21 ஏப்ரல் 2009
மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை
இது அரசியல் கூட்டமோ,கட்சி மாநாடோ இல்ல இது மானாட மயிலாட பார்த்தவன் ஒருவனின் புலம்பல்....(அந்நியன் ஸ்டைல்ல.. :))) )
நேற்று ஞாயிற்றுக்கிழமை..(19/04/2009)..IPLல்ல தென்னாபிரிக்காவுக்கு மாத்தினதும் மாத்தினான் அத நம்மூர் டீவி எதிலயும் போட மாட்டேங்குறான் என்ற கடுப்புல வந்து இருந்தேன்..
முன்னாடி மேசைல ரிமோட் இருந்திச்சு..
போட்டு பாக்கலாம்ன்னு எடுத்து போட்டேன்..
அப்பதான் போட்டதும் வந்தது கலைஞர் டீவி...
மானாட மயிலாட தான் போய்கிட்டு இருந்திச்சு..சரி இது வரைக்கும் பாத்ததில்ல இன்னைக்காவது பாப்பமேன்னு போட்டேன்..(அட நிஜமா தாங்க..:))) )
முன்னால வந்து நின்னுச்சு காம்பேர் “டா”வும் காம்பேர் “டீ”யும்(அதாங்க அந்த 2 பேர்)..
முதல்ல அந்த “டா” கத்திச்சு...
“அடுத்து நாம பாக்க போறது ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வரியாவோட பர்ஃபாமன்ச..”என்றது...
இருவரும் வந்து ஆடினர்...
ஏதோ திருவிழா ரவுண்டாமாம்...பரவாஇல்லை சுமாராகத்தான் ஆடினார்கள் (பொய் சொல்ல கூடாதில்ல..)
திருப்பியும் ரெண்டு காம்பேரும் வந்தார்கள்...திருப்பியும் அந்த “டா” கத்திச்சு..
“ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வையாவோட பர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே ஒரு திருவிழாவை பாத்த மாதிரி இருந்திச்சு”ன்னான்...
உடனே அந்த பொண்ணு வாங்கி (ஐஸ்வரியா) “இன்னும் பர்ஃபார்மன்ஸ் முடியல “ன்னு சொல்லீட்டு திருப்பியும் சாங்க போட்டுட்டு ஒரு 1 நிமிஷம் ஆடிச்சு...
திருப்பியும் “டா” வாங்கி “இப்ப தான் நிஜமான திருவிழா முடிஞ்சிருக்கு...கலா மாஸ்டர் நீங்க சொல்லுங்க “என்றான்..
மாஸ்டர் மைக்க வாங்கி “இன்னும் முடியல..ன்னுட்டு இதோ நானும் வரேன்”என்ற்றாங்கோ...
அவங்களும் அங்க போய் திருப்பியும் ஒரு நிமிஷம் ஆடி முடிச்சுட்டு..
குஷ்புவ பாத்து ”இன்னும் முடியல ’குஷ்’(குஷ்ஷாமாம்..) இங்க வா”என்றார்..
குஷ்பு கூடவே ரம்பாவும்(எங்க தன்னையும் திருப்பி கூப்பிட வைக்காம :))) ) அங்க போய் மறுபடியும் ஒரு நிமிஷம் ஆடி முடித்தனர்...(இத பாத்து முடிக்கவே ’ஷபா முடியல’)..
முடிஞ்சாச்சா..இந்த முறை “டீ” வாங்கி ”கலா மாஸ்டர் இப்ப சொல்லுங்க எப்பிடி இவங்களோட பர்ஃபார்மன்ஸ்???” என்றது...
கலா மாஸ்டர் “ரஞ்ஜித் பின்னீட்டடா...ஸ்ஸூப்பர்ப்.., ஸுப்பர்ப்.., ஸூப்பர்ப்..என்னோட மார்க்ஸ் 20”என்றார்..(பாராட்ட தான் வேணும் ஆனா இது கொஞ்சம் ஓஓஓவர் தானே???)
பிறகு “டா” வாங்கி “குஷ்பூ மேடம் நீங்க சொல்லுங்க”என்றான்..
‘குஷ்’ மைக்க வாங்கி “ ஐசூ வாட்ட எஸ்ப்பரஷன்??..’உம்மா’ என்றார்..(என்னாத்திது???) மை மார்க்ஸ் ஆல்சோ 20”என்றார்..இவரோட பங்குக்கு வெளுத்து வாங்கீட்டு போக ”டீ” அடுத்து ”ரம்பா மேடம் நீங்க சொல்லுங்க”ன்னுச்சு...
ரம்பா வாங்கி “அவங்க சொன்னாப்பிறகு நான் என்ன சொல்லுறது என்னோட மார்க்ஸும் 20”என்றார்..(இதுலயும் காப்பி அடிக்கிற பழக்கம் போகவில்லயா???)..
இதுக்கு பிறகு என் வாழ்க்கையிலேயே இத பாக்குறது இல்லன்னு முடிவு பண்ணி டீவியயே ஆஃப் பண்ணீட்டேன்..
என் சோக கதைய கேட்டுடீங்க இல்ல??? இனிமேல் இத பாக்குற நோக்கம் இருந்தால் அத கைவிடுவதே நல்லது...
:)))
ஓக்கே...
நான் இதுக்கு ரூம் போட்டு ஃபீல் பண்ணனும் .. நான் வரேன்..