

நயன்தாராவுக்குப் பதில் ஒப்பந்தமானதெல்லாம சரிதான். நயன்தாராவுக்கு இணையான கவர்ச்சி (!) காட்டி நடிப்பாரா தமன்னா என்ற ஒரு சந்தேகம்.நேற்று ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த தமன்னாவிடம் நயனதாராவுக்கு போட்டியாக கவர்ச்சியி்ல் குதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்க, அதற்கு தமன்னா சொன்ன பதில்:
பையா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நான் ஒப்பந்தமானது ஒரு சின்ன விஷயம். நயன்தாரா சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் வேறு யாராவது ஒரு நடிகை அந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும். அதற்காக என்னை தேர்வு செய்தார்கள்.மேலும் பையா படத்தின் கதையும் எனக்குப் பிடித்து இருந்தது. நான் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்க இதைவிட வேறென்ன வேண்டும்? .இதனால் எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சனை என்பது அர்த்தமில்லாதது.
மேலும் நான் அதிக சம்பளம் கேட்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் ஆதாரம் ஏதுமில்லை. என் வேலைக்கு ஏற்ற சம்பளம் கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? .தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி என என்னைக் குறிப்பிடுவதில் சந்தோஷம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரணப் பெண். நான் ஜோடி சேரும் புதிய கதாநாயகன் இப்போது பரத்-தான். அவருடைய உடற்கட்டு எனக்குப் பிடித்துள்ளது. அவருக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என நம்புகிறேன்.குண்டு, ஓல்லி என்ற அளவைத் தாண்டி நான் ரசிகர்கள் மனதில் நிலைப் பெற்றுவிட்டது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சூர்யா, கார்த்தி ஆகிய இருவருடனும் ஜோடியாக நடிக்கிறேன். சூர்யா, ஜென்டில்மேன். ரொம்ப எளிமையானவர். கார்த்தி, ஜாலியானவர் என்றார் தமன்னா.






இந்த நிலையில் கேரள, மாரட்டிய அரசுகள் தன்னை அங்கீகரிக்கவில்லை என பார்வதி ஓமனகுட்டன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றும் கேரள அரசு என்னை அங்கீகரிக்கவில்லை. வேறு யாராவது உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினால் அதை முக்கிய சம்பவமாக கருதி திருவிழா போல கொண்டாடியிருப்பார்கள்.
ஆனால் நான் ஊர் திரும்பிய பின்னரும் கூட கேரள அரசு சார்பில் யாரும் என்னிடம் போனில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அது போலத்தான் நான் வளர்ந்த மாநிலமான மராட்டிய அரசும் என்னை புறக்கணித்துவிட்டது.
ஒருவேளை நான் மும்பையில் பிறந்திருந்தால் என்னை அங்கீகரித்திருப்பார்களோ என்னவோ... பொதுவாக அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. எங்களைப் போன்ற சாதனையாளர்களைக் கண்டு கொள்வதில்லை, என்றார் பார்வதி.
அழகிகளை இப்படி அழவைப்பது அழகா...?
கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இலக்கு என்ன?
வேற என்ன.. கைநிறைய நல்ல படம், பை நிறைய பணம்... இதுக்கு வஞ்சனையில்லாம நடிச்சுக் கொடுப்பேன். நிச்சயம் யாரும் குறை சொல்லாத அளவுக்கு நல்ல நடிகையா நிலைப்பேன். அந்த நம்பிக்கை வந்த பிறகுதான் பல தெலுங்குப் பட வாய்ப்புக்களைக் கூட உதறிவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடி வந்திருக்கிறேன், என்கிறார் அனுஷ்கா.
கவலைப்படாதீங்க... அக்கட தேசத்தில விட்டதை வட்டியும் முதலுமா இங்க பிடிச்சிடலாம்...!!

எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதற்கு இவர்களின் கூட்டமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமே காரணமாக இருந்த ஒரு கால கட்டமும் இருந்தது. இன்றும் பல உதடுகள் முணுமுணுக்கும் மனது மறக்காத பல பாடல்கள் இளையராஜா + வைரமுத்து கூட்டணியில் வெளிவந்தவைதான்.

எனினும் அதிக திரைப்படங்கள் வெளிவரும் மும்முரமும் வித்தியாசமானரசனைகளை ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஏன் இசையமைப்பாளர்களுமேவிரும்பிய காரணமும் புதிய பல பாடலாசிரியர்களை தமிழ் திரையுலகில்காணுவதற்கு காரணமாக அமைந்தது.அத்துடன் புதுமை விரும்பிகளான பலஇயக்குநர்கள் அறிமுகப்படுத்திய பல புதிய இசையமைப்பாளர்கள் தங்கள்அலைவரிசைக்கு ஒத்துப் போகக்கூடிய தங்கள் எண்ணக் கருத்துக்களைசுருக்கமான நவீனத்துவமான தமிழில் கொண்டுவரக்கூடிய காத்திரமானபடைப்பாளிகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்தனர் .
இவர்களில் வித்தியாசாகர் , யுவன்சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் போன்றோர் தங்கள் இசைகளைநவீனத்துவப் படுத்தியது மட்டுமல்லாமல் , அது ரசிகர்களை ஈர்த்து எடுப்பதற்குமிக முக்கியமான பாலமாக தரமான நவீனத்துவப் பாணியில் அமைந்த பாடல்வரிகளை பயன்படுத்திக்கொண்டனர்.அது வெற்றியும் கண்டது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த 3 முன்னணிஇசையமைப்பாளர்களுமே தங்களது ஆஸ்தான கவிஞர்களாக வெவ்வேபட்டஇளம் கலைஞர்களை பயன்படுத்தி வெற்றிக்கான பாதையை வழிவகுத்துக்கொண்டனர். இதில் பா.விஜய் , யுகபாரதி ,கபிலன் , அறிவுமதி என்று ஒருபரந்துபட்ட கவிஞர் பட்டாளத்தை அறிமுகப்படுத்தியும் பிரபல்யப்படுத்தியும்
தனது தனி முத்திரையை பதித்தார் இசையமைப்பாளர் வித்தியாசாகர்.
யுவன்சங்கர்ராஜா, முத்துக்குமாரை தன் நவீனத்துவ இசைவடிவங்களுடன்நேர்த்தியான முறையில் கையாண்டு பாராட்டுக்களை வென்றெடுத்ததோடு, மிககுறுகிய காலத்தில் காத்திரமான பாடல்களை வழங்க்கியுமிருந்தார்.

ஹரிஸ் ஜெயராஜ் + தாமரை கூட்டணி இன்னுமொரு வெற்றிக் கூட்டணி "மின்னலே" திரைப்படத்திலிருந்து 'அயன் ' வரை தொடர்ந்தும்வெற்றிகரமான ஜனரஞ்சகமான , அதே நேரத்தில் தரமான பாடல்களை இவர்களின் இணைப்பில் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த கூட்டணிகளில் உயர்ந்த ரசனை மட்டத்திலும் அதேவேளை ஜனரஞ்சக தரத்திலும் மிகுந்த பாடல்களை தரும் கூட்டணிகள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. முன்னைய பொற்கால கூட்டணிகளை இந்த கூட்டணிகள் நிகர்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதை நாம் துணிந்துசொல்லலாம். '
தனக்கென தனியாக ஒரு மேக்கப்மேனைக் கூட சனா வைத்துக் கொள்ளவில்லையாம். தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொள்கிறாராம். இப்படி தேவையில்லாத செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்கிறாராம் சனா.
ஷூட்டிங்குக்குப் போகிற இடங்களில் கிடைக்கும் வசதிக்குள் இருந்து கொள்ள பழகிக் கொள்கிறாராம்.
சனாகான் இப்படியே தொடர்ந்து இருப்பாரா அல்லது முன்னணிக்கு வந்த பின்னர் மாறிப் போய் விடுவாரா என்ற பேச்சும் கோலிவுட்டில் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கடந்து கண்ணீர் வழிய இவரது 'ஹீல் த வேர்ல்ட்...' பாடலை இன்றும் கோடிக்கணக்கான இசை விரும்பிகளும் மனிதாபிமானிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனாலும், இசையுலகின் உச்சத்தைத் தொட்ட இந்த மகா கலைஞனின் வாழ்க்கை பல புயல்களில் சிக்கியதில் இசை வாழ்க்கை பாதித்தது. அவரிடமிருந்து நல்ல இசை வருவது அடியோடு நின்றே போனது.
இப்போது மிக மீண்ட இடைவெளிக்கு்ப் பிறகு லண்டனில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த முறை அவர் நடத்தப் போவது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு இசை ரசிகனும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமையும் சிறப்பு இசை நிகழ்ச்சி அது. தொடர்ந்து 10 லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் லண்டனில் மட்டும்.
நேரடி ஒளிபரப்பாக ஜாக்ஸனின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்த மகா கலைஞனைப் பார்ப்போமா என்பதே சந்தேகம்தான்.
'உண்மைதான் நண்பர்களே, இந்த நிகழ்ச்சியோடு என் இசைப் பயணத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். வருகிற மே மாதம் எனது கடைசி இசைப் பயணத்தைத் துவங்குகிறேன். அப்போது நேரில் சந்திக்கிறேன், அனைவரையும்' என்று நேற்று அறிவித்துள்ளார் மைக்கேல் ஜாக்ஸன்.
கடந்த 2002ல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சினையும், அப்போதைய கேப்டன் கங்குலியையும் கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் 6 ஹிஜிபுல் முகாஜிதீன் தீவிரவாதிகளை கைது செய்தனர். தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அதில் அர்ஷத்கான் என்ற தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில்,
சிறையில் இருக்கும் ஹிஜிபுல் முகாஜிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவரான நஸ்ருல்லா லாங்ரியால் மற்றும் சில மூத்த உறுப்பினர்களை காப்பாற்ற நினைத்தோம். சச்சின், கங்குலி ஆகியோர்களை கடத்தி பணயக் கைதிகளாக வைத்து கொண்டு, அவர்களை விடுவிக்க திட்டமிட்டோம். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தையும் தகர்க்க திட்டமிட்டோம் என்றார்.
இதையடுத்து அவர்கள் மீதான வழக்கு பொடா சட்டம் மற்றும் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 13ம் தேதி நடக்கிறது.
இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் குறைவே.2007ம் ஆண்டு கூகுளின் லாபம் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகமாக இருந்தது. 2008ல் லாபம் குறைந்த போதிலும் நஷ்டம் ஏற்படாதவாறு காத்துக் கொள்ள இந்த நிர்வாகிகள் உதவி மிகப் பெரிய அளவில் இருந்ததாம்.இந்த நால்வரில் ஜோனதன் ரோஸன்பெர்க்குக்கு (கூகுள் தயாரிப்புகளை வெளிநாடுகளில் மார்க்கெட்டிங் செய்பவர்) 1.64 மில்லியன் டாலரும், விற்பனை அதிகாரி ஓமிட் கோர்டஸ்டணி மற்றும் பொறியாளர் ஆலன் யூஸ்டாஸுக்கு தலா 1.38 மில்லியன் டாலர்களும் போனஸாகக் கிடைத்துள்ளது.கூகுள் சிஎப்ஓ ஜார்ஜ் ரெயெஸ் 6,75,000 டாலர்கள் போனஸாகப் பெறுகிறார். கூகுளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு 6 மில்லியன் டாலர் போனஸ் தர நிர்வாக விதிகள் இடமளிக்கின்றன.
மேலும் 2010 வரை பொருளாதார சரிவு நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்றும் அதுவரை தாக்குப் பிடிக்க செலவுக் குறைப்புகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் கூகுள் தலைமை நிர்வாகி எரிக் ஷ்சும்மிட் தெரிவித்துள்ளார்.கூகுள் ஆன்லைன் விளம்பர வருமானம் குறைந்தாலும், இப்போதைக்கு சமாளிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவனப் பங்குகள் மதிப்பு 3.3 சதவிகிதம் குறைந்து 10 டாலர்கள் என்ற விலையில் செவ்வாய்க்கிழமை கைமாறின.
நீங்க அதிர்ஷ்டக்காரியா?
அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தமிழ் படங்களில் பிசியாக நடிக்கிறேன். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கிறேன்.
கிளாமரில் ஏன் இத்தனை தாராளமயமாக்கல்?
இது கிளாமர் உலகம். சினிமா தொழில் என்பதும் கிளாமர்தான். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கட்டுப்பாடு என்னிடம் இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், என் கேரக்டர் போன்றவற்றை பார்த்து படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறேன்.
கதைகளில் ஹீரோக்களுக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
உண்மைதான். கதாநாயகர்களுக்குதான் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. அதுமாதிரி கதைகளைத்தான் படமாக்குகிறார்கள்.
பாடுவது ஆடுவது மட்டுமே இருக்கும் கேரக்டர்களை நான் ஏற்பது இல்லை.
எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பும் முக்கியத்துவமும் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடனும் மலையாளத்தில் பாடிகாட் படத்திலும் நடிக்கிறேன். ஏற்கனவே நான் நடித்த டொவன்டி டொவன்டி மலையாள படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக அப்படத்தை எடுத்தனர். அந்த படம் வெற்றி பெற்றது சந்தோஷம்.
என்ன சாதித்துவிட்டீர்கள்?
அப்படி வருத்தம் எனக்கு இருக்கு. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என்ற பெயர் வாங்கி இருக்கிறேன். அது நல்ல விஷயம்.
விளையாட்டு என்பது நல்ல மனிதர்களை உருவாக்கவல்லது, விளையாட்டு என்ற ஒன்று இல்லையெனில் வருங்கால சந்ததியினர் தவறான பாதைகளுக்கு சென்று விடுவார்கள், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அனைத்து விதத்திலும் தனிமைப்பட்டு விடும் என்று அவர் மேலும் கூறினார்.
சிறு வயதில் தான் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட் ஆகியோர் அயல் நாட்டு அணிக்கு எதிராக விளையாடியதைப்பார்த்துத்தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய யூனிஸ் கான், தற்போது எந்த அணியும் பாகிஸ்தான் வர முடியாத நிலை தோன்றிவிட்டால், தற்போதைய இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் யூனிஸ்கான்.
எனவே கிரிக்கெட்டை கொல்ல வேண்டாம் என்று கிரிக்கெட் ஆட்ட நிர்வாகத்தின் அனைத்துத் தலைமைகளிடத்தும் தான் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இப்போதைய நிலையில் ஐ.சி.சி.யும் அதன் உறுப்பு நாடுகளும் பாகிஸ்தானில் கிரிக்கெட் கிடையாது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இந்த முடிவால் பாகிஸ்தானில் பாதிக்கப்படும் எதிர்கால சந்ததியினர் பற்றி இவர்கள் யோசிக்கக் கடமைப்பட்டவர்களாவர்.பாகிஸ்தானிலிருந்து கிரிக்கெட்டை அகற்றி விட்டால் இந்த நாட்டின் எதிர் காலம் இருண்டு போகும் என்று கூறியுள்ளார் யூனிஸ் கான்.
தாக்குதலுக்கு பிறகு இலங்கை அணியினரை சந்தித்து தான் ஆறுதல் கூறியதாகவும் அவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் என்றும் கூறிய யூனிஸ் கான், விளையாட்டு என்பதுதான் நாடுகளை நெருக்கமாக இணைக்கும் பாலமாகும்.சில முட்டாள்கள் குண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதால் அவர்களை மனிதர்கள் என்று அழைக்கலாகாது.இவர்கள் செய்யும் செயல்களால் அயல் நாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறார்கள்.இதனால் பாகிஸ்தான் தனிமைப்பட்டு விடும் என்பது உறுதி என்று கூறினார் யூனிஸ்கான்.
ஆஸ்திரேலிய அணியுடன் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இப்போதைக்கு இதனை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த படம் சுப்ரமணியபுரம்.
இப்படத்தின் திரைக்கதை மலையாளத்தில் நூல் வடிவமாகி இரண்டு பதிப்புகள் கண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
கேரளாவில் மாத்ருபூமி பத்திரிக்கை சுப்ரமணியபுரம் படத்தை கடந்த ஆண்டில் வெளியான படங்களில் இந்திய அளவில் வழக்கமான தடத்தை உடைத்து புதுத்தடம் பதித்த படம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.
திருவனந்தபுரத்தில் கேரள திரையுலகமே திரணடிருந்த ஒரு விழாவில் இவ்விருது சுப்ரமணியபுரம் இயக்குநரும் தயாரிப்பாளருமான எம்.சசிகுமாருக்கு வழங்கப்பட்டது.
மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சசிகுமாரையும், மலையாளத்தில் 100 நாட்களை தாண்டி ஓடிய சுப்ரமணீயபுரம் படத்தையும் பாராட்டி பேசினர்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





நேற்றைய சம்பவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
