இந்திய நிறுவனமான கார்போன், தனது மலிவு விலை மொபைல்கள் மூலம் இந்திய ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஸ்மார்ட் எ18 என்ற ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கார்போன் இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. 2 சிம் வசதி கொண்ட இந்த போன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எ18 போனை பிலிப்கார்ட் ஆன்லைனில் ரூ.9,790க்கு வாங்கலாம். இந்த புதிய கார்போன் போன் எக்கச்சக்க தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு இயங்கு தளம் இந்த போனுக்கு வலிமையைத் தருகிறது.
இதன் 4.3 இன்ச் கப்பாசிட்டவ் திரை மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.
மேலும் இந்த கேமரா 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.3எம்பி முகப்புக் கேமரா, 2.55ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 7.5 மணி நேர இயங்கு நேரம் போன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதோடு இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் 3ஜி, யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளையும் இந்த போனில் பார்க்கலாம்.
இந்த கார்போன் போன் மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் எ90க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்வது யார் என்பது போகப் போகத்தான் தெரியும்.