இங்கிலாந்தைச் சேர்ந்த எப்.எச்.எம். இதழ் நடத்திய உலகின் டாப் 10 செக்ஸி
பெண்கள்
போட்டியில், ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகி பரீதா பின்டோவும் இடம் பெற்றுள்ளார்.
பத்தாவது இடம் அவருக்குக் கிடைத்துள்ளது. பாடகி செர்லி கோல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மாதம்தான் டாப் 5
ஹாலிவுட்
செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ இடம் பெற்றார். இந்த நிலையில் உலகின் டாப் 10 செக்ஸி
பெண்கள்
வரிசைக்கு அவர் முன்னேறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர் மேகான் பாக்ஸ். ஆனால் இந்த ஆண்டு அவர் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது இடத்தை பாடகி செர்லி கோல் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு அழகி முதலிடத்தைப் பிடிப்பது கடந்த 3 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின்
மனைவி
கார்லா ப்ரூனிக்கு இந்தப் பட்டியலில் 40வது இடம் கிடைத்துள்ளது.
உலகளவில் நடந்த கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வாக்களித்து இந்த அழகிகளைத் தேர்வு செய்துள்ளனராம்.