நமது கணினி வேகமாக இயங்க வேண்டுமென்றால் கணினியில் இருக்கும் ஹார்டுவேர்களுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் புதிய அப்டேட்டுகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட வேண்டும்.அப்போது தான் நமது கணினி வேகமாக இயங்கும்,நாமும் வேலைகளை விரைவாக முடிக்க முடியும்.
இந்த ஹார்ட்வேர்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள ஒரு இணையதளம் இலவச மென்பொருளை கொடுத்து நமக்கு உதவி செய்கிறது, சரி இலவசமாக நமக்கு அப்டேட் தருவதால் அவர்களுக்கு என்ன பயன்? என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் தரும் மென்பொருளை நமது கணினியில் நிறுவி ரன் செய்யும் போது இடையில் அவர்கள் வெளியிடும் ஒரு சிலவிளம்பரங்களை நாம் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான்! அவர்களுக்கு விளம்பர வருமானம் லாபம், நமக்கு இலவச "அப்டேட்" லாபம். அந்த விளம்பரங்களை கிளிக் செய்யாமலும் அப்டேட் செய்யலாம். அப்படி செய்தால் குறிப்பட்ட காலத்திற்கு பிறகு இலவசமாகத்தருவதை நிறுத்தினாலும் நிறுத்தலாம்.அதனால் விளம்பரத்தை 'கிளிக்' செய்து விடுவது நமக்கு நல்லது தானே?
அந்த இணையதளத்தின் முகவரி கீழே:
www.radarsync.com
இந்த தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்