Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூன் 2009

3வது முறையாக நடிகர் சங்கத் தலைவரானார் சரத்குமார்

திரையுலகின் பலமான அமைப்புகளில் ஒன்றான நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாம் முறை தேர்வாகியுள்ளார் நடிகர் சரத்குமார். அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து அனைத்து நிர்வாகிகளுமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் ஜூலை 12-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலுக்கு அவசியமில்லாமல் போனது. நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் [^] உள்பட அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த பிறைசூடன் அறிவித்தார். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், முரளி, சார்லி, மும்தாஜ் உள்பட 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களுடன் வைத்யநாதன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு தேர்தல் [^] விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 57 ஆண்டுகளில் தலைவர் உள்பட 29 பேர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்தார். புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா, ஜுலை 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சரத் பேட்டி பின்னர் நிருபர்களுக்கு சரத் குமார் அளித்த பேட்டி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடம் இந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். ஏறக்குறைய ஒரு லட்சம் சதுர அடியில் புதிய கட்டிடம், குளிர்சாதன வசதியுடன் அமையும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற இருக்கிறோம். அப்போது புதிய இடத்தில், சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்றார். இந்த முறையாவது நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து கெளரவம் தேட முயலட்டும் நடிகர் சங்கம்.

விஜய் அவார்ட்ஸ்- ஒரு பார்வை

கொடுக்கப்பட்ட விருதுகளை விமர்சித்திருப்பன்யா!! பின்னூட்டம் போட்டுக் கொல்லலாம் என்று வந்தீர்களா.... ஏமாந்த காக்கா ஏமாந்த காக்கா... நான் சொல்லப் போறது என்னான்னா.. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி வந்தாங்கோ!!... மேடையில என்னென்ன ஃபிலிம் காட்டினாங்கோ!! என்னெல்லாம் நல்லாருந்திச்சு! என்னெல்லாம் கடுப்பைக் கிளப்பிச்சு என்று சும்மாங்காட்டியும் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்பமே என்றுதான் இந்தப் பதிவு.
உடையலங்காரம்
நம்மவர்கள் கொஞ்சம் இதுல வீக். எங்க எப்பிடி உடை உடுத்துவது என்ற வரையறை பெரும்பாலும் இவர்களுக்கு இருப்பது இல்லை. சிலபேர் ஏதோ வெளிநாட்டில் நடக்கும் விருது விழாவுக்கு வருவது போலவும், சிலபேர் எதோ பக்கத்து வீட்டு நிகழ்ச்சிக்கு வருவது போலவும், சிலபேர் (சில பேர் என்ன சில பேர், இரண்டே இரண்டு பேர்) டிஸ்கொத்தேக்கு வருவது போலவும் வந்திருந்தார்கள். கமல் வழமை போலவே இளமையாய் வந்தார். உடையிலும் பெரிதாக குறை சொல்ல முடியாது. ஆனால் அவர்கூட வந்த அந்த 4 வேற்றுக் கிரகவாசிகள்தான் யாரென்று தெரியவில்லை. தனுஷ் போன வருடம் போட்ட அதெ உடையோடு வந்த மாதிரி இருந்தது. நயன்தாரா உடுக்கணுமே என்று உடை உடுத்தி வந்திருந்தார். தமன்னா ஓ.கே ரகம். நம்ம இளைய தலைவலிகூட ஏனோ தானோ என்று வந்திருந்தார். முருகதாஸ், பார்த்திபன் எல்லோரும் அவ்வாறே. மனோரமாவும், பூர்ணிமாவும் சேலையில் வந்திருந்தார்கள். சங்கீதா, சினேகா looked O.K. தாய்மை பெண்களின் அழகைக் கூட்டும் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதற்கு சமீபத்திய உதாரணமாக வந்திருந்தார் ‘ஜோ'. 'ஜோ' வுக்கே ஜோதி போல் அழகாக வந்திருந்தார் சூர்யா. கார்த்தி உடைத்தெரிவில் அண்ணனிடமும் அண்ணியிடமும் நிறையக் கற்கவேண்டும். பழைய முகங்கள் பாலசந்தர், சிவகுமார் போன்றோர் சட்டை போட்டு இன் பண்ணி வந்திருந்தார்கள். பிரசன்னாவின் நிறத்தேர்வு உவ்வே. ஜெய், அஜ்மல் பரவாயில்லை. மிஷ்கினுக்கு பிறந்ததிலிருந்தே 'மெட்ராஸ் ஐ' போல. அந்தக் கண்ணாடியைக் கழட்டுங்க பாஸூ.
கண்ணுக்கு அழகு சூர்யா- ஜோதிகா ஜோடி. (வெள்ளாடை தேவதையும் கொள்ளை கொண்ட கந்தர்வனும்), கமல், பரத். விருது நிகழ்ச்சிக்கு முன் சிகப்பு கம்பள வரவெற்புக் கொடுத்த திவ்யதர்ஷிணி. (அவங்க பேசின தமிழைச் சொல்லலீங்கோ) கண்ணுக்குக் கடுப்பு கௌதமி, கமல் மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா, கௌதமி மகள் சுப்புலட்சுமி. (இதுல கௌதமிக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்னு விருது வேற). வெங்கட் பிரபு- பிரேம்ஜி அமரன் சகோதரர்களின் Slogan எழுதிய T-Shirts. அதிலும் I think he is a Gay என்ற வாசகம் பொறித்த சட்டையோடு வந்த பிரேம்ஜி கடுப்புகளைக் கிளப்பினார். நீங்க எடுக்கிற படம் ஜாலியா இருக்கலாம் வெங்கட். ஆனா எங்க எப்படி நடக்கணும்னு சிலது இருக்கு. ஓவர் ஃபிலிம் உடம்புக்காகாது பாஸூ. மேலும் படங்கள் பார்க்க இங்கே கிளிக்குங்கள். நல்லாருந்தது
  • போன வருடத்தின் சிறந்த Entertainer விருது பெற்ற தனுஷின் பேச்சு, நாகேஷ், ஆர். சி. சக்தி, அனந்து பற்றிய கமலின் பேச்சு, 'அஞ்சாதே' படத்தில் குருவியாக நடித்த 'பாம்' ரமேஷின் எளிமையும் அப்பாவித்தனமும் கலந்த பேச்சு.
  • மேடையின் பின்புறத்திலிருந்த பெரிய திரை.
  • தன் வழமையான உற்சாகதோடு தேவா, லெஸ்லி சகிதம் ஹரிஹரன் பாடிய 'மோதி விளையாடு' பாடல்.
  • ருக்மணி டான்ஸ்.
  • 'சத்யம் சினிமாஸ்'சுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். (இவங்கதான் சினிமா நல்லா ஓட தியேட்டர் தேவைன்னு முதன் முதலாகக் கண்டு பிடிச்சிருக்காங்க)
  • ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம் மேனன் காட்சிகள். மற்றும் ஹாரிஸின் சிம்பிளான பேச்சு. அவர் ஜேம்ஸ் வசந்தனின் ‘கண்கள் இரண்டால்' பற்றி சொன்ன வரிகள்
கடுப்படித்தது
  • கோபிநாத். கோபி.. நீங்க 'நீயா நானா ' நிகழ்ச்சி பண்ணலை. பள்ளிக்கூடப் பசங்களை வாத்தியார் கேள்வி கேட்பது போல் அதட்டிக் கேள்விகேட்கிறார் இல்லை புகழ்கிறேன் பேர்வழி என்று வழிந்துக கொண்டே................ இருக்கிறார். இவருக்கு யூகி சேது எவ்வளவோ தேவலை. (அந்த Best Wishes, வாஆஆஆஆஅவ், கூ.........ல் மூணையும் விட்டு வெளிய வாங்க கோபி. அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் சரக்கிருக்கு என்று எங்களுக்கு தெரியும். அதுக்காக அதிமேதாவித்தனமான கேள்விகள் எல்லாம் ஒரு விருது மேடையில் ஓவர். ஹாரிஸ்-கௌதம் எபிசோடில் ரொம்ப எல்லை மீறிட்டார்.
  • கமலைப் புகழ்கிறோம் பேர்வழி என்று எல்லாரும் புகழ்ந்து கொண்டே........ இருந்தார்கள். திகட்டுகிறது.
  • அப்புறம் கமல், சூர்யா, சிவகுமார் குடும்பம், பாலசந்தர், மனோரமா சம்பந்தப் பட்ட தருணங்கள் எல்லாம் ஏதோ விக்ரமன் படம் பார்க்கும் உணர்வு. விருது மேடையை நட்சத்திரங்கள் நாடக மேடையாகக் கற்பனை பண்ணிவிட்டார்கள் போல். ஒரே கண்ணீர் மயம்... அடப் போங்கப்பா.
  • 'செவாலியேர் சிவாஜி' விருதை வாங்க ரஹ்மான் வராதது.
  • டான்ஸில நம்ம அடிச்சுக்க முடியாது என்று சொன்னார் கோபி. ஆனா கிட்டத்தட்ட எல்லா டான்ஸுமே சுமார்தான். அதுவும் அந்த தோனிய வச்சுப் பேர் பாத்திச்சே ஒரு பொண்ணு... அத இனிமே ஆடக்கூடக் கூப்பிடாதீங்க ஆமா.
விஜய் அவார்ட்ஸ் மொத்தமா பாக்கணுமா? பொறுமை கொஞ்சம் கூடத் தேவைப்படும். கீழே Links: கோப்பி டு-

மெய் சொல்லப் போறேன்

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை - ஆகஸ்டில் ஏலம்

டெல்லி: நவீன செல்போன் தொழில் நுட்பமான 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் விடுகிறது மத்திய அரசு. இதன் மூலம் அரசுக்கு ரூ.32 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமும் நிதியமைச்சகமும் அறிவித்துள்ளன. அடுத்த தலைமுறைக்கான நவீன செல்போன் சேவைகளை உள்ளடக்கிய 3-வது தலைமுறை (3 ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அலைவரிசை வசதி இருந்தால் போதும், செல்போனில் அதிவேக இண்டர்நெட், வீடியோஸ் மற்றும் சில மதிப்பு கூட்டு சேவைகளைப் பெறலாம். இப்போதைக்கு மத்திய அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுடன், 6 தனியார் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.2 ஆயிரத்து 20 கோடியாக நிர்ணயம் செய்ய தொலைத் தொடர்புத்துறை விரும்பியது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தியது. இதனைத தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா ஆகியோர் சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், இந்தப் பேச்சுக்கள் நடந்தன. இறுதியில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். அதன்படி, குறைந்த பட்ச ஏலத்தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டது மத்திய தகவல் தொடர்புத் துறை. ஆகஸ்டு மாத மத்தியில் ஏலம் நடைபெறும். இந்த ஏல விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.32 ஆயிரத்து 320 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலப் போட்டியில், அரசுத் துறையின் இரு நிறுவனங்கள் தவிர, பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடாஸ் மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வயர்லெஸ் பிராடுபேண்ட் எனப்படும் வி மேக்ஸ் சேவையையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது தொலைத் தொடர்பு அமைச்சகம். இதற்கு ஆரம்பத்தில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.1010 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.2020கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மே. இந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை

லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இலங்கை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை டுவென்டி 20 சாம்பியன் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. மிகச் சிறப்பாக ஆடிய இலங்கை அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மிரட்டி விட்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் அதிரடியாக ஆடி 96 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் சில விக்கெட்கள் மடமடவென்று சரிந்தபோதும் கூட தில்ஷான் நங்கூரமிட்டது போல நின்று விட்டதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படவில்லை. இறுதியில், 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வந்தது. ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறி கொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இலங்கை பந்து வீச்சாளர் ஏஞ்செலோ மாத்யூஸ் முதல் ஓவரிலேயே முத்திரை பதித்தார். சேவியர் மார்ஷல், லென்டில் சிம்மன்ஸ், பிரேவோ ஆகியோர் ஒவ்வொரு பந்து வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் நிலை குலைந்தது. அதன் பின்னர் அந்த அணி எழுந்திருக்கவே இல்லை. கேப்டன் கெய்ல் நிலைமையைப் புரிந்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்குத் துணையாக ஒரு வீரரும் நிலைக்கவில்லை. கெய்ல் 50 பந்துளில் 63 ரன்களைக் குவித்தார். தனி ஒருவராக கிணறு தோண்டியதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் கரை சேர முடியாமல், 17.4 ஓவர்களிலேயே 101 ரன்களுடன் சுருண்டு போனது அந்த அணி. மாத்யூஸ் 3 விக்கெட்களையும், முரளீதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இறுதிப் போட்டியில் பாக்.குடன் மோதல் [^].. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இலங்கை, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை சந்திக்கிறது. முதலாவது உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. இந்த முறையும் இரு ஆசிய அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்

நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .

(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது . நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் . எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும். நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம். மேலும் கூகிள் அட்வோர்ட்ஸ் உள்ளதை போலவே நமது தளத்திற்கான விளம்பர வரிகளை சொந்தமாக அமைத்து கொள்ளலாம்.நமது இணையத்தளத்தில் வரும் அட்க்ரிட்வோர்க் விளம்பர பலகை அளவையும் நம் மாற்றி கொள்ளலாம் . இணையதளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்

19 ஜூன் 2009

நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும், ஆந்திரா [^] மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் [^] நடந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார். அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் [^], நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், ராதாரவி, தியாகு, சின்னி ஜெயந்த், வையாபுரி, விஜயக்குமார், நடிகைகள் மீனா, பூர்ணிமா, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஷ்வரி, தயாரிப்பாளர் அமுதா துரைராஜ், தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் [^], ராதாரவி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி

இசையால் வசமாகா இதயமெது என்பார்கள் இல்லையா..? குறிப்பிட்ட காலப்பகுதியில், இவ்வுலகின் இசையுள்ளங்கள் பலவற்றைத் தன் இனிய இசைக்கோலங்களால் கட்டிப்போட்ட, உலகம் போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞன் பிறந்தது இன்றைய நாளில். இதனைக் கெளரவிக்கும் வகையிலேயே கூகிள் இணையத்தளம் தன்னுடைய குறியீட்டு இலட்சினையை (logo) இன்று வெளியிட்டிருக்கிறது.

பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்து, இருபதாம்நூற்றாண்டில் மறைந்த இசைக்கலைஞனதான் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky). 1882ம் ஆண்டு, ஜுன் 17ந் திகதி, ரஷ்யாவில் பிறந்த இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி சிறந்தவொரு இசையமைப்பாளர் .

சென்ற நூற்றாண்டான 20 ஆம் நூற்றாண்டில், உலகில் மிகச் செல்வாக்குச் செலுத்திய இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க முதல் நூறு மனிதர்களுள் ஒருவாராக 'Time' சஞ்சிகை தெரிவு செய்து கெளரவித்திருக்கிறது. இசையமைப்பாளர் , பியானோக் கலைஞர், நிகழ்ச்சி இயக்குனர், என முப்பரிமானப் புகழ்மிமக்கவர் எனப்புகழப்படுமிவர், 1910ல் ஒரு பலே நடன நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் தொடச்சியாக "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்காக அவர் வடிவமைத்த இசையமைப்பு, இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவரை இசைப் புரட்சியாளர் என அடையாளப்படுத்தியது.பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களின் ஆதர்சமாக விளங்கிய இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந்திகதி, தனது எண்பத்தியொன்பதாவது வயதில் மறைந்தார்.

அவரது இசைக்கோப்பு ஒன்றை பின்னாளில் மற்றுமொரு புகழ்மிகு கலைஞர் இசையமைத்த பதிவினைக் கீழே கேட்கலாம்.

அப்ரிதி அதிரடி ஆட்டத்தால் சுருண்டது தெ. ஆ. - இறுதிப் போட்டியில் பாக்.

நாட்டிங்காம்: டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் படு ஸ்டைலாக கைப்பற்றியது. நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் நேற்று முதல் அரை இறுதி ஆட்டம் நாட்டிங்காமில் நடந்தது. இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது என்று கருதப்பட்ட பாகிஸ்தானும் மோதின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் படு கலக்கலாக ஆடி தென் ஆப்பிரிக்காவை துரத்தி விட்டது. ஷாஹித் அப்ரிதி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்ல முடிந்தது. முதலில், பேட்டிங்கில் 34 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அபிர்தி, பின்னர் பந்து வீச்சின்போது, 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்து தான் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார். முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. கம்ரன் அக்மல் 23 ரன்களும், சோயப் மாலிக் 34, யூனிஸ்கான் 24 எடுத்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்காவால், பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால், 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் ஸ்மித் வெறும் 10 ரன்களுடன் அவுட் ஆனார். ஆனால் ஆல் ரவுண்டர் கல்லிஸ் சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். இவர் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய ஸ்கோரை எட்டியவர். டுமினி தன் பங்குக்கு 44 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல நடையைக் கட்டினர். இதனால் 142 ரன்களில் ஆட்டத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது பாக். கடந்த முறை அது இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் 2வது முறையாக முன்னேறியுள்ள பாக். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. சுருக்கமான ஸ்கோர்.. பாக். கம்ரன் அக்மல் - 23, அப்ரிதி -51, சோயப் மாலிக் - 34, யூனிஸ்கான் -24 (149-4). தென் ஆப்பிரிக்கா கல்லிஸ் - 64, டுமினி -44, ஸ்மித் - 10. இன்று இலங்கை - வெஸ்ட் இன்டீஸ் மோதல் [^] இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன.

உங்கள் கணினிக்கான சிறந்த "ஆண்டி வைரஸ்" எது?

ம் கணினியில் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களை ஆய்வு செய்து தரவரிசை கொடுத்துவரும் "www.av-comparatives" நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதில் ஆண்டி வைரஸ் மென்பொருட்களை தயாரிக்கும் 16 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் முடிவின்படிசிறந்த வேலை செய்யும் ஆண்டி வைரஸாக GDATA முதலிடத்திலும் AVIRA இரண்டாவது இடத்திலும் McAfee மூன்றாவது இடத்திலும் உள்ளன. இவைகள் எல்லாமே காசுகொடுத்து வாங்கி பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களின் தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. தர விபரங்களை "பி.டி.எப்" பார்மட்டில் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்யுங்கள். தேங்க்ஸ்-தமிழ்மணம்

ஐஸ்லாந்தில் நயனதாரா!

ஆதவன் படப்பிடிப்புக்காக சூர்யாவும், நயனதாராவும் ஐஸ்லாந்து போய் வந்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆதவன். ரெட் ஜயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, நயனதாரா இணைந்து நடிக்கின்றனர். கஜினிக்குப் பின்னர் நயனதாராவுடன், சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடலுக்காக ஐஸ்லாந்து போய் திரும்பியுள்ளது ஆதவன் படக்குழு. ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. காரணம், இதுவரை எந்தத் தமிழ்ப் படக் குழுவும் ஐஸ்லாந்துக்குப் போனதே இல்லையாம். தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு ஆடிப் பாடத்தான் சூர்யா, நயனதாரா ஐஸ்லாந்து போனார்களாம். இன்னொரு பாடலை டார்ஜிலிங்கில் வைத்து ஷூட் செய்தனராம்.

16 ஜூன் 2009

டோணிக்கு செய்த தவறுகள் என்ன?-ரசிகர்கள் குமுறல்

ராஞ்சி: டுவென்டி 20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் மோசமாக ஆடி வெளியேறியதால் கேப்டன் டோணி மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சொந்த ஊரான ராஞ்சியில் டோணியின் கொடும்பாவியை எரித்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர் ரசிகர்கள். வெறும் 3 ரன்களில் சூப்பர் எட்டு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்தியா. நடப்புச் சாம்பியனான இந்தியா இந்த முறை, அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் முடங்கிப் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கேப்டன் டோணியின் சில தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைய நேரிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர். டோணி மூன்று தவறுகளை செய்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அது - 1. பவுன்சர்களை சந்திக்கவே பயந்த ரவீந்திர ஜடேஜாவை 4வது வீரராக இறக்கியது மாபெரும் தவறு. அவருக்குப் பதில் யூசுப் பதானையோ அல்லது யுவராஜ் சிங்கையோ இறக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும். 2. சிறப்பாக பந்து வீசி வந்த ஆர்.பி.சிங்கையும், அனுபவம் வாய்ந்த ஜாகிர்கானையும் தொடர்ந்து பந்து வீசச் செய்யாமல், இஷாந்த் சர்மாவை கூப்பிட்டது 2வது தவறு. சிங்கும், கானும் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். 3. முக்கியமான கட்டத்தில், கையில் ஐந்து விக்கெட்கள் இருந்த நிலையிலும் அடித்து ஆடாமல் சிங்கிள் சிங்கிள் ரன்னாக டோணி எடுத்ததை ரசிகர்கள் படு கோபத்துடன் விமர்சிக்கின்றனர். இதை கருத்தைத்தான் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கூறியுள்ளனர். டோணியின் தவறுகள்தான் ஆட்டத்தின் போக்கை குளறுபடியாக காரணம் என்கிறார்கள் அவர்கள். இந்த நிலையில், டோணிக்கு எதிராக ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரசிகர்கள் டோணிக்கு எதிராக கோஷமிட்டு அவரது கொடும்பாவியை எரித்தனர். இதேபோல உ.பியிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!

பரீட்சைக்குத் தயாராகும் மாணவன் ஒருவன் ஒவ்வொரு காலத்திலும் பாடும் சிச்சுவேசன் சாங்ஸ் இவை. சில இடங்களில் சில பாடல் வரிகளை மாற்றியுள்ளேன். எல்லாம் ஒரு அனுபவம்தான்.
  • செமிஸ்டர் ஆரம்பத்தில்..
காலேஜூக்குப் போவோம், கட்டடிக்க மாட்டோம்…
  • பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….
  • பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
ஊருசனம் தூங்கிருச்சு, ஊத காத்தும் அடிச்சிரிச்சு, பாவிப்பய தூங்கலியே, படிப்பும் இன்னும் முடியலியே.
  • பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
நாடகம்விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...
  • பரீட்சையின் போது…
ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
  • பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு..
  • இறுதியில்..
வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்

Task Manager -இன் பயன்பாடுகள்.

வழக்கமாக விண்டோஸ் எக்ஸ்பியில் Task Manager ஐ நாம் 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம். டாஸ்க் மேனேஜருக்கு செல்ல கீழ்கண்ட வழிகள் உள்ளன. 1. Ctrl + Alt + Del. 2. Ctrl + Shift + Esc 3. Task Bar-ல் காலியாக உள்ள இடத்தில் மௌசின் வலது பொத்தானை அழுத்துவதன் மூலம். டாஸ்க் மேனேஜரில் 'Applications, Processes, Perfomance, Networking' மற்றும் 'Users' டேபுகள் உள்ளன. Applications:- நமது கணினியில் தற்பொழுது இயங்க்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஒருசில அப்ளிகேஷன்கள் 'Not Responding' என வரும்பொழுது, இங்குள்ள பட்டியலில் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஷிப்ட் கீயை அழுத்தி தேர்ந்தெடுத்து பின் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை வலது கிளிக் செய்து அதில் Go to Process கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் EXE file -இன் மெமரி உபயோகத்தை அறிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் பெயரும் exe பைலின் பெயரும் மாறுபடலாம். ஒரு ஃபோல்டரிலிருந்து மற்றொரு ஃபோல்டருக்கு கோப்புகளை டிராக்(Drag) செய்யும் பொழுது, அந்த இரு விண்டோக்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஓவர்லேப் ஆகாமல் சரியாக Tile மோடில் arrange செய்யப்பட்டிரா விட்டால் சிரமமாக இருக்கும். அதற்கு ஒரு எளிய வழி விண்டோஸில் இங்கு மட்டுமே உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோக்களை ஒன்றின்மீது மற்றொன்று வராமல் திரையில் ஒரே அளவில் வரிசைப்படுத்த, அந்த அப்ளிகேஷன்களை, Applications tab- ல் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்து 'Tile Horizontally / Vertically' என்பதை தேர்வு செய்யலாம். Processes:- இந்த டேபில், நம் கணினியின் பிராசஸரையும், மெமரியையும் எந்த பிராசஸ் எவ்வளவு உபயோகிக்கிறது என்பது இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். CPU / Mem usage - Tiltle லில் கிளிக் செய்வதன் மூலம் அஸென்டிங்/டெஸென்டிங் மாறிக்கொள்ளலாம். தேவையில்லாத அல்லது அதிக மெமரியை உபயோகிக்கும் எந்த ப்ராசஸையும் வலது கிளிக் செய்து End Process செய்யலாம். தற்பொழுது வரும் சில வைரஸ் மற்றும் வெர்ம்கள் ஒரு ப்ராசஸ் ஆகவே அமர்ந்து கணினியின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதுபோன்ற ப்ராசஸ்களையும் இனம் கண்டு End Process செய்து விடலாம். (உதாரணம்: Svcchost, msblast.exe, Wowexec.) வழக்கமாக நாம் மினிமைஸ் செய்யும் அப்ளிகேஷன்கள் சில சமயங்களில் RAM இல் சிறிதும் மற்றவை Virtual memory க்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. virtual memory யில் எவ்வளவு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் மற்றும் CPU, Mem usage தவிர பிற உபயோகங்களை டேபில் சேர்க்க View menu விற்கு சென்று Select Column கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம். Performance:- இந்த டேபில் CPU/ Memory usage ஆகியவற்றை வரைபடம் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். டிப்ஸ்:- தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும். Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள் சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.

ஸ்டைல்! ஸ்டைலஸ்டைல்...!

இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் (முடி இருந்தால்). ;-)
எனக்கு பொதுவாக லேட்டஸ்ட் ட்ரெண்ட்களில் ரொம்ப ஆர்வம், உடை தேர்விலும் எனக்கு நல்ல ரசனை. என் நண்பர்களுக்கு நான் தான் உடை தேர்வாளர், உடை எடுக்க வேண்டும் என்றால் அனைவரும் என்னை அழைத்து செல்வார்கள் அவர்கள் மனைவி மற்றும் அம்மாவிற்கு என்றால் கூட.
பெண்களுக்கும் உடை தேர்வு செய்வதில் சிறப்பாகவே தேர்வு செய்வேன், என் மனைவி அக்கா மற்றும் அம்மாவிற்கு அவர்களின் வயதிற்கு தகுந்தமாதிரி தேர்வு செய்வேன், அதனால் அவர்கள் திருமணங்களில் இதை அணிந்து சென்றால் யாரும் கேட்கும் போது இதை தம்பி தான் எடுத்துக்கொடுத்தான் என்றால் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இதை அவர்கள் என்னிடம் கூறுவார்கள், நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்று. ஆஹா! நம் தேர்வுக்கு இத்தனை ரசிகர்களா என்று கொஞ்சம் பெருமையாக தான் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது உடை பற்றி அல்ல ஹேர் ஸ்டைல் பற்றி. ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் ஒரு ஸ்டைல் ல வருவாரு, கவுண்டர் அதை பார்த்து விட்டு டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்கு என்று நக்கல் செய்வார். அப்போது அது கிண்டலாக தெரிந்து இருந்தாலும் தற்போது மேலை நாடுகளில் அது தான் தற்போதைய லேட்டஸ்ட் ஃபாஷன். எனக்கும் சிங்கப்பூர் ல் வந்த புதிதில் என்னடா! இப்படி முடிய வெட்டிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க என்று சிரிப்பாக இருந்து. தற்போது அதை பார்த்து பழக பழக அதுவும் நன்றாகவே உள்ளது. இதை நம்மில் பலரால் ஏற்று கொள்ள முடியாது, காரணம் நாம் இன்னும் அந்த அளவிற்கு மனதளவில் தயாராகவில்லை.
இங்கே நாம் சில ஹேர் ஸ்டைல் பற்றி பார்ப்போம், இது தற்போது படித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு கிண்டலாகவும் நக்கலாகவும் தெரிந்தாலும் விரைவில் நம் ஊரிலும் இதை போல ஹேர் ஸ்டைல் வரப்போகிறது, ஏற்கனவே ஒரு சிலர் "இப்படி" இருக்கிறார்கள். இத்தகைய ஹேர் ஸ்டைல் க்கு ஒரு பிரச்சனை கொஞ்சம் கலராகவும் முடி ஸில்க்கியாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு செக்ஸி லுக் கிடைக்கும் (நாம் என்ன பெண்களா! செக்ஸி லுக் வர என்று கேட்டால் உங்களுக்கு ரொம்ப வயதாகி விட்டதாக அர்த்தம்).
ஸ்டைல் என்றவுடன் நினைவிற்கு வருவது சூப்பர் ஸ்டார் தான். ரஜினியின் ஹேர் ஸ்டைல் (தற்போது காலி ஆகி விட்டது) பலரால் விரும்பப்பட்டது, ஆனால் இந்தியாவில் நடிகர்களில் ஹேர் ஸ்டைல் என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அமீர் கான் தான். பல வித விதமான ஹேர் ஸ்டைல்களை தனது படங்களில் அறிமுகப்படுத்தி இருப்பார். கவனிக்க தக்க முதல் படம் என்றால் "தில் சாத்தா ஹை" பற்றி குறிப்பிடலாம். கஜினி தமிழில் ஏற்கனவே சூர்யா மொட்டை முறையில் ஹேர் கட் செய்து இருந்தாலும், அதை அமீர் கான் செய்த போது கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்தது.
மேலை நாடுகளில் ஹேர் ஸ்டைல் பலரால் விளம்பரப்படுத்தப்பட்டாலும் கால்பந்து விளையாட்டு மன்னன் டேவிட் பெக்காம் குறிப்பிடத்தக்கவர், இவருடைய ஹேர் ஸ்டைல் உலக அளவில் பிரபலம். கால்பந்து விளையாட்டில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போல இவரது ஹேர் ஸ்டைல் க்கும் உலகளவில் பல ரசிகர்கள், இவரது ஸ்டைல் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
டேவிட் பெக்காமின் இந்த ஹேர் ஸ்டைல் ற்கு ஏகப்பட்ட ரசிகர்கள், குறிப்பாக பெண்கள். பல பெண்கள் இவர் மேல் பைத்தியமாக இருக்கிறார்கள், அதற்க்கு இதை போன்ற செக்ஸி ஹேர் ஸ்டைல் முக்கிய காரணம். ஆளும் பெர்சனாலிட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.
இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டைல், ஸ்பைக் ஸ்டைல் னு சொல்லுவாங்க இதை. இதை நம்ம ஊர்ல மேல் தட்டு மக்கள் ஒரு சிலர் வைத்து இருக்கிறார்கள், ரொம்ப casual ஆக இருக்கும்.
எனக்கு விதவிதமா ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்துக்கணும் என்று ரொம்ப ஆசைங்க ஆனால் அந்த அளவிற்கு அடர்த்தியா முடி இல்லைன்னு வருத்தபடுகிறவங்க இந்த மாதிரி ஷார்ட்டா வைத்துக்கொள்ளலாம். இந்த ஹேர் ஸ்டைல் கருப்பா ஒல்லியா இருக்கிறவங்க வைக்க முடியாது, நன்றாக இருக்காது. அதையும் மீறி வைத்தால் காதல் படத்தில் ஹீரோ வாய்ப்பு கேட்டு வருவாரே ஒருத்தர் அவரை போல இருக்கும் :-) தேவையா! மனதை தேத்திக்குங்க ;-)
இது தாங்க நம்ம கவுண்டர் கிண்டல் செய்த ஹேர் ஸ்டைல். இதை போல சிங்கப்பூர் ல பல பேர் வைத்து இருக்காங்க, முதலில் என்னவோ போன்று தெரிந்தாலும் இப்போது இது பிடித்து விட்டது. நம்ம ஊர்ல இதை போல வர ரொம்ப காலம் ஆகும், இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்களிடையே மன பக்குவம் இல்லை.
இந்த ஹேர் ஸ்டைல் வைக்க உங்களுக்கு உங்க முடி ஸில்க்கியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம், அப்புறம் கொஞ்சம் கலராக இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு ரிச் லுக் இருக்கும். இதை போல ஹேர் ஸ்டைல் பெண்களை (girls) கவரும்.
இந்த வகை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள நம்ம ஊரில் எந்த தடையும் இல்லை, யாரும் எதுவும் கூற மாட்டார்கள். எனவே தாராளமாக வைத்துக்கொள்ளலாம். வெய்யில் காலங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். உடற்பயிற்சி உடம்பாக இருந்தால் ஸ்மார்ட்டாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் தற்போது வித விதமா அவர்களது பெற்றோர்கள் ஹேர் ஸ்டைல் பண்ணுறாங்க, ஒருவேளை தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் செய்து கொள்கிறார்களோ என்னவோ. ஹி ஹி என் பையன் நிலைமைய நினைத்தால் தான் பாவமா இருக்கு..:-)) தற்போது சலூன் களில் குழந்தைகளுக்கு என்றே பலவிதமாக ஹேர் ஸ்டைல் உண்டு. குழந்தைகளுக்கு எந்த மாதிரி முடி வெட்டினாலும் அழகு தான், அதுவும் ஸில்க்கியான முடியாக இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை.
இந்த ஹேர் ஸ்டைல் குழந்தைகளுக்கு ரொம்ப அழகா இருக்கும், நம் ஊர் வெய்யில் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு தலை விரைவில் வேர்த்து சளி பிடித்துக்கொள்ளும். எனவே அதிகளவில் முடி வைக்க முடியாது.
என் பையனுக்கு முடி இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லை, வெட்டினால் இப்படி தான் கத்துவான் ஹா ஹா ஹா.
டிஸ்கி
நமக்கு பிடித்த எந்த ஹேர் ஸ்டைல் ம் வைக்கலாம், அதெல்லாம் வைக்கும் முன்பு நம் உடலுக்கும் நம் கலருக்கும் உயரத்திற்கும் ஏற்றதா எனபதை ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. ஆசை படுவதில் தவறில்லை ஆனால் அதற்க்கு பொருத்தமானவரா நாம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?

தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை இன்னும் ஆறுமாதம் கழித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நடிகர் விஜய். விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்கள் [^] அனைவரையும் கூட்டி தனி மாநாடு [^] நடத்தவும், அன்றே புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும். உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம். இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர். ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் [^] வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், இப்போதைய அரசியல் சூழல் நடிகர்களுக்குச் சாதகமாக இல்லாமலிருப்பதும், விஜய்யால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத நிலையும்தான் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் ரசிகர்களில் பலருக்கும், புதுக் கட்சிக்கு தலைவராக எஸ் ஏ சந்திரசேகரனை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லையாம். மாவட்ட அளவில் பொறுப்புகளைப் பெறுவதில் சிலர் கடுமையாக மோதிக் கொண்டாலும், சென்னை போன்ற பகுதிகளில் அரசியல் [^] கட்சிக்கு கைக்காசை செலவழிக்க யாருமே தயாராக இல்லையாம். இதையெல்லாம் சரிப்படுத்தி, 6 மாதங்களுக்குப் பின்னர், விஜய் வெற்றிப் படம் கொடுத்த பிறகு கட்சி பற்றி தீவுத் திடலில் கூட்டம் கூட்டி அறிவிக்கப் போவதாக நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன்.

14 ஜூன் 2009

PC 2 Phone for Free - Evaphone

PC 2 Phone free
Do you want to make call to a telephone using your PC for free? Evaphone provides free service to make PC 2 Phone calls absolutely free. It is called Internet telephony. It uses VoIP technology. This free service comes with advertisements. You may also go for paid service from Evaphone. It wont show any advertisement. We do not need to download any special software from the internet to use this service. We can directly make calls using our favourite browser. Mic, Headset is the essential equipments needed to make calls. That site has all the details about free calls. Check it out there : http://www.evaphone.com/
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com