
11 ஏப்ரல் 2009
கமலின் அடுத்த படம் உன்னைப் போல் ஒருவன்!
கமலின் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான், பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்போது 'உன்னைப் போல் ஒருவன்' எனப் பெயர் சூட்டியுள்ளார் கமல்ஹாஸன்.
இந்த அறிவிப்பை நேற்று முறைப்படி வெளியிட்டார் கமல்.
இநதியில் பெரும் வெற்றி பெற்ற எ வெட்னஸ்டே படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
கமலுடன் முதல்முறையாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது.
இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்திப் பட இயக்குநர் சக்ரி இயக்குகிறார்.
கமல்ஹாஸனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனலும், யுடிவியும் இணைந்து தயாரிக்கும் படம் இது.
இந்தப் படத்துக்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ஒன்றையும் கமல் தயாரித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கி, பெரும் வெற்றி கண்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது ஜெயகாந்தனின் அந்தப் படம்.
அந்த சாதனையை கமலும் செய்ய வாழ்த்துவோம்!!
