Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

04 செப்டம்பர் 2012

விராத் கோஹ்லியும் அஸ்வினும் அபாரமாக ஆடியதால் வெற்றி கிடைத்தது: கேப்டன் டோணி பாராட்டு


பெங்களூர்: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற விராத் கோஹ்லியின் பேட்டிங்கும், சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சும் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Ashwin Showed Excellent Game
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல பெங்களூரில் நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த விராத் கோஹ்லி, 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு விராத் கோஹ்லி மற்றும் அஸ்வினின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,
விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார். கிரிக்கெட் போட்டியில் நெருக்கடியை தவிர்க்க இரு வழிமுறைகள் உள்ளன. போட்டியில் உள்ள சாவலை எதிர்த்து போராடுவது ஒரு முறை. போட்டியில் இருந்து விடுவித்து கொள்வது இன்னொரு முறை. இதில் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்த்து போராடிய விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோல பந்துவீச்சில் அஸ்வினும், ஓஜாவும் இணைந்து செயல்பட்டனர். இந்த ஜோடிக்கு வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர்கான் மற்றும் உமேஷ் யாதவ்வும் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட முயன்றனர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தினர். முக்கியமாக இந்திய சுழல்பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com