பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்–ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு டிக்ஷனரியை இதன் மூலம் பயன்படுத்த முடியும். உங்களின் பிற இணையப் பக்கங்களில் உள்ள அக்கவுண்ட்களை அங்கு செல்லாமலே பெற்றுக் காண முடியும்.
இவற்றில் சிலவற்றைச் சோதனை செய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் சிலவற்றைப் பயனுள்ளதாகப் பார்த்தோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்புகளுக்கு www.ieaddons.com என ஒரு தனித் தளமே இயங்குகிறது. இனி இந்த வசதிகளையும் அவற்றைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு கிடைக்கும் தள முகவரிகளையும் காணலாம்.
ஆன் தொகுப்புகளை எப்படி கையாள்வது?
1. பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளைவைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.
3. பயர்பாக்ஸ் பதிப்பு 3ல், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும்.அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது.
1. தேவையான தகவல்கள், விளக்கங்கள் பெற
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கிடைக்கும் தளம் ஒன்றில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் www.answers.com தளத்தை அணுகி அந்த சொல் சார்ந்த விளக்கங்களையும் கூடுதல் தகவல்களையும் பெற்றுத் தரும்.
கிடைக்கும் முகவரி : இங்கே
2. விளம்பரங்களைத் தடுக்க
திடீர் திடீரென எழும் விளம்பரங்கள் நம் இன்டர்நெட் பிரவுசிங் வேகத்தைக் கெடுக்கும். மிக அக்கறையுடன் ஒரு தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்; அப்போது திடீரென ஒரு பேனர் விளம்பரம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தகவல்களை மறைக்கும். இந்த குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற் றைத் தடுக்கும் பணியை மேற்கொள்கிறது.
கிடைக்கும் முகவரி: இங்கே
3. இன்டர்நெட்டுக்கான காலர் ஐ.டி
தொலைபேசிகளில் நம்மை யார் அழைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் வசதி காலர் ஐ.டி. வசதியாகும். இதே போல இன்டர்நெட் சைட்டுக்கு உண்டா? நாம் பார்க்கும் தளங்கள் என்ன என்று நமக்குத் தெரியாதா? என்கிறீர்களா? ஒரு சில தளங்கள் நம்மை அந்த தளத்தில் பதியச் சொல்லி நம் பெயர், பிறந்த நாள், முகவரி, பிடித்தது மற்றும் பிடிக்காதது போன்ற தகவல்களை எல்லாம் தரச் சொல்கின்றன. இவற்றைப் பெறும் இந்த தளங்களை இயக்குபவர்கள் யார்? அவர்களின் முகவரி என்ன? என்று நாம் அறிந்து கொள்ள ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 க்கான ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் பிஷிங் பில்டரும் உள்ளது.
இது கிடைக்கும் முகவரி : இங்கே
4. பல டவுண்லோட் பைல்கள்
ஒரே நேரத்தில் பல பைல்களை டவுண்லோட் செய்திடுகையில் இந்த ஆட் ஆன் புரோகிராம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உதவுகிறது. டவுண்லோட் ஆகும் பைல்களை தொகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கிறது. இதன் மூலம் பைல்கள் வேகமாக டவுண்லோட் செய்யப்படுகின்றன. மேலும் இதில் வெப் பேஜ் ஒன்றில் லிங்க் செய்யப்பட்டுள்ள அனைத்து பைல்களையும் டவுண்லோட் செய்திடும் வசதியும் கூடுதலாகக் கிடைக்கிறது.
இதன் முகவரி : இங்கே
5. எந்த வகையில் காப்பி
ஒரு பைலை இணையப் பக்கத்திலிருந்து சேவ் செய்கையில் அதனை எச்.டி.எம்.எல். ஆகக் காப்பி செய்திட வேண்டுமா அல்லது டெக்ஸ்ட்டாக காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷனைக் கொடுத்து காப்பி செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு வசதியைத் தருகிறது. குறிப்பாக சில தளங்களில் உள்ள எச்.டி.எம்.எல். பைலை அந்த பார்மட்டிங் சங்கதிகள் எல்லாம் இல்லாமல் டெக்ஸ்ட் பைலாக வேர்ட் டாகுமெண்ட்டில் பதிந்திட இது உதவுகிறது.
இது கிடைக்கும் தள முகவரி : இங்கே
6. பிரவுசரில் வாய்ஸ் கமாண்ட்
இணையத்தில் பல பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென முன் பார்த்த பக்கங்களுக்கோ அல்லது பின்னர் பார்த்த பக்கங்களுக்கோ செல்ல வேண்டியுள்ளது. மவுஸைப் பிடித்து கிளிக் செய்யாமல் கம்ப்யூட்டருடன் இணைந்த மைக் மூலம் Back, Forward, Refresh எனச் சொல்லி அதன் மூலம் நாம் விரும்பும் பக்கங்களுக்குச் சென்றால் எவ்வளவு எளிது. இந்த வாய்ஸ் மூவிங் வசதியை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.
இதன் முகவரி: இங்கே
7. பிரவுசரிலேயே மியூசிக் பிளேயர்
ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற ஆடியோ மற்றும் வீடியோ இயக்கும் மீடியா பிளேயர்களை பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்தவாறே இயக்கினால் எவ்வளவு எளிது. தனியே வேறொரு விண்டோ சென்று இந்த பிளேயர்களை இயக்குவது சுற்று வழிதானே. இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஒரு ஆட் ஆன் புரோகிராம் தருகிறது.
இதன் முகவரி: இங்கே
8. பார்மட் கன்வெர்டர்
இணையத்தில் பைல்கள் பலவிதமான பார்மட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றை நம் பெர்சனல் கம்ப்யூட்டர் அடையாளம் கண்டு இயக்கும் வகையில் பல வேளைகளில் மாற்ற வேண்டியுள்ளது. பல வீடியோ, படம் மற்றும் டாகுமெண்ட் பார்மட்டுகள் இதில் கிடைக்கின்றன. இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி : இங்கே
9.தேடுதல் தளங்கள் படங்களாக
கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்கள் வழி தேடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். உங்களுக்கான விடைகள் கொண்ட தளங்களின் முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். இவற்றிற்குப் பதிலாக அந்த தளங்களின் முகப்புகள் சிறிய தம்ப்நெயில் படங்களாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்த உதவியை ஒரு ஆட் ஆன் தொகுப்பு கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்களுக்கு மட்டும் தருகிறது.
இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி: இங்கே
10. பார்த்தது பார்த்தபடி மூடித் திரும்பத் தர:
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென பிரவுசரை மூட வேண்டியுள்ளது. இன்னும் சில தளங்களை முழுமையாகப் பார்க்கவில்லை. ஒவ்வொன் றாக மூடிவிட்டால் பின் மீண்டும் வெப் சைட்டின் அந்த பக்கம் எப்படிப் போவது? என்று கலங்குகிறீர்களா? ஒவ்வொன்றாக மூடுவதும் சிரமமாக உள்ளதா? இந்த ஆட் ஆன் தொகுப்பு இணைத்துக் கொண்டால் அனைத்து தளங்களையும் மூடும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் மீண்டும் பிரவுசர் திறக்கப்படுகையில் அதே பக்கத்தில் அனைத்து தளங்களையும் திறந்து தருகிறது.
இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி: இங்கே