09 மார்ச் 2009
சனா..தனக்குத் தானே!
சனா கான் ஏகத்துக்கும் நல்ல பிள்ளையாக இருக்கிறாராம். தயாரிப்பாளர்கள் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார்கள்.
மும்பையிலிருந்து சிலம்பாட்டம் வழியாக வந்தவர் சனா கான். வந்தது முதல் தமிழ் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகி விட்டார்.
சனா கானை புக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை ஆர்வத்துக்கு முக்கிய காரணம், சனாகானின் பழக்க வழக்கம்தான்.
அதாவது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் படு சமத்தாக இருக்கிறாராம் சனா கான். தேவையி்ல்லாமல் செலவு வைப்பதில்லை.
தனக்கென தனியாக ஒரு மேக்கப்மேனைக் கூட சனா வைத்துக் கொள்ளவில்லையாம். தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொள்கிறாராம். இப்படி தேவையில்லாத செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்கிறாராம் சனா.
ஷூட்டிங்குக்குப் போகிற இடங்களில் கிடைக்கும் வசதிக்குள் இருந்து கொள்ள பழகிக் கொள்கிறாராம்.
சனாகான் இப்படியே தொடர்ந்து இருப்பாரா அல்லது முன்னணிக்கு வந்த பின்னர் மாறிப் போய் விடுவாரா என்ற பேச்சும் கோலிவுட்டில் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.