Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 ஏப்ரல் 2009

குஷ்பூவுக்கு சாதனைப் பெண்கள் விருது!!

நடிகை குஷ்பூ உள்பட 5 பேருக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கினார் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்.கிராமப் பகுதிகளில் வசிக்கும் கைவினைக் கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளை உரிய முறையில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்.உலக மகளிர் தினத்தையொட்டி இந்த நிறுவனம் சார்பில் பெண் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருள் கண்காட்சி மற்றும் உலக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கண்காட்சியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், விக்டோரியா நிறுவனத்தின் தலைவருமான மோகன் தொடங்கி வைத்தார். 'இந்து' நிர்வாக இயக்குனர் என்.முரளி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 பெண்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகை குஷ்பூவுக்கும், கல்வித்துறையில் சாதனை படைத்ததற்காக டாக்டர் மீனா முத்தையாவுக்கும், கர்நாடக இசையில் சாதனை படைத்ததற்காக வசுந்தரா ராஜகோபாலுக்கும், சமூக சேவை பணியில் ஈடுபட்டதற்காக ரஷியாவை சேர்ந்த அனாஸ்டிசியா ஸ்மித்துக்கும், கிர்யோமிடனகாவுக்கும் (ஜப்பான்) இந்த விருதுகள் வழங்கப்பட்டன.விருதுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய நடிகை குஷ்பு, பெண்கள் தங்கள் திறமைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றினால் சாதனைகள் படைக்கலாம் என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com