Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 ஏப்ரல் 2009

பத்மஸ்ரீ விருதை உதறினார் பாரதிராஜா - திருப்பி அனுப்புகிறார்

சென்னை: மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பப் போவதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாரதிராஜா எதையும் எதிர்பாராதவன். எனக்கு நாற்காலி கனவு கிடையாது. `தமிழன்' என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது. இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. பிரபாகரனை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாக கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது. செயலில்தான் காட்ட தெரியும். அவரை ஜெயிக்க முடியாத காரணத்தால், ராஜபக்சேவுக்கு இந்திய அரசு கொல்லைப்புற வழியாக ஆயுதங்களை அனுப்பி ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. முழு முதல் குற்றவாளி மத்திய அரசுதான். உள்ளே போட்டாலும் கவலை இல்லை.. சோனியாவை விமர்சித்தால் தேச விரோத குற்றம் என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கி போட்டாலும் கவலை இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளை காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம். இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, எனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன் என்றார். சோனியா தான் சூத்திரதாரி-தாமரை: சினிமா பாடலாசிரியை தாமரை பேசுகையில், கலைஞர்கள் எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர்; நான் அப்படியில்லை; எதையும் வெளிப்படையாக பேசுவேன். தமிழ் ஒரு இனம்; மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்? இதைக் கேட்டால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்கின்றனர். சின்னதாகக் கூட உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போது "ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆட்சியிலிருப்பவர்கள் அப்படி பேச முடியாது'' என்று கருணாநிதி கூறுகிறார். முதல்வராக இருக்கும் கருணாநிதி "என்னால் முடியாது'' என்று சொல்லலாமா? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும். ஈழப் பிரச்னையை பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அமாவாசைக்கு மறுநாள். சோனியா தான் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என்றார். கவிஞர் புலமைப்பித்தன் பேசுகையில், ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்?. புறத்தே வெளுத்து அகத்தே கருத்துள்ள சோனியாவே சொல்லிவிடுங்கள் என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com