Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

11 ஏப்ரல் 2009

கமலின் அடுத்த படம் உன்னைப் போல் ஒருவன்!

கமலின் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான், பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்போது 'உன்னைப் போல் ஒருவன்' எனப் பெயர் சூட்டியுள்ளார் கமல்ஹாஸன். இந்த அறிவிப்பை நேற்று முறைப்படி வெளியிட்டார் கமல். இநதியில் பெரும் வெற்றி பெற்ற எ வெட்னஸ்டே படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். கமலுடன் முதல்முறையாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்திப் பட இயக்குநர் சக்ரி இயக்குகிறார். கமல்ஹாஸனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனலும், யுடிவியும் இணைந்து தயாரிக்கும் படம் இது. இந்தப் படத்துக்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ஒன்றையும் கமல் தயாரித்துள்ளார். பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கி, பெரும் வெற்றி கண்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது ஜெயகாந்தனின் அந்தப் படம். அந்த சாதனையை கமலும் செய்ய வாழ்த்துவோம்!!

கந்தசாமி குழுவுடன் திருப்போரூர் மக்கள் மோதல்!

திருப்போரூர் அருகே கந்தசாமி படப்பிடிப்பு நடைபெற்றபோது, உள்ளூர் மக்களுக்கும், கந்தசாமி குழுவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயங்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. விக்ரம் ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தின் அசத்தல் ட்ரைலர்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோடையின் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கும் கந்தசாமியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சில காமெடி காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருந்ததால், சென்னையை அடுத்த திருப்போரூரில் கடந்த 3 நாட்களாக அந்தக் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். நேற்று மாலை இந்தப் படத்தின் சில காட்சிகள், அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் வீட்டின் வாசலில் நடைபெற்றுக் கண்டிருந்தது. அப்போது வீட்டு உரிமையாளர் வெளியூர் போயிருந்தாராம். உடன் தனது குழந்தைகளையும் கூட்டிப் போயிருக்கிறார். வீடு திரும்பும்போது, முதலில் குழந்தைகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களை அந்தப் பக்கம் விடமறுத்து இழுத்துத் தள்ளியுள்ளனர் படப்பிடிப்புக்கு காவலாக நிறுத்தப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள். அப்போது ஒரு காமெடி காட்சி படமாகிக் கொண்டிருந்ததாம். தகவல் தெரிந்ததும் கடுப்பான வீட்டு உரிமையாளர் அந்த செக்யூரிட்டிகளுடன் கடுமையான வாய்த் தகராறில் இறங்க, அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் சேர்ந்து கொள்ள பெரும் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. பின்னர் இயக்குநர் சுசிகணேசனும் மன்சூர் அலிகானும் வடிவேலுவும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகுதான் மீண்டும் படம் பிடிக்கவே அனுமதித்தார்களாம்.

10 ஏப்ரல் 2009

இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!

ருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ‘ஸ்டைல் சாம்ராட்டு’டன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.

சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.

தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.

ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.

எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.

சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!

எந்திரன் - என்ன நிலை இப்போது?

இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.

படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:

“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.

எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.

முதல்வனில் மிகப்பெரிய ஹிட் ‘உப்புக் கருவாடு…’ அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய ‘அதிரடிக்காரன்…’ உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.

எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”

சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…

சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.

இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.

எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.

இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?

சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.

வாவ்… பல்ஸை எகிற வைக்கிறீங்க ஷங்கர் சார்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்

ஷங்கர் பேட்டி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா

விண்டோஸ் 1.0 முதல் விண்டோஸ் 7 வரை - அனைத்தும் ஒரே இடத்தில்

Microsoft Windows Screen shots - Windows 1.0 to Se7en

Windows 1.0
Windows 2.0
Windows 3.0
Windows 3.11
Windows 95
Windows 98
Windows 2000
Windows Millennium
Windows XP
Windows Vista
Windows 7 - Se7en
Must See - Amazing Video of 101 Photoshop Tips

07 ஏப்ரல் 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்

நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம். நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார். இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன். 9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால் M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Pluto ஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது. Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம் சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு) இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம். B.B. ROY of Great Britain had a Very Good Wife இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது. ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம். வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள். மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது. " பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்" முதல் எழுத்துகளின் படி மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம் இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம். நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள் எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.

இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய

இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம். ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம். ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம். நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும். உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம். மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும். நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம். நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம். உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை. இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.
McAfee Site Advisor LinkScanner Online Norton Safe Web Anti-malware tool by Google Web Of Trust தொடர்புடைய சுட்டி : WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.

11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி

பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது செய்தனர். இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு- பெயர் கவுசர் பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும் உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று சொல்வார்கள். கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில் அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா அமர்க்களமாக நடந்து முடியும். புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார். நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம் வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார். ஒரு நாள் காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது. மேலும் படிக்க வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன் லாலு பிரசாத் ஆவேசப் பேச்சு சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண்

05 ஏப்ரல் 2009

எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான

ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்! கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!
AR Rahman
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல். ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள். இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன. இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!

திருட்டுத்தனமாக வெளியாகிய விண்டோஸ் 7...?

இன்று இணையத்தில் ஆங்கில பிளாக்குகளை படித்துக்கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான பதிவு கண்ணில் பட்டது. விண்டோஸ் 7 இன் 7068 x86(32-bit) டோரன்ட் தளங்களில் கிடைப்பதாக படங்களுடன் வெளியிட்டிருந்தனர். இந்த செய்தி இந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Here are some details from the x86 iso:

File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso Size : 2.53GB MD5: 9dbc20dc21e09f926c530799918215a0 SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172 CRC32 : 26312514

And here is a little info about some of the changes:

- Overall performance improvement with some re-work of the kernel (most likely to remove some diagnostic branches) in preparation for RC. - Notepad.ini on startup (not really a bug) - Fixed WEI assessment code, more accurate - A newer build of IE8 optimized for 7068 - Memory management has been optimized a little - Added and replaced numerous drivers (which solves a lot of issues) - Fixed some Windows Update issues - Fixed some network discovery and wireless issues - Fixed some AERO issues - Improvements to Windows Media Center and media management - Changed the TCP half open limit from 10 to 120 - Improved support for external storage devices (ie. thumbs, NAS, etc.) - Improved startup and shutdown times - Added support for MP4 files and standard codecs - Enhanced printer support - Fixed some issues when doing an update from earlier builds and Vista - Fixed some dual display ichchuyes

Windows 7 Build 7068 x86 File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso Size : 2.53GB MD5: 9dbc20dc21e09f926c530799918215a0 SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172 CRC32 : 26312514 Download Windows 7 x86 build 7068

Windows 7 Build 7068 x64 File name : 7068.0.090321-1322_x64fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULXFRER_EN_DVD.iso Size : 3.23 GB Download Windows 7 x64 build 7068
File name : 7057.0.090305-2000_x86fre_client_en-us_Retail_Ultimate-GB1CULFRER_EN_DVD File size : 2.51 GB MD5 2a3863afe3453d1be642201fd3260ab2 CRC E34E099B CRC E34E099B SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f Download : Windows 7 Build 7057

உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தனியாக தட்டச்சு நிலையங்கள் (Type writing institutes) இருந்தன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக (!) ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவர். மோகன் நடித்த 'விதி' படத்தில் அவர் தட்டச்சு பயில்வதற்காக, மனோரமா நடத்தி வந்த தட்டச்சுப்பயிலகத்தில் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லோரும் அறிவோம். ஆனால் இப்போது வீட்டுக்கு வீடு கணினி மயமாகி விட்டது. அதனால் நாம் கணினியிலேயே தட்டச்சுப் பயிலலாம். உங்களது தட்டெழுதும் வேகத்தை உடனடியாக அறிவதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. தள முகவரி : http://speedtest.10-fast-fingers.com/ அந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள text box ல் type செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை(result) வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம். எனக்கு 60 வார்த்தைகள் / நிமிடம் இருப்பதாக அந்தத் தளத்தின் அறிக்கை முடிவு காண்பித்தது. அதைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள். 60 words சிறு குறிப்பு : உங்களது தட்டெழுதும் வேகத்தை அதிகரிக்கவோ / புதிதாகத் தட்டெழுத்துப் பயிலவோ இந்த மென்பொருளைத் தரவிறக்கி கணினியில் நிறுவிப் பயன்படுத்தவும். ஒளிக்களஞ்சியம் : கணினியில் தொடர்ந்தாற்போல் வேலை செய்வபர்களுக்கு வரும் ஒரு புதிய நோய் குறித்த காணொளி. நோயின் பெயர் carpal tunnel syndrome

03 ஏப்ரல் 2009

பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

டி.ராஜேந்தர் பார்ப்பதற்குதான் அன்னாசி மாதிரி! பிழிந்தால் நவரசம் என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் இவ்வளவு கொடூரத்திற்கிடையேயும் நண்பர்களை தக்க வைத்திருக்கிறது இப்போதும்!
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் இவரோடு பார்த்தவர்களை இப்போதும் பார்க்கிறேன். குடந்தை ராஜப்பா, கருணாநிதி, மதி, மற்றும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. ராஜேந்தரை சுற்றி சுற்றியே வருபவர்கள் இவர்கள். உயிருள்ளவரை உஷா காலத்திலிருந்தே அவரது உற்ற நண்பர்கள். அல்லது தொண்டர்கள். அல்லது கவுரவமான வேலைக்காரர்கள்! இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல) அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்! செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர். இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும். இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன். ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன். இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.

ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா!

இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது. அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது. invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம். புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம். Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர். இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு. கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.

02 ஏப்ரல் 2009

ஈ-மெயில் இணைப்பை (Attach File) இலகுவாக தரவேற்றுவது எப்படி..?

மெயில்களில் பைல்களை அட்டாச் செய்கையில் அனைத்து பிரவுசர்களும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் பிரவுஸ் செய்து பின் க்ஸ்புளோரர் போல விண்டோவினைத் திறந்து பைல்களைக் காட்டி அதிலிருந்து அட்டாச் செய்திட வேண்டிய பைல்களை ஒவ்வொன்றா இணைக்கச் செய்கின்றன.
இந்த சுற்று வேலைகளுக்குப் பதிலாக பைல் இருக்கும் டைரக்டரியைத் திறந்து பைலை அப்படியே அட்டாச் விண்டோவில் இழுத்துப் போடும் வசதியை ஜிமெயிலில் மேற்கொள்ளலாம். இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் இந்த வசதியைத் தருவது ஒரு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பாகும். நீங்கள் பிரவுஸ் செய்வதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரையும் மெயில் அனுப்ப ஜிமெயிலையும் பயன்படுத்துபவராக இருந்தால் இதனைப் படியுங்கள். இங்கு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றைக் காண இருக்கிறீர்கள். இதன் பெயர் "dragdropupload" இதன் மூலம் ஜிமெயில் பயன்பாட்டில் புதிய அனுபவம் ஒன்றை நீங்கள் பெறலாம். வழக்கமாக இமெயில் ஒன்றுடன் பைலை அட்டாச் செய்திட "Attach a file"கிளிக் செய்து பின் அந்த பைல் உள்ள டைரக்டரியில் அத்தனை பைல்களையும் பார்த்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்கள் இல்லையா? அதற்குப் பதிலாக இந்த ஆட் ஆன் தொகுப்பை இறக்கிப் பதிந்து கொண்டால் எத்தனை பைல்களை வேண்டுமானாலும் இறக்கி அட்டாச் விண்டோவில் இழுத்துப் போட்டுவிட்டு பின்னர் செய்தியைத் தயார் செய்து அனுப்பலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை addons.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

ஷில்பா ஷெட்டியின் 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகை

லண்டனின் பிரபல வாரப் பத்திரிகை ஹலோ வுக்காக தனது 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகையின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார் ஷில்பா ஷெட்டி

shilpa-shetty-as-she-opens-doors-of-her-5m-mansion-2

தனது காதல் கணவர் ராஜ் குன்ராவுடன் சேர்ந்து வாழ போகும் வீட்டில் எடுத்த புகைபடங்க்களை இங்கே தருகின்றோம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்ற ராஜ் குன்ரா ஒரு பெரும் கோடிஸ்வரர் ஆவார்

ஏழு படுக்கை அறைகளை கொண்ட இந்த மாளிகை வேர்ப்ரிட்ச் ஸரே என்ற இடத்தில் உள்ளது

01 ஏப்ரல் 2009

பத்மஸ்ரீ விழா-அமர்சிங்கை ஓரம் கட்டிய ஐஸ்வர்யா

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் வந்த அமர்சிங்கை ஓரம் கட்டிய பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா ராயை சுற்றிச் சூழ்ந்ததால், அமர்சிங் வெறுத்துப் போய் ஓரமாக நகர்ந்து போய் விட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் மாமனார் அமிதாப் பச்சனும் வந்திருந்தார். வழக்கம் போல 'கொடுக்கு' அமர்சிங்கும் கூடவே வந்திருந்தார்.
பிங்க் நிற சேலையில் படு அழகாக வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் ஐஸ் மீதே இருந்தன.ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் டிவி கேமராக்களும், புகைப்படக்காரர்களின் கேமராக்களும் அவர் பக்கம் திரும்பி, படம் எடுத்துத் தள்ளின. விருது விழாவின் ஒரு பகுதியாக அருகில் இருந்த மண்டப அரங்கில் தேநீர் விருந்து நடந்தது.
அந்த விருந்துக்காக வந்த வழியில் ஐஸ்வர்யாவை ஆட்டோகிராப் கேட்பவர்களும், கேமராமேன்களும், புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர்.கையில் கிடைத்ததை எல்லாம் காட்டி கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கு அமிதாப் பச்சனும், கூடவே அமர்சிங்கும் வந்தனர். ஆனால் அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஐஸ்வர்யாவுக்கு அருகில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்த முயற்சித்தார் அமர்சிங். ஆனால் நெக்கியடித்த கூட்டத்தால் அவர் ஓரமாக தள்ளப்பட்டார்.போடுகிற டிவியில் எல்லாம் தனது முகமே காட்டப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா பக்கம் அத்தனை பேரும் திரும்பி விட்டதைப் பார்த்து வெறுத்துப் போனார் அமர்சிங்.
நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே வேறு பக்கமாக நகர்ந்து போனார் அமர்சிங்.ஒரு வழியாக கூட்டத்தை விட்டு தப்பித்த ஐஸ்வர்யா அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவருக்குப் பின்னாலேயே அமிதாப் பச்சனும், அமர்சிங்கும் சென்றனர்.இங்கு மட்டும்தான் அமர்சிங்கால் அரசியல் செய்யவே முடியாது என்று குறும்புக்கார கேமராமேன் ஒருவர் காமென்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது. அமர்சிங்குக்கும் கூட அது கேட்டிருக்கலாம்.முன்னதாக, அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்மபவிபூஷண் விருதும், 62 பேருக்கு பத்மஸ்ரீவிருதையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நீங்கள் யார்...? முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

ஏப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம். இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்? ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்! அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா? அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே. முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள். புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா? இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது. இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம். ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை. கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர். ரஜினி அப்படியா? இல்லவே இல்லை. அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது. கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா? கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள். ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி. ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே கெட்டிக்காரராகவே இருக்கிறார். தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள். தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி. அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன். நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.
அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.
இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

31 மார்ச் 2009

கூகிள் இன் புதிய லோகோ தொடர்பான பதிவினை பார்க்கவேண்டுமா இங்கேசொடுக்கவும் .Google இன் வித விதமான Logo கள்...

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்

இந்த பதிவு புது மன தம்பதியர்களுக்கு மட்டும் ... ( அப்போ கல்யாண பசங்க பொண்ணுங்க .. கல்யாணம் ஆகி சில வருஷம் ஆன தம்பதிகள் எங்களுக்கு இல்லையா .... உள்ள வந்துடிங்க :-) படிச்சி பாருங்க... உங்க நண்பர்கள் கிட்ட பகிரிந்து கொள்ளுங்கள் ) முன்று நாள் லீவ் விட்டாங்க என்று திருச்சி போலாம் என்று வியாழன் நைட் பெங்களூர் KPN மடிவால ஆபீஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ... ரெண்டு லவ் குருவிகள் (love birds) புதுசா கல்யாணம் செஞ்ச குருவிங்க ... ஓர ஓட்டல் ஒரசல் எங்க நாடு ரோட்ல ( உனக்கு ஏன்டா காண்டு என்று கேட்பது தெரியுது ) ஓர மொக்கை கட்டி புடி என்று தங்களோட அன்பை எப்படியா வெளிப்படுத்துவது .. நான் ரொம்ப நல்லவன் நவுந்துடேன் ( நம்ப மடிங்க என்ன செய்ய ) ஆனா நிறைய பேரு ஆஆஆஆஆ வாய போலந்து பாத்துக்கிட்டு இருந்தாங்க... மக்களே நீங்க புதுசா கல்யாணம் பண்ணது தெரியுது .. அதுக்காக உங்கள் அன்பை கை புடிச்சிட்டு போறது தப்பு இல்லை.... இப்படி நடு ரோட்ல எப்படியா இப்படி... (எப்படி நம்ம ஒரு குட்சி ஐஸ் வாங்கிட்டு அத வாங்க முடியாதவன் இன்னொரு சின்ன பையன் கிட்ட காட்டி காட்டி சாப்பிட்டா எப்படி கோபம் வரும் :-) இப்படி எனக்கு இல்லை பல பேருக்கு கோபம் ) தம்பி இது என்ன வெளிநாடா ? வெளிநாட்டவர்கள் கூட இந்தியா வந்து நடு ரோட்டில் இப்படி நடந்து கிட்டு நான் பார்த்து இல்லை ... ரொம்ப சந்தோஷமான தருணம் ... ரொம்ப நாட்களுக்கு அப்பரும் பாக்கிற முதல் முறை ஒரு தழுவல் அவசியம் ... ஒரு முத்தம் கூட நல்லா இருக்கும் அது தப்பு இல்லை ... இன்னொரு முக்கியமான விஷயம் இது மாதிரி உண்மையான அன்பை அதாவது சந்தோசமாக இருக்கும் பொது ஒரு அன்பாக பிடிப்பது .. கொடுப்பது பார்பவர்களுக்கு தப்பா தெரியாது காரணம் அந்த அன்பு நம்மளையும் வந்து சேரும் அதுக்கு பதிலா ஒட்டல் ஒரசல் பின்னல் பிணைதல் ஒரு வித அருவருப்பை கொடுக்கும் உடம்பு சுகம் இல்லாத மனைவி ... அவன் மேல ஒரு தலை சாய்த்து கை பிடித்து துங்கும் பொது ஒரு குழந்தை போல அழகாய் இருக்கும் அது நம்மக்கு தப்பாக தெரியாது .. நம்ம அமீர் படத்துல சூரியா சொல்லுவாரே அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது டிப்ஸ்
  1. கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
  2. சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
  3. உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
  4. இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
  5. அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
  6. இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
  7. தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
  8. தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
  9. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
  10. அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
  11. கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
  12. முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
  13. நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
  14. ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
  15. சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
  16. அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
  17. நிறையா விட்டுகொடுங்க ..
  18. உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
  19. எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
  20. நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
  21. மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
  22. அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
  23. அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
  24. முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
  25. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
நான் காலேஜ் படிக்கும் போதும் சரி ஸ்கூல் படிக்கும் போதும் சரி என்னோட தம்பி விஜய்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன் பிட் அடிச்சி மாட்டினாலும் .. பிகுரே பார்த்து சைட் அடிச்சாலும் ... எவனாச்சும் போட்டு கொடுக்க வருவான் டேய் விஜய் உங்க அண்ணன் ஒரு பொண்ண சைட் அடிக்கிறான் அதுக்கு எனோட தம்பி .. அந்த பொண்ணு பேரு இதுதானே .. என்று சொல்லி வந்தவனுக்கு முக்கு ஒடஞ்சு போய்டும் ... என இது மாதிரி பல பேரு குடும்பத்த கெடுக்க என்று வருவாங்க ... முக்கியமா சொந்தம் பந்தம் .. அதுக்கு நீங்க டிரன்ச்பறேண்ட இருந்தா எனக்கு தெரியும், இடாத காலி செய் என்று சொல்லலாம் பாரு :-) ( எவனும் பிளாக் மெயில் பண்ண முடியாது ) இப்போதிக்கு இது போதும் அப்புறம் பார்ப்போம் :-) சந்தோசமா சக்கரையை போல் இனிக்கடும் உங்கள் வாழ்க்கை - சுரேஷ் கடைசி பாயிண்ட் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த பதிவை மெயில் அல்லது பார்வர்ட் செய்யுங்க

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார். இது பற்றி பிரீத்தி ஜிந்தா, ’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.

அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன். தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.

அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள். பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும். நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com