின் ''அப்படியென்ன கேள்விப்பட்டீங்க! சொல்லுங்க ப்ளீஸ்''னாங்க.''அசினுக்கு எக்கச்சக்க பிஸினஸ் இருக்கு. உங்க பேர்ல ஒரு அணைக்கட்டே இருக்குன்னு நியூஸ் வருதே! உண்மையா?''னு கேட்டேன். 'பளிச்'னு சிரிச்ச அசின் ''நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இதுக்கான பதிலை நான் சொல்றதைவிட என் டாடி சொன்னா கரெக்டா இருக்கும்''னு சொல்லிட்டு 'டாடியை' பார்க்க.. தாடியை வருடிகிட்டே மீதியை அவர் சொன்னார்..''ஞான் வந்து.. தோட்டம்கல் பேர்ல எஸ்டேட், ஜூவல்லரி, சிட்ஸ் அன்டு இன்வெஸ்ட்மெண்ட், ரெடிமேட்ஸ், டிராவல்ஸ், ஹெச்.பி, ஐ.ஓ.சி, டீலர்ஷிப், டூரிஸ்ட் ஹோம், கேரளா ரோடு லைன்ஸ், வாட்ச் ஹவுஸ், நர்சரி, ஷாப்பிங் மால். (இத பார்ரா.. ஒரு பிசினஸ்கூட தமிழ்ல இல்ல!) இப்படி டஜன் கணக்கில் பிஸினஸ் பண்றோம்.'' மூச்சுவிடாமல் ஜோசப் சொல்ல.. மூச்சு வாங்கிச்சு எனக்கு.''பொதுவா எந்த நடிகருக்கு கம்பெனி குடுக்கலாம்னு யோசிக்கிற சில நடிகைகள் மத்தியில.. இத்தனை கம்பெனிகளை வெச்சிருக்கற ஒரே நடிகை நீங்கதான் போல!''னு நான் சொன்னதும் அசின், அப்பா ரெண்டுபேர் முகத்திலும் 'கதகளி' களிப்பு.ஆரஞ்சு ஜூஸை ஒரு 'சிப்' சிப்பலாம்னு எடுத்த நொடியில.. அசின் குறுக்கிட்டு ''இத்தனை கம்பெனிகளுக்கும் யார் எம்.டி. தெரியுமா? நான்தான்''னு குஷியா சொல்ல.. ''என்ட மோளே..!''னு மகளை உச்சிமோந்து ஜோசப் மலையாளத்தில் பறைய அசின் உருக.. ஃபீலிங்கில் கூலிங் போன ஜூஸை உறியாமலே வெச்சிட்டேன்.''சரி.. நிஜம்மாவே உங்க பேர்ல அணைக்கட்டு இருக்கா?''னு கொக்கியை போட்டேன். ''ஹைய்யோ''னு 'சிக்கிமுக்கி கல்லா' சிரிச்ச அசின் ''நீங்க நெனைக்கற மாதிரி பிரம்மாண்டமான டேம் கிடையாது அது. எங்க வீட்டுக்கிட்டே எங்க தேவைக்காக கட்டியிருக்க சின்ன டேம் அது!''னு தன்னோட கையால அவர் காட்டின சைஸைப் பாத்தா.. நம்ம வீட்டு தண்ணித் தொட்டி மாதிரி இருந்துச்சு.இப்படியாக அசினுக்கும், அப்பாவுக்கும் என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. 'இனி எங்க ஃபேமிலில நீங்களும் ஒருத்தர்'னு ரேஷன் கார்டுல பேர் சேர்க்காத குறையா பாசம் காட்டினாங்க.பேட்டி அச்சேறி.. 'குங்குமம்' கடைக்கு வந்திருச்சு. அட்டையை அலங்கரிச்சது அசின் படம்தான். ஆனா, கவர் ஸ்டோரியா வந்தது.. ''வைரஸ் நோய்களைப் பரப்பும் வாட்டர் பாக்கெட்''னு நான் எழுதின வேற ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!புக்கை பார்த்துட்டு அசின் அப்பா அலறியடிச்சு என் 'செல்'லுக்கு வந்தாரு.''எந்தா சாரே.. அட்டைல என் டாட்டர் ஃபோட்டோ போட்டுட்டு.. கீழே ''வைரஸ் நோய் பரப்பும்'னு ஏதோ வாட்டர் மேட்டர் போட்டிருக்கீங்க! டிவியில விளம்பரம், ஊரெல்லாம் போஸ்டர்! இப்படி பண்ணியாச்சே நீங்கள்? என் டாட்டர் ஃப்யூச்சர் என்னாகறது?''னு ரத்தக்கண்ணீர் வடிச்சாரு.''சார்.. வைரஸ் நோய்கள பரப்புறது வாட்டர் பாக்கெட்தான்! அசின் இல்ல சார்!''னு அவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.. தோட்டம்கல் 'வாட்டம்கல்'லாவே வருத்தப்பட்டாரு.அசின் வீட்டு ரேஷன்கார்டுல சேர்க்கப்படவேண்டிய என் பேரு இப்படி மோசம் போனதை நெனச்சு நீங்க சிரிச்சுராதீங்க ப்ளீஸ்!ஏ..வ்வ்வ்!

குஷ்பூவுக்கு சாதனைப் பெண்கள் விருது!!

நடிகை குஷ்பூ உள்பட 5 பேருக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கினார் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்.கிராமப் பகுதிகளில் வசிக்கும் கைவினைக் கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளை உரிய முறையில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்.உலக மகளிர் தினத்தையொட்டி இந்த நிறுவனம் சார்பில் பெண் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருள் கண்காட்சி மற்றும் உலக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கண்காட்சியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், விக்டோரியா நிறுவனத்தின் தலைவருமான மோகன் தொடங்கி வைத்தார். 'இந்து' நிர்வாக இயக்குனர் என்.முரளி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 பெண்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகை குஷ்பூவுக்கும், கல்வித்துறையில் சாதனை படைத்ததற்காக டாக்டர் மீனா முத்தையாவுக்கும், கர்நாடக இசையில் சாதனை படைத்ததற்காக வசுந்தரா ராஜகோபாலுக்கும், சமூக சேவை பணியில் ஈடுபட்டதற்காக ரஷியாவை சேர்ந்த அனாஸ்டிசியா ஸ்மித்துக்கும், கிர்யோமிடனகாவுக்கும் (ஜப்பான்) இந்த விருதுகள் வழங்கப்பட்டன.விருதுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய நடிகை குஷ்பு, பெண்கள் தங்கள் திறமைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றினால் சாதனைகள் படைக்கலாம் என்றார்.

பிராக்களை அவிழ்க்கும் போட்டி: கின்னஸ் சாதனையில் கலக்கிய நிருபர்

மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள், எதையும் நேரிடையாக செய்பவர்கள். பெண்களைப் பார்த்தாலே ‘அல்லு’ விடும் நம் ஆண்களுக்கு இடையே, கின்னஸ் உலகச் சாதனைக்காக, பெண்களின் பிராக்களை அவிழ்க்கும் போட்டியில் கலந்துகொண்டு கலக்கிவிட்டார் சன் பத்திரிகை நிருபர் நிக் பிரான்சிஸ். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்துகொள்ள சன் பத்திரிகை நிருபர் நிக் பிரான்சிஸ்க்கு அழைப்பு விடப்பட்டது. அவரும் சும்மா ஜொள்ளு விட்டப்படியே ஓகே சொன்னார். இதற்கென்றே மாடல் பெண்கள் தங்கள் முதுகைக் காட்டிக்கொண்டு, நிக்கின் கைவண்ணத்தைக் காண காத்திருந்தார்கள். அவரும் சடசடவென அவிழ்க்கத் தொடங்கினார். ஒவ்வொன்றாக அவிழ, அவிழ பெண்கள் வெட்கப்பட்டபடியும், கேலி சிரிப்போடும் மாறிக் கொண்டே இருந்தார்கள். மூச்சு வாங்கிக்கொண்டே தன்னுடைய கைகளுக்கு வேலை கொடுத்த நிக், கடைசியில் 60 விநாடிகளில் 35 பிராக்களைத்தான் அவிழ்த்தார். ஆனால் தற்போதைய சாதனை 60 விநாடிகளில் 69 பிராக்களை அவிழ்த்ததுதான்(சிறப்புப் பயிற்சி ஏதாவது எடுத்திருப்பாங்களோ?). ஒரு பிராவை அவிழ்க்க ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தையே எடுத்திருக்கிறார் இந்தச் சாதனையாளர். கின்னஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மார்கோ பிரிக்காட்டி நிக்குக்கு சில டிப்ஸ் கொடுத்தார் (ஊக்கை அவிழ்க்கத்தான்).

இந்தச் சாதனையைப் புரியும்வரை நீங்கள் பெண்களின் முதுகுப் பின்னாலே இருக்கவேண்டும் (எப்பவும் ஆண்கள் செய்வதுதானே). செய்கிற காரியத்தைச் சுத்தமாச் செய்யனும். அதாவது, ஒரு பிரா ஊக்கை சரியாக அவிழ்த்தப் பிறகே அடுத்த பிரா நோக்கி உங்கள் கை நீள வேண்டும் (ஆஹா, என்ன ஒரு ரூல்ஸ்ங்க!).

நம்மூர்ல இந்தப் போட்டியை வச்சா இரவில்தான் வைக்கவேண்டும். ஏன்னா, அதுதான் நம்மூர் ஆண்களுக்கு தோதான நேரம். என்ன சொல்றீங்க?

21 ஏப்ரல் 2009

பிரவுசருக்கு தேவையான ஆட்-ஆன்( Add ons) தொகுப்புக்கள்

பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்–ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு டிக்ஷனரியை இதன் மூலம் பயன்படுத்த முடியும். உங்களின் பிற இணையப் பக்கங்களில் உள்ள அக்கவுண்ட்களை அங்கு செல்லாமலே பெற்றுக் காண முடியும். இவற்றில் சிலவற்றைச் சோதனை செய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் சிலவற்றைப் பயனுள்ளதாகப் பார்த்தோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்புகளுக்கு www.ieaddons.com என ஒரு தனித் தளமே இயங்குகிறது. இனி இந்த வசதிகளையும் அவற்றைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு கிடைக்கும் தள முகவரிகளையும் காணலாம். ஆன் தொகுப்புகளை எப்படி கையாள்வது? 1. பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளைவைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம். 2. இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும். 3. பயர்பாக்ஸ் பதிப்பு 3ல், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும்.அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது. 1. தேவையான தகவல்கள், விளக்கங்கள் பெற இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கிடைக்கும் தளம் ஒன்றில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் www.answers.com தளத்தை அணுகி அந்த சொல் சார்ந்த விளக்கங்களையும் கூடுதல் தகவல்களையும் பெற்றுத் தரும். கிடைக்கும் முகவரி : இங்கே 2. விளம்பரங்களைத் தடுக்க திடீர் திடீரென எழும் விளம்பரங்கள் நம் இன்டர்நெட் பிரவுசிங் வேகத்தைக் கெடுக்கும். மிக அக்கறையுடன் ஒரு தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்; அப்போது திடீரென ஒரு பேனர் விளம்பரம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தகவல்களை மறைக்கும். இந்த குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற் றைத் தடுக்கும் பணியை மேற்கொள்கிறது. கிடைக்கும் முகவரி: இங்கே 3. இன்டர்நெட்டுக்கான காலர் .டி தொலைபேசிகளில் நம்மை யார் அழைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் வசதி காலர் ஐ.டி. வசதியாகும். இதே போல இன்டர்நெட் சைட்டுக்கு உண்டா? நாம் பார்க்கும் தளங்கள் என்ன என்று நமக்குத் தெரியாதா? என்கிறீர்களா? ஒரு சில தளங்கள் நம்மை அந்த தளத்தில் பதியச் சொல்லி நம் பெயர், பிறந்த நாள், முகவரி, பிடித்தது மற்றும் பிடிக்காதது போன்ற தகவல்களை எல்லாம் தரச் சொல்கின்றன. இவற்றைப் பெறும் இந்த தளங்களை இயக்குபவர்கள் யார்? அவர்களின் முகவரி என்ன? என்று நாம் அறிந்து கொள்ள ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 க்கான ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் பிஷிங் பில்டரும் உள்ளது. இது கிடைக்கும் முகவரி : இங்கே 4. பல டவுண்லோட் பைல்கள் ஒரே நேரத்தில் பல பைல்களை டவுண்லோட் செய்திடுகையில் இந்த ஆட் ஆன் புரோகிராம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உதவுகிறது. டவுண்லோட் ஆகும் பைல்களை தொகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கிறது. இதன் மூலம் பைல்கள் வேகமாக டவுண்லோட் செய்யப்படுகின்றன. மேலும் இதில் வெப் பேஜ் ஒன்றில் லிங்க் செய்யப்பட்டுள்ள அனைத்து பைல்களையும் டவுண்லோட் செய்திடும் வசதியும் கூடுதலாகக் கிடைக்கிறது. இதன் முகவரி : இங்கே 5. எந்த வகையில் காப்பி ஒரு பைலை இணையப் பக்கத்திலிருந்து சேவ் செய்கையில் அதனை எச்.டி.எம்.எல். ஆகக் காப்பி செய்திட வேண்டுமா அல்லது டெக்ஸ்ட்டாக காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷனைக் கொடுத்து காப்பி செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு வசதியைத் தருகிறது. குறிப்பாக சில தளங்களில் உள்ள எச்.டி.எம்.எல். பைலை அந்த பார்மட்டிங் சங்கதிகள் எல்லாம் இல்லாமல் டெக்ஸ்ட் பைலாக வேர்ட் டாகுமெண்ட்டில் பதிந்திட இது உதவுகிறது. இது கிடைக்கும் தள முகவரி : இங்கே 6. பிரவுசரில் வாய்ஸ் கமாண்ட் இணையத்தில் பல பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென முன் பார்த்த பக்கங்களுக்கோ அல்லது பின்னர் பார்த்த பக்கங்களுக்கோ செல்ல வேண்டியுள்ளது. மவுஸைப் பிடித்து கிளிக் செய்யாமல் கம்ப்யூட்டருடன் இணைந்த மைக் மூலம் Back, Forward, Refresh எனச் சொல்லி அதன் மூலம் நாம் விரும்பும் பக்கங்களுக்குச் சென்றால் எவ்வளவு எளிது. இந்த வாய்ஸ் மூவிங் வசதியை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் முகவரி: இங்கே 7. பிரவுசரிலேயே மியூசிக் பிளேயர் ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற ஆடியோ மற்றும் வீடியோ இயக்கும் மீடியா பிளேயர்களை பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்தவாறே இயக்கினால் எவ்வளவு எளிது. தனியே வேறொரு விண்டோ சென்று இந்த பிளேயர்களை இயக்குவது சுற்று வழிதானே. இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஒரு ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இதன் முகவரி: இங்கே 8. பார்மட் கன்வெர்டர் இணையத்தில் பைல்கள் பலவிதமான பார்மட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றை நம் பெர்சனல் கம்ப்யூட்டர் அடையாளம் கண்டு இயக்கும் வகையில் பல வேளைகளில் மாற்ற வேண்டியுள்ளது. பல வீடியோ, படம் மற்றும் டாகுமெண்ட் பார்மட்டுகள் இதில் கிடைக்கின்றன. இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி : இங்கே 9.தேடுதல் தளங்கள் படங்களாக கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்கள் வழி தேடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். உங்களுக்கான விடைகள் கொண்ட தளங்களின் முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். இவற்றிற்குப் பதிலாக அந்த தளங்களின் முகப்புகள் சிறிய தம்ப்நெயில் படங்களாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்த உதவியை ஒரு ஆட் ஆன் தொகுப்பு கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்களுக்கு மட்டும் தருகிறது. இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி: இங்கே 10. பார்த்தது பார்த்தபடி மூடித் திரும்பத் தர: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென பிரவுசரை மூட வேண்டியுள்ளது. இன்னும் சில தளங்களை முழுமையாகப் பார்க்கவில்லை. ஒவ்வொன் றாக மூடிவிட்டால் பின் மீண்டும் வெப் சைட்டின் அந்த பக்கம் எப்படிப் போவது? என்று கலங்குகிறீர்களா? ஒவ்வொன்றாக மூடுவதும் சிரமமாக உள்ளதா? இந்த ஆட் ஆன் தொகுப்பு இணைத்துக் கொண்டால் அனைத்து தளங்களையும் மூடும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் மீண்டும் பிரவுசர் திறக்கப்படுகையில் அதே பக்கத்தில் அனைத்து தளங்களையும் திறந்து தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி: இங்கே

ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க முயலும் தந்தை!

இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை. ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறிவிக்கப்பட்டதும் மராட்டிய அரசு வீடு தருவதாகச் சொன்னது. கேரள நிறுவனம் ஒன்று ப்ளாட் தந்தது. இவ்வளவு பரிசுகளைக் குவித்தாலும் ஸ்லம்டாக் சிறுவர்களின் வாழ்க்கை தாராவியைத் தாண்டவில்லை. இந்த நிலையில்தான் தங்கள் வறுமையைப் போக்க, ரூபினாவை விற்க அவரது பெற்றோரே முடிவு செய்துள்ள விவரம் தெரியவந்தது. யாராவது வசதியான அரபு ஷேக் கேட்டால் பெண்ணை நல்ல விலைக்குத் தள்ளிவிட அவர்கள் முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பத்திரிகை ஒன்றின் சில நிருபர்கள் ஷேக் வேடத்தில் போய் ரூபினா அலியின் தந்தையைத் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளனர். மும்பை நட்சத்திர ஓட்டலில் வைத்து ரூபினா அலியின் தந்தை ரபீக், சித்தப்பா முகைதீன், மாமா ராஜனுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் ரூ.37 லட்சம் பேசியவர்கள், பின்னர் விலையை கிடுகிடுவென உயர்த்தி ரூ.1.5 கோடியில் நின்றிருக்கிறார்கள். 'ரூபினா ஒரு ஆஸ்கர் குழந்தை. அவளுக்கு இதைவிட அதிகமாகத் தரலாம் நீங்கள்' என்று 'சரக்கின்' மதிப்பு பற்றி பெருமையாக வேறு கூறினார்களாம் ரூபினாவின் பெற்றோர். எதற்காக இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "படத்தில் காட்டப்பட்ட வறிய நிலையில்தான் நாங்கள் இன்னும் இருக்கிறோம். அரசுகள் அறிவித்த எந்த சலுகையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. வெறும் ரூ.150 கூலியில், எழு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ரூபினாவின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்தோம்" என்று ரூபினாவின் தந்தை ரபீக் தெரிவித்திருந்தார். அதிர்ச்சி-மறுப்பு இவை அனைத்தையும் அந்தப் பத்திரிகை படங்களுடன் வெளியிட்டிருந்தது. அல் ஜஸீரா டிவியும் இதனை பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நேற்று வரை மறுப்பு தெரிவிக்காமலிருந்தார் ரபீக். என் மகளின் நலனுக்காகத்தான் இதைச் செய்தோம் என்றே அவர் கூறியிருந்தார். இதனால் மும்பை போலீஸார் ரூபினா மற்றும் அவரது தந்தைக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அடுத்த நிமிடமே எல்லாம் தலைகீழாகிவிட்டது. "என் மீது அவதூறு பரப்புவதற்காக தீட்டப்பட்ட சதி இது. என்னிடம் ஒரு ஷேக்கின் மனைவி தத்துக் கேட்டது உண்மைதான், ஆனால் அதற்கு தான் மறுத்துவிட்டேன். அந்த சந்திப்பு உண்மைதான். ஆனால் என் மகளை பேரம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது என் குரல் அல்ல..." என்றெல்லாம் கூறியுள்ளார். இதை வைத்து இன்னொரு ஸ்லம்டாக் எடுக்கலாம் போலிருக்கே!

மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை

இது அரசியல் கூட்டமோ,கட்சி மாநாடோ இல்ல இது மானாட மயிலாட பார்த்தவன் ஒருவனின் புலம்பல்....(அந்நியன் ஸ்டைல்ல.. :))) ) நேற்று ஞாயிற்றுக்கிழமை..(19/04/2009)..IPLல்ல தென்னாபிரிக்காவுக்கு மாத்தினதும் மாத்தினான் அத நம்மூர் டீவி எதிலயும் போட மாட்டேங்குறான் என்ற கடுப்புல வந்து இருந்தேன்.. முன்னாடி மேசைல ரிமோட் இருந்திச்சு.. போட்டு பாக்கலாம்ன்னு எடுத்து போட்டேன்.. அப்பதான் போட்டதும் வந்தது கலைஞர் டீவி... மானாட மயிலாட தான் போய்கிட்டு இருந்திச்சு..சரி இது வரைக்கும் பாத்ததில்ல இன்னைக்காவது பாப்பமேன்னு போட்டேன்..(அட நிஜமா தாங்க..:))) ) முன்னால வந்து நின்னுச்சு காம்பேர் “டா”வும் காம்பேர் “டீ”யும்(அதாங்க அந்த 2 பேர்).. முதல்ல அந்த “டா” கத்திச்சு... “அடுத்து நாம பாக்க போறது ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வரியாவோட பர்ஃபாமன்ச..”என்றது... இருவரும் வந்து ஆடினர்... ஏதோ திருவிழா ரவுண்டாமாம்...பரவாஇல்லை சுமாராகத்தான் ஆடினார்கள் (பொய் சொல்ல கூடாதில்ல..) திருப்பியும் ரெண்டு காம்பேரும் வந்தார்கள்...திருப்பியும் அந்த “டா” கத்திச்சு.. “ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வையாவோட பர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே ஒரு திருவிழாவை பாத்த மாதிரி இருந்திச்சு”ன்னான்... உடனே அந்த பொண்ணு வாங்கி (ஐஸ்வரியா) “இன்னும் பர்ஃபார்மன்ஸ் முடியல “ன்னு சொல்லீட்டு திருப்பியும் சாங்க போட்டுட்டு ஒரு 1 நிமிஷம் ஆடிச்சு... திருப்பியும் “டா” வாங்கி “இப்ப தான் நிஜமான திருவிழா முடிஞ்சிருக்கு...கலா மாஸ்டர் நீங்க சொல்லுங்க “என்றான்.. மாஸ்டர் மைக்க வாங்கி “இன்னும் முடியல..ன்னுட்டு இதோ நானும் வரேன்”என்ற்றாங்கோ... அவங்களும் அங்க போய் திருப்பியும் ஒரு நிமிஷம் ஆடி முடிச்சுட்டு.. குஷ்புவ பாத்து ”இன்னும் முடியல ’குஷ்’(குஷ்ஷாமாம்..) இங்க வா”என்றார்.. குஷ்பு கூடவே ரம்பாவும்(எங்க தன்னையும் திருப்பி கூப்பிட வைக்காம :))) ) அங்க போய் மறுபடியும் ஒரு நிமிஷம் ஆடி முடித்தனர்...(இத பாத்து முடிக்கவே ’ஷபா முடியல’).. முடிஞ்சாச்சா..இந்த முறை “டீ” வாங்கி ”கலா மாஸ்டர் இப்ப சொல்லுங்க எப்பிடி இவங்களோட பர்ஃபார்மன்ஸ்???” என்றது... கலா மாஸ்டர் “ரஞ்ஜித் பின்னீட்டடா...ஸ்ஸூப்பர்ப்.., ஸுப்பர்ப்.., ஸூப்பர்ப்..என்னோட மார்க்ஸ் 20”என்றார்..(பாராட்ட தான் வேணும் ஆனா இது கொஞ்சம் ஓஓஓவர் தானே???) பிறகு “டா” வாங்கி “குஷ்பூ மேடம் நீங்க சொல்லுங்க”என்றான்.. ‘குஷ்’ மைக்க வாங்கி “ ஐசூ வாட்ட எஸ்ப்பரஷன்??..’உம்மா’ என்றார்..(என்னாத்திது???) மை மார்க்ஸ் ஆல்சோ 20”என்றார்..இவரோட பங்குக்கு வெளுத்து வாங்கீட்டு போக ”டீ” அடுத்து ”ரம்பா மேடம் நீங்க சொல்லுங்க”ன்னுச்சு... ரம்பா வாங்கி “அவங்க சொன்னாப்பிறகு நான் என்ன சொல்லுறது என்னோட மார்க்ஸும் 20”என்றார்..(இதுலயும் காப்பி அடிக்கிற பழக்கம் போகவில்லயா???).. இதுக்கு பிறகு என் வாழ்க்கையிலேயே இத பாக்குறது இல்லன்னு முடிவு பண்ணி டீவியயே ஆஃப் பண்ணீட்டேன்.. என் சோக கதைய கேட்டுடீங்க இல்ல??? இனிமேல் இத பாக்குற நோக்கம் இருந்தால் அத கைவிடுவதே நல்லது... :))) ஓக்கே... நான் இதுக்கு ரூம் போட்டு ஃபீல் பண்ணனும் .. நான் வரேன்..

டோணி-காதல்- கடுப்பில் லஷ்மி ராய்

தனக்கும் டோணிக்கும் காதல் என்று கூறுவது முட்டாள்தனமானது. நான் அவரது தோழி மட்டுமே என்று கூறியுள்ளார் லட்சுமிராய். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணிக்கும் தனக்கும் காதல் என்று வரும் செய்திகளை ஆரம்பத்தில் மறுக்காமல் சிரித்து மழுப்பி வந்தார் லட்சுமி ராய். ஆனால் இப்போது இந்த செய்திகளை கடுமையாக மறுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், டோனியுடன் என்னை இணைத்து புதிது புதிதாக புரளிகள் கிளம்புகின்றன. ஆரம்பத்தில் இந்தச் செய்திகள் எனக்கு சிரிப்பாகவும், பின்னர் சலிப்பாகவும் இருந்தன. இப்போது இவற்றைப் படித்தால் கோபமாக வருகிறது. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். டோனியும் நானும் நட்பாக பழகுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் காதலிக்கிறோம் என்பது முட்டாள் தனம், என்று கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளைக் காண ஆரம்பத்தில் தென் ஆப்ரிக்கா போகும் முடிவிலிருந்தாராம் லட்சுமி ராய். ஆனால் இப்போது முடிவை மாற்றிக் கொண்டாராமா. தமிழில் இப்போது வாமணன், நான் அவனில்லை-2, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களில் நடிக்கும் லட்சுமிராய், பகுஜன் சமாஜ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளார்.

ICL ற்கு ICC ன் அங்கீகாரம் மறுப்பு

ஒரு புறம் IPL இந்தியாவின் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் ICL-Indian Cricket League மேலும் விவகாரத்திற்கு உள்ளாகியிருக்கிறது. 18.04.2009 சனிக்கிழமை ஐ.பி.எல் துவங்கிய அதே நாள் ஐ.சி.எல் ற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.என்றாலும் இந்த முடிவை எதிர்த்து ஐ.சி.எல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடும் என தெரிகிறது. உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவரான கபில்தேவ் பல நாடுகளின் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைக் கொண்டு வடிவமைத்த ஐ.சி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் தான் ஐ.பி.எல் துவங்குவதற்கான காரணம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து இன்றும் நிலவுகிறது . ஆனால் லலித் மோடி, ICL துவங்குவதற்கு முன்னரே IPL குறித்து கனவு கண்டதாக கூறுகிறார். (உண்மை அவருக்கே வெளிச்சம்) ஐ.சி.எல் ல் நியூசிலாந்தின் க்ரிஸ் கெய்ன்ஸ்,ஷேன் பான்ட், பாகிஸ்தானின் இன்சமாம்,ஆஸியின் டேமியன் மார்ட்டின், இயன் ஹார்வி போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடும் படியானது ஏற்கெனவே ஐ.சி.எல் ற்காக ஆடி வரும் ஆட்டக்காரர்களை பி.சி.சி.ஐ தேசிய அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது. மாறாக நியூசிலாந்து,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை போன்ற கேவலமான செயலை செய்வதில்லை.அதோடு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிக வன்மையாக கண்டிக்கவும் செய்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள இளம் வீரர்களைக் கண்டெடுப்பதற்காக IPL தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது உள்ள IPL ன் அணிகளைப் பார்த்தால் குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து இடம் பெற்றிருப்பது ஒன்று அல்லது இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் மட்டுமே. உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைச் சொல்லலாம்.பத்ரிநாத்,பாலாஜி மட்டுமே பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்கள்.மும்பை அணிக்கு எதிராக பத்ரியும்,அஷ்வினும் மட்டுமே ஆடினார்கள். இவர்களில் அஷ்வின் மட்டுமே புதியவர் மாறாக ஐ.சி.எல் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கடந்த சீசனில் 8தமிழக ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.இதில் பெரும்பாலானோர் புதியவர்களே.ஐ.சி.எல் ன் முதல் சீசனின் சாம்பியனும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தான். IPL மூலம் புதிய இளம் வீரர்களை கண்டெடுக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே உள்ளது.பணத்தை மட்டுமே குறி வைத்து அதோடு கவர்ச்சியையும்,அரைகுறை ஆடை அணிந்த மங்கைகளையும் மட்டுமே ஊக்குவிக்கிறது ஐ.பி.எல். இளம் ஆட்டக்காரர்களை ஊக்குவிக்கும் ICL ற்கு இனி நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்குமா என பார்க்கலாம்.ஐ.பி.எல்லை விட சிறந்த நோக்கம் கொண்டது ஐ.சி.எல் என்கிறேன் நான்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

(20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து 20-20 ஆட்டங்களிலிருந்து விலகியிருந்த லிட்டில் மாஸ்டர் சச்சினும் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணமோ?)

19 ஏப்ரல் 2009

மும்பை இந்தியன் அணி வெற்றி

lankasri.comகேப்டவுனில் நடைபெற்ற முதல் .பி.எல். போட்டியில் தோனி தலைமைசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சச்சின் த்லைமை மும்பை இந்தியன் அணிரன்களில் வீழ்த்தி முதல் .பி.எல். போட்டியை வென்றது. வெற்றி பெறத் தேவையான 166 ரன்களை எதிர்த்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. மும்பை இந்தியன் அணியின் லஷித் மலிங்கா 4 ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமேகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள்கொடுத்து அபாய வீரர் பிளின்டாஃப் விக்கெட்டை கைப்பற்றினார் இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேத்யூ ஹெய்டன் அதிகபட்சமாக 44 ரன்களையும், தோனி 36 ரன்களையும் எடுத்தனர். 19

ஐபிஎல் : நடப்பு சாம்பியனை துவம்சம் செய்தது பெங்களூர் அணி

PDF Print E-mail
Saturday, 18 April 2009 23:58

கேப்டவுன் : நடப்பு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் சுருட்டி, 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி.

கேப்டவுனில் இன்று நடந்து முடிந்த இரண்டாவது ஐபிஎல் 2009 போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில், 134 ரன்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சால் நிலை குலைந்து போனது.

அந்த அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்களையே எடுத்தது.

இதுவே, ஐ.பி.எல். போட்டிகளில் ஓர் அணி எடுத்த மிகக் குறைந்த ரன்கள் ஆகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாண்டர்ஸன், யூசுப் பதான் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பெங்களூர் ராயல்ஸ் சாலஞ்சர்ஸ் தரப்பில், அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், பிரவிண் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக, பீட்டர்சன் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

துவக்க ஆட்டக்காரர் ரைடர் பூஜ்ஜியத்தில் வெளியேற, அடுத்த பந்திலேயே டெய்லர் அதே பூஜ்ஜிய ரன்களில் பெவிலியன் திரும்பினார். உத்தப்பாவும் மூன்றே ரன்கள் மட்டுமே எடுத்தார். பீட்டர்சன் 30 பந்துகளில் 32 ரன்கள் என்ற பொறுப்புணர்வுடன் விளையாடி ஆட்டமிழந்தார்.

தனக்கு இணையாக இருந்து விளையாடும் சக வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே வெளியேற, பவுலர்களை இணையாக வைத்துக் கொண்டு அதிரடியாக ரன் குவித்தார் டிராவிட்.

கடைசி ஓவரின் 4-வது பந்து வரை களத்தில் இருந்த அவர் 48 பந்துகளைச் சந்தித்து 66 ரன்களைக் குவித்து ஓரளவு சமாளிக்க கூடிய அளவிலான இலக்கை எட்ட வழிவகை செய்தார்.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ்சின் மோசமான ஆட்டத்தால், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஐ.பி.எல். சாம்பியன் அணியான வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, கடந்த முறை கடைசி இடத்துக்கு ஒரு படி மேலே இருந்த பெங்களூர் அணி துவம்சம் செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, இன்று நடந்து முடிந்த முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கணினியில் உள்ள ஹார்டுவேர்களை "இலவசமாக" அப்டேட் செய்ய உதவும் மென்பொருள்?

மது கணினி வேகமாக இயங்க வேண்டுமென்றால் கணினியில் இருக்கும் ஹார்டுவேர்களுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் புதிய அப்டேட்டுகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட வேண்டும்.அப்போது தான் நமது கணினி வேகமாக இயங்கும்,நாமும் வேலைகளை விரைவாக முடிக்க முடியும். இந்த ஹார்ட்வேர்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள ஒரு இணையதளம் இலவச மென்பொருளை கொடுத்து நமக்கு உதவி செய்கிறது, சரி இலவசமாக நமக்கு அப்டேட் தருவதால் அவர்களுக்கு என்ன பயன்? என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் தரும் மென்பொருளை நமது கணினியில் நிறுவி ரன் செய்யும் போது இடையில் அவர்கள் வெளியிடும் ஒரு சிலவிளம்பரங்களை நாம் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான்! அவர்களுக்கு விளம்பர வருமானம் லாபம், நமக்கு இலவச "அப்டேட்" லாபம். அந்த விளம்பரங்களை கிளிக் செய்யாமலும் அப்டேட் செய்யலாம். அப்படி செய்தால் குறிப்பட்ட காலத்திற்கு பிறகு இலவசமாகத்தருவதை நிறுத்தினாலும் நிறுத்தலாம்.அதனால் விளம்பரத்தை 'கிளிக்' செய்து விடுவது நமக்கு நல்லது தானே? அந்த இணையதளத்தின் முகவரி கீழே: www.radarsync.com இந்த தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்

இன்னலில் ஈழத் தமிழர்கள-பிறந்த நாளை ரத்து செய்தார் அஜீத்

ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. வரும் மே 1 ந் தேதி எனது பிறந்தநாள். இதையொட்டி எனது ரசிகர்கள் அந்நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி. நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன். மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன். மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் Firefox browser ன் tab னை வண்ணமயமாக்குங்கள்

Change the Active and Inactive tab color in Mozilla Firefox

உலகத்தில் அதிகமானோரால் பயன்படுத்தக்கூடிய browser, Mozilla Firefox ஆகும், அதில் Tabbed Browsing ஒரு மிகவும் முக்கியமான ஒன்று, இது நமது browsing வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது. இதில் inactive tab அதாவது பயன்பாட்டில் இல்லாத tab கள் மிகவும் மங்கலாக இருக்கும், இதனை நாம் வண்ணமையாக மாற்றலாம், எப்படி என்று கேட்கிறீர்களா? ஜோரா படிங்க கீழ. உங்கள் கணிப்பொறியில் கிழ்கண்ட இடத்திற்கு செல்லுங்கள்.

Start-> Run –> type Application Data->Mozilla->Firefox->Profiles->(some random number).default->chrome

அங்கே இருக்கும் userChrome-example.css இந்த பெயர் கொண்ட file ஐ userchrome.css பெயர்மாற்றம் செய்யுங்கள்.

userchrome.css அதாவது __ என்ற file ஐ userchrome.css என்று மாற்றுங்கள்

பின்னர் பெயர் மாற்றம் செய்த file ஐ Open செய்து கிழ்கண்ட code னை copy செய்து save செய்யவும்.

/*change color of active tab*/ tab{ -moz-appearance:none !important; }

tab[selected="true"]{ background-color: rgb{222,218,210} important; color:black !important; /*tab font color/* } /*change color of normal tabs*/ tab:not([selected="true"]){ background-color: rgb(13,141,234) !important; color:white !important; /*tab font color/* }

சாவே செய்தபின் உங்கள் Firefox Browser ஐ Open செய்து பாருங்கள், வித்தியாசத்தை காணுங்கள்.

Adding colors in inactive and active tabs of mozilla firefox using userchrome.css

அந்த code ல் rgb என்ற வண்ண நிறத்தின் எண்ணை மாற்றுவதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த நிறத்தை மாற்றலாம்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com