ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மற்றும் எச்டிசி-8எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய ஒப்பீட்டினை இங்கே பார்க்கலாம்.
எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினையும், எல்சிடி 2 திரை தொழில் நுட்பத்தினையும், 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும், 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஏ-6 சிப்செட்டையும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் வழங்கும்.
விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்திலும் இயங்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை பெற முடியும். மேலும் ஐபோன்-5வில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.1 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றை பெற முடியும்.
ஐபோன்-5வில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ரறு 3 விதமான மெமரி வெர்ஷனில் எளிதாக பெற முடியும். 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்தலாம்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதியினை பெறலாம். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்எப்சி மற்றும் வைபை தொழில் நுட்ப வசதினை பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சிறப்பான ஆற்றலை வழங்கும். ஐபோன்-5வில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி 225 மணி நேரமும், 8 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் வழங்கும். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 லித்தியம் பாலிமர் பேட்டரியினை கொண்டது.