Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 மார்ச் 2009

விபச்சாரம்: மாளவிகா மேனேஜர் கைது

துணை நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை மாளவிகாவின் மேனேஜர் முனுசாமியை சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். சென்னையில் விபசார தொழிலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் நடவடிக்கைகளை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிரப்படுத்தியுள்ளார். துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் பைசர் சாலி ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான விபச்சார தடுப்பு போலீசார் அடிக்கடி விடுதிகள் மற்றும் திரைப்படத் துறையினர் அதிகமாகத் தங்கும் தனி கெஸ்ட் ஹவுஸ்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தி.நகரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துணை நடிகை ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 19 மாடிகளை கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலில் 14வது மாடியில் உள்ள ஒரு அறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 25 வயது இளம் பெண்ணுடன் தங்கியிருந்த முனுசாமி (51) என்பவரை கைது செய்தனர். இவருடன் தங்கியிருந்த பெண்ணின் பெயர் விசாலாட்சி என்ற ஜூலி (26). டிவி நடிகையான இவர் அரசி உள்பட பல தொடர்களில் நடித்து வருகிறார். அரசி தொடரில் அரவாணி வேடத்தில் வரும் பப்லுவின் தங்கையாக இவர் நடித்துள்ளதாக போலீசார் கூறினர். மேலும் காமெடி பஜார், கோகிலா ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். புரோக்கர் முனுசாமி, ஜூலியை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக ஹோட்டலில் தங்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் புரோக்கர் முனுசாமியை கைது செய்தனர். கைதான முனுசாமியின் சொந்த ஊர் திருச்சி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் குடியேறிய இவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் அலுவலக உதவியாளராக சேர்ந்துள்ளார். பின்னர் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் நடித்த நடிகை தீபாவிடம் உதவியாளராகப் பணி புரிந்துள்ளார். நடிகைகள் சிம்ரன், மாளவிகா ஆகியோரிடம் மானேஜராக பணி புரிந்தவர் இந்த முனுசாமி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி.நடிக்கும் முரட்டுக்காளை படத்தில் நடித்து வரும் சிந்து துலானியிடம் உதவியாளராக இருந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக துணை நடிகைகளை இவர் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதை போலீசாரிடம் முனுசாமி ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com