பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து  கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது  செய்தனர்.
இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு-
பெயர் கவுசர்  பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு  உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே  அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே  கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக  இருந்தனர்.
கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில்  ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம்  இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி  மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு  இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு  மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும்  உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று  சொல்வார்கள்.
கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில்  அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள்.  ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி  முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா  அமர்க்களமாக நடந்து முடியும்.
புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார்.  நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக  செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம்  வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார்.
ஒரு நாள்  காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும்  வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா  வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது. மேலும் படிக்க 
வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன் லாலு பிரசாத் ஆவேசப்  பேச்சு 
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண் 07 ஏப்ரல் 2009
11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண்