13 மார்ச் 2009
நயன்தாராவுடன் மோதலா?-தமன்னா
கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் 'ஒல்லிக்குச்சு உடம்புக்காரி' தமன்னாதான். கேடி படத்தில் அறிமுகமாகி, அந்தத் தோல்வியில் காணாமல் போய், சின்ன இடைவெளிக்குப் பின் கல்லூரி மூலம் புதிய வாழ்க்கை பெற்றார்.தனுஷ் ஜோடியாக அவர் நடித்த படிக்காதவன் சுமாரான படமாக இருந்தாலும், கமர்ஷியலாக ஓடிவிட்டதில் தமன்னா மீது ராசி முத்திரை விழுந்துவிட, அடுத்தடுத்து வெயிட்டான படங்களில் நடிக்கிறார் அம்மணி.அடுத்தடுத்து அவர் நடித்துள்ள அயன், ஆனந்தத் தாண்டவம் என இரு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன. சமீபத்தில் இரு புதிய படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார் தமன்னா.அதில் ஒன்று லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பையா. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்தததும், பின்னர் சம்பள விவகாரத்தில் ஒத்து வராமல் அவர் விலகியதால் அந்த ரோலில் தமன்னா ஒப்பந்தமானதும் ரசிக மகா ஜனங்களுக்குத் தெரிந்ததே.
நயன்தாராவுக்குப் பதில் ஒப்பந்தமானதெல்லாம சரிதான். நயன்தாராவுக்கு இணையான கவர்ச்சி (!) காட்டி நடிப்பாரா தமன்னா என்ற ஒரு சந்தேகம்.நேற்று ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த தமன்னாவிடம் நயனதாராவுக்கு போட்டியாக கவர்ச்சியி்ல் குதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்க, அதற்கு தமன்னா சொன்ன பதில்:
பையா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நான் ஒப்பந்தமானது ஒரு சின்ன விஷயம். நயன்தாரா சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் வேறு யாராவது ஒரு நடிகை அந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும். அதற்காக என்னை தேர்வு செய்தார்கள்.மேலும் பையா படத்தின் கதையும் எனக்குப் பிடித்து இருந்தது. நான் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்க இதைவிட வேறென்ன வேண்டும்? .இதனால் எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சனை என்பது அர்த்தமில்லாதது.
மேலும் நான் அதிக சம்பளம் கேட்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் ஆதாரம் ஏதுமில்லை. என் வேலைக்கு ஏற்ற சம்பளம் கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? .தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி என என்னைக் குறிப்பிடுவதில் சந்தோஷம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரணப் பெண். நான் ஜோடி சேரும் புதிய கதாநாயகன் இப்போது பரத்-தான். அவருடைய உடற்கட்டு எனக்குப் பிடித்துள்ளது. அவருக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என நம்புகிறேன்.குண்டு, ஓல்லி என்ற அளவைத் தாண்டி நான் ரசிகர்கள் மனதில் நிலைப் பெற்றுவிட்டது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சூர்யா, கார்த்தி ஆகிய இருவருடனும் ஜோடியாக நடிக்கிறேன். சூர்யா, ஜென்டில்மேன். ரொம்ப எளிமையானவர். கார்த்தி, ஜாலியானவர் என்றார் தமன்னா.