கடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.
ஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது