அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட 'மம்மா மியா' என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி.
ஒரு மகள் தன் தந்தையைத் தேடுவது போன்ற ஒரு நாடகத்தை நாட்டியமாக நேற்று அரங்கேற்றினார் வரலட்சுமி.
இந்த நடன குழுவில், வரலட்சுமி உள்பட 50 பேர் நடனமாடினர்.
நடன நாட்டியத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகடமியில் 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்தபடி வரலட்சுமி ஆடியபோது, அரங்கம் அதிர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். ராதிகாவின் தங்கை நிரோஷா, கணவர் ராம்கியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
நடன நிகழ்ச்சியின் முடிவில் சரத்குமார், ராதிகா, ராம்கி ஆகியோரும் மேடையில் நடனம் ஆடினர்.
இந்த நடன நாட்டியத்தை தொடர்ந்து நடத்த உள்ளார் வரலட்சுமி.
08 ஜூலை 2009
மம்மா மியா: சரத் மகள் அசத்தல் நடனம்!
அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட 'மம்மா மியா' என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி.
ஒரு மகள் தன் தந்தையைத் தேடுவது போன்ற ஒரு நாடகத்தை நாட்டியமாக நேற்று அரங்கேற்றினார் வரலட்சுமி.
இந்த நடன குழுவில், வரலட்சுமி உள்பட 50 பேர் நடனமாடினர்.
நடன நாட்டியத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகடமியில் 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்தபடி வரலட்சுமி ஆடியபோது, அரங்கம் அதிர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். ராதிகாவின் தங்கை நிரோஷா, கணவர் ராம்கியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
நடன நிகழ்ச்சியின் முடிவில் சரத்குமார், ராதிகா, ராம்கி ஆகியோரும் மேடையில் நடனம் ஆடினர்.
இந்த நடன நாட்டியத்தை தொடர்ந்து நடத்த உள்ளார் வரலட்சுமி.
செக்ஸுக்கு நான் ரெடி - மினிஷா
கைட்ஸ் ஒரு ரொமான்டிக் படம். சமீப காலத்தில் இப்படி ஒரு ரொமான்டிக்கான படம வந்ததில்லை என்று கூறலாம்.
செக்ஸ் குறித்த பாலிவுட்டின் பார்வை விரைவில் மாறி விடும். எனக்கு 15 வயதாக இருக்கும்போது எனது அம்மாவிடம் செக்ஸ் குறித்து விரிவாக கேட்டறிந்தேன்.
ஒரு காதலன், காதலி அல்லது கணவன், மனைவியின் தனிமையான தருணங்களின்போது அழகு மிளிரும். அதை அப்படியேதான் சினிமாவில் காட்ட முடியும். அப்படி காட்டினால்தான் அது இயற்கையாக இருக்கும்.
யாராவது என்னிடம் செக்ஸ் குறித்துப் பேச முன்வந்தால் நான் தயக்கமே காட்ட மாட்டேன். அந்த சப்ஜெக்ட் குறித்து வெளிப்படையாக, விரிவாக பேச நான் தயார் என்கிறார் மினிஷா.
கோலிவுட்டில் எல்லோரும் 'திரிஷா' காலத்தில் இருக்கிறோம். மினிஷாவோ, விட்டால் 'மினி ஷோ'வே நடத்திக் காட்டி விடுவார் போல..!
Floorball - Floor Hockey - Innebandy - சுவீடன் அனுபவங்கள்
ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது.
சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று.
இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம்.
கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது.
மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது.
ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசி!
'லக்' படம் 24-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஸ்ருதி கமல் ஒரு பாடலும் பாடி உள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மும்பையில் வெளியிடப்பட்டன.
பாடல் வெளியீட்டுக்கு முன், அதை மேடையில் நடனமாக வெளிப்படுத்திய ல்ருதிக்கு பலத்த கைத்தட்டல்கள் பரிசாகக் கிடைத்தன.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
லக் படத்தின் கதை மிக வலுவானது. நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தை இயக்குனர் சோகம் ஷா பிரமாண்டமாக எடுத்துள்ளார். கதை நன்றாக இருப்பதால் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை கமல்ஹாஸன் அளித்த ஊக்கம்தான் காரணம். நான் ஒரு நடிகையாக உருவானதற்கு அவர்தான் காரணம். அவரது நடிப்பு திறமையை கண்டு நான் பல தடவை பிரமித்துப் போய் இருக்கிறேன்.
சிறு வயதில் நான் அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்புக்கு சென்று அப்பா நடிப்பதை பார்த்தேன். அவர் குள்ளர் வேடத்தில் நடிப்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்துதான் நான் கடின உழைப்பு விடா முயற்சியை கற்று கொண்டேன். அவரது நடிப்பை யாரும் காப்பியடிக்க முடியாது.
அவர் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயமாட்டார்.
நான் ஹே ராம் படத்தில் அப்பாவுக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்தேன். ஆனால் அந்த படத்தை சில பத்திரிகைகள் மோசமாக விமர்சனம் செய்திருந்தன. அதைப் பார்த்த போது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
சிறு வயதில் நான் அப்பாவிடம் படங்களுக்கு பாடல் ஒலிப்பதிவு நடக்கும் ரிக்கார்டிங் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பேன். அப்போது அவர் என்னை இளையராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது என்னைப் பார்த்த இளையராஜா, "இவள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக வருவாள்" என்று கூறினார். அதற்கு அப்பா, "எதை வைத்து ?" என்று கேட்டார். அதற்கு, "பெயரிலேயே ஸ்ருதி இருக்கிறதே... நான் சொல்கிறேன். இவள் ஒரு பெரிய பாடகிதான்", என்றார். இளையராஜாவின் அந்த பாராட்டை ஒரு போதும் மறக்க முடியாது.
என் அப்பா இதுவரை என்னை ஒரு தடவை கூட திட்டியது இல்லை. அந்த அளவுக்கு நான் அவரிடம் நடந்து கொண்டதும் இல்லை. என் மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கை வீண் போகாது," என்றார் ஸ்ருதி ஹாசன்.
வருங்கால தொழில்நுட்பம் 1 : சிலிக்கான் வேலி & ட்விட்டர்
வருடம் 1986...
தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை +1ல் அறிமுகப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் தமிழ் மீடியம் மட்டுமே உள்ள
பள்ளியின் நிர்வாகம் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் பாடம் ஆரம்பித்தது. எண்ணி ஏழு பேர் அந்தப் பிரிவில் சேர்ந்தோம் (திருச்செந்தூர் அருகிலிருக்கும் மணப்பாடு ஓர் அழகிய கடற்கரை கிராமம். மேலும், விவரங்கள் அறிய www.manavai.com).
அறிமுக வருடம் என்பதால் பாடப் புத்தகம் இல்லை. சொல்லித் தர ஆசிரியர் எவரும் உடனடி யாகக் கிடைக்கவில்லை. செட்டில் இருவர் மாணவியர் என்பதால், ஆசிரியர் இல்லாத வகுப்பு நேரங்கள்... இந்த நாட்களில் மொக்கை என்று அழைக்கப்படும் கடலை வறுத்தல்களில் கழிந்து போனது. 4 மாதங்களுக்குப் பின் சிக்கிய ஒரு ஆசிரியர் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். ஒரே ஒரு பிரச்னை, எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் என்ற வஸ்துவே கிடையாது. தீவிர முயற்சிக்குப் பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தூத்துக்குடியிலிருந்து Commodore என்ற கம்ப்யூட்டரும், அதை இணைக்கத் தேவையான கறுப்பு-வெள்ளை மானிட்டரும் வாடகைக்கு எடுத்துவரப்பட்டது. 82-ல் வெளியிடப்பட்ட Commodore அந்த நாட்களுக்கு ரொம்பவே அட்வான்ஸ்டு. அதில் அறை குறையாக எழுதி Commodoreயை XXXXXXXXXX என அலறவிட்டதும் பளிச்.
இதையெல்லாம்விட மனதில் அச்சாகப் பதிந்த விஷயம். கம்ப்யூட்டர் துறையில் தமிழ் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தாத அந்த நாட்களில், 'CPU என்றால் சென்ட்ரல் பிராசஸிங் யூனிட். இது கம்ப்யூட்டரின் மைய செயல்பாட்டைக் கவனிக்கும். இதற்கு மெமரியும் தேவை' என டெக்னோ மணிப்பிரவாள நடையில் எழுதிய தேர்வு பதில்கள்!
22 வருடங்களுக்குப் பிறகு...
சென்ற மாதத்தில் மௌன்டன்வியூவில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் 'மேகக் கணினியம்' (Cloud Computing) பற்றிய வட்ட மேசை விவாதத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டு இருந்தேன். 20 வருடங்களுக்கு முன் சுஜாதாவின் 'சிலிக்கான் சில்லு புரட்சி' தொடரைப் படிக்க வாரந்தோறும் காத்திருந்த நினைவலைகள் மனதில் மோதியபடி இருக்க, வடக்கு US 101 சாலை யில் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ செல்ல வேண்டும். ஒரு எக்ஸ்பிரஸ் அறிமுகம்....
சிலிக்கான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் கலிஃபோர்னியா மாநிலம், புது தொழில் முனை வோரை 100 வருடங்களுக்கும் மேல் ஈர்த்து வந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்த தங்கத் தோண்டல் மோகம் ஆயிரக்கணக்கான மக்களை கலிஃபோர்னியா பக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. இவர்களின் தேவைகளுக்காகக் கட்டப்பட்டதுதான் சான்ஃபிரான்சிஸ்கோ. சிலிக்கான் பள்ளத்தாக்கு உருவானதும் மிகத் தற்செயலாக!
இங்கே இருக்கும் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு 70-களின் தொடக்கத்தில் எக்கச்சக்க நிதி நெருக்கடி. அதைச் சமாளிக்கத் தனக்குச் சொந்தமான நிலங்களை சில டெக்னாலஜி கம்பெனிகளுக்கு நீண்ட காலக் குத்தகையில் கொடுத்தது. அடுத்த சில வருடங்களில், இன்டெல் சிலிக்கான்கொண்டு செய்த தனது முதல் மைக்ரோ பிராசஸரை வெளியிட, பிறந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு.
ஆப்பிள், ஆரக்கிள், ஹெச்பி, சிஸ்கோ, யாகூ, கூகுள் எனக் கடந்த 40-க்கும் மேலான வருடங்களாகத் தொடர்ந்து தரமான நிறுவனங்களை உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கு சந்தேகமே இல்லாமல் சர்வதேசத் தொழில்நுட்பத் தலைநகரம். இன்று, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள்; 20 லட்சத்தைத் தொடும் பணியாளர்கள்; உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கின் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான் பள்ளத்தாக்கு தான்.
சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே, ஹைடெக் தொழில் கனவுகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ், பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே. எங்காவது ஒரு கார் ஷெட் சின்ன வாடகையில் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, அங்கேயே உறங்கி, உணவருந்தி, உழைத்துத் தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள். வெற்றியடைந்தால், தொழில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று புது நிறுவனம் ஒன்றை நிறுவ வாய்ப்பு. தோல்வியடைந்தால், கவலை இல்லை... கஜினி போல மீண்டும் மீண்டும் முயலலாம். அல்லது செய்த முயற்சியையும் தோல்வி யையும் பெருமையாக ரெஸ்யூமில் சேர்த்து மற்ற ஒரு நிறுவனத்தில் சேரலாம்.
இன்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் ஆப்பிள் தொடங்கி கூகுள் வரை இந்தப் புள்ளிகளில் துவங்கி யவைதான். உதாரணத்துக்கு, ட்விட்டர் (Twitter -பற்றிய தகவல்கள் பெட்டிச் செய்தியாக). 2006-ல் தொடங்கப்பட்ட இந்த நுண்வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணி நேரமும் லட்சக்கணக்கானோர் சுருக்க வலைப்பூ எழுதுகிறார்கள். இன்றைய நிலவரத்தில், ட்விட்டர் பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டபடியே இருக்கிறது. எப்போது, எப்படி லாபகரமாக மாறும் என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் முடங்கி நிற்கும் நிலையில், இது போன்ற நிறுவனம் என்றோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழில் முதலீட்டாளர்களுக்கு அது பெரிய பொருட்டு இல்லை. காரணம், ட்விட்டர் என்பது ஷங்கர் படம் போல, ஒரு பிரமாண்ட ஐடியா. எப்படியும் அது வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை.
'எல்லாம் ஓ.கே. ஆரம்பிக்கும்போது 'மேகக் கணினியம்' அப்படின்னு ஏதோ சொன்னியே, அது இன்னா?' என்ற கேள்வி எழுந்தால், உங்களது நினைவுத்திறனுக்குப் பாராட்டுக்கள்.
'கணினித் திறன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காகியபடி செல்லும்!' - இன்டெல் நிறுவனரான ராஜர் மூர் 1965-ல் சொல்லியது இன்று வரை உண்மை. இணையம் நம் வாழ்வில் இடம் பிடித்த பிறகு, வலைதளங்களை இயக்கத் தேவையான கணினித் திறனை எளிதாகப் பெறுவது எப்படி என ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது. 'இணையம் என்பதே பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களின் இணைப்புதானே... அதையே பயன்படுத்தி, தேவைப்படும் கணினித்திறனைப் பெற்றுக்கொண்டால் என்ன?' என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் 'மேகக் கணினியம்'. இன்டெர்நெட்டுக்கு அமெரிக்காவில் இன்னொரு பெயர் – Cloud.
'இதனால் சாதாரண பப்ளிக்கான எனக்கென்ன பயன்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். மிகவும் பயன் இருக்கிறது. அதை அடுத்த க்ளிக்கில் பார்க் கலாம்!
'ஐ.டி. இண்டஸ்ட்ரியே விழுந்திருச்சே... அப்புறம் இன்னாத்துக்கு இதெல்லாம்?' என்கிறீர்களா... அதற்கும் இருக்கு ஒரு ஸ்வீட் ட்விஸ்ட்!
புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி, இப்போது சிட்டுக்குருவியில் வந்து நிற்கிறது. நறுக்கென்று 140 எழுத்துக்களில் 'இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்பதை ட்விட்டரில் தட்டினால், அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில்நுட்பத்தைச் சமீபத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட பிரபலம், பராக் ஒபாமா! அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வாக இருக்கும். ஆனால், 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (ஒபாமாவின் ட்விட்டர் முகவரி: அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல, அண்ணாச்சி ராதாகிருஷ்ணனுக்கும் ட்விட்டரால் பயன் உண்டு. காரணம், ட்விட்டரைத் தனிமனிதர்கள் மட்டுமன்றி நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. தனக்குப் பிடித்த நிறுவனங்களின் ட்விட்டுகளின் தொடர்பாளராக (follower) தன்னைப் பதிவுசெய்துகொண்டால், அந் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ராதாகிருஷ்ணனுக்கு திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மிகவும் பிடிக்கும். இருட்டுக் கடைக்காரர்கள் தங்களுக்கென ஒரு ட்விட்டர் முகவரி வைத்திருந்து, ராதாகிருஷ்ணன் அதில் பதிவு செய்துவைத்திருந்தால் சுடச்சுட அல்வா கடைக்கு வரும் நேரத்தை ராதாகிருஷ்ணன் தெரிந்துகொண்டு முதல் ஆளாகக் கடையில் நிற்கலாம். அன்றைய அல்வாவில் கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தோன்றினால், அதை அவர் தனது ட்விட்டரில் எழுதலாம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். லட்சக்கணக்கான மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் திறனை இதுவரை வேறு எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்ததில்லை! |
06 ஜூலை 2009
* Home * Videos * About * Contact Me Blog Search ˜”*°•TamilhackX•°*”˜ எளிய தமிழில் கணணி சம்பந்தமான கட்டுரைகள், மென்பொருள் தரவிறக்கம்,
ஓரினச் சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு வரவேற்பு!
தங்களது விருப்பப்படி மக்கள் வாழ இந்த தீர்ப்பு வகை செய்கிறது. சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை இந்த தீர்ப்பு நாட்டில் வளர்க்கும்.
நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் மாற்றங்களை எளிதில் ஏற்க மாட்டார்கள். இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்னை மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.
ஏற்கனவே செக்ஸ் குறித்து கருத்து தெரிவித்து எக்கச்சக்க பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் குஷ்பு. இந்த நிலையில் சென்னை மக்கள் மாற வேண்டும், இந்தத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியிருப்பதால் புதிதாக சர்ச்சை எழுமோ, என்னவோ தெரியவில்லை...
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைப்பின்னல்
கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps), ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சமூக வலைப்பின்னல் (Social Network) தளத்தை தொடங்கியிருக்கிறது இதன் பெயர் “Windows Live Planet“.

இந்த புதிய சமூக வலைப்பின்னலில் உங்கள் Hotmail அல்லது Live பயனர் கணக்கின் மூலமாக உள்ளே நுழைந்து புதிய நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம், அரட்டை, துனுக்குள் என சகல வசதிகளுடன் வந்திருக்கிறது.

இதில் முக்கியமான சிறப்பு Live Messenger சேவையை Windows Live Planetல் மைக்ரோசப்ட் நிறுவனம் உள் புகுத்தியுள்ளது, இதனால் உங்கள் நண்பர்களிடம் அல்லது குடும்பத்தினருடன் Live Messenger இல்லாம்லேயே எங்கும் அரட்டை அடிக்கலாம்.
புளோராவின் லிப் லாக்!
இப்போது அவர் முழு நீள கவர்ச்சியில் உச்சகட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஜெமினி.
இது ஒரு திரில்லர் படம். படத்தில் புளோராவின் காட்சிகள் எல்லாம் கண்காட்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு கிளாமரை வாரி இறைத்துள்ளாராம்.
குறிப்பாக ஜெமினியும், புளோராவும் ஒரு லிப்லாக் காட்சியிலும் களை கட்டியுள்ளனராம். சிங்கிள் முத்தக் காட்சிதான் என்றாலும் கிட்டத்தட்ட 10 டேக்குகள் வாங்கி விட்டாராம் ஜெமினி.
தயங்கித் தயங்கி அவர் முத்தம் கொடுத்ததால் (நெசமாவா..???) காட்சி சிறப்பாக வரவில்லையாம். இதனால் கிட்டத்தட்ட 10 டேக் போன பின்னர்தான் முத்தம் ஓ.கே. ஆனதாம். புளோரா சைடிலிருந்து எந்தவிதத் தயக்கமும் இல்லையாம். ஜெமினிதான் சற்று பதட்டமாகி விட்டாராம்.
இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக மிஸ் பெங்களூர் ஸ்வாதியும் இருக்கிறார்.
தகப்பன்சாமி படத்தைத் தயாரித்த கோபால்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் முக்கிய வில்லனாகவும் அவரே நடிக்கிறார்
உயிரைக் குடிக்குமா ரிமோட்?
நடந்தது என்ன..? இதோ அவரே விளக்கு-கிறார்... ''நான் எப்போதாவது ஒரு முறைதான் காரைப் பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் முன்பு காரை நிறுத்திவைப்பேன். கடந்த மே 27-ம் தேதி காரில் வெளியே போய் வந்த நான், எப்போதும் போல காரை கோயிலுக்கு அருகே நிறுத்தி, ரிமோட் மூலம் லாக் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு எனக்குப் பல நாட்கள் கார் தேவைப்படவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் இரண்டாம் தேதி வெளியே செல்வதற்காக காரை எடுக்கச் சென்-றேன். காரை நோக்கி நடக்கும்போதே, 'காருக்கு அருகே குடலைப் புரட்டும் துர்நாற்றம் எடுக்கிறது' என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எலி ஏதாவது செத்துக் கிடக்கும் என்று நினைத்தபடி காரின் கதவைத் திறந்தேன்... காருக்குள்ளே நான் கண்ட காட்சி அதிர வைத்தது. பூட்டிய காருக்குள் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து செய்வதறியாது திகைத்துவிட்டேன். அந்தப் பதற்றத்துடனேயே போலீஸ§க்கு போன் செய்தேன். போலீஸார் விசாரணை செய்தார்கள்... நடந்ததைச் சொன்னேன். காரின் உள்ளே இருந்த பிணம், அடையாளம் காண முடியாத அளவுக்குப் புழு பிடித்து சிதைந்து போய்விட்டது... இது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை!'' என்றார் பயம் அகலாமல். நாம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் இது பற்றிக் கேட்டோம். ''காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்திருக்கிறார். லாக் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அன்-லாக் பட்டனையேகூட அழுத்தி இருக்கக்கூடும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும், அன் - லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. என்றாலும், இதைக் கவனமாகக் கேட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்ல, முத்துக்குமாரசாமி கார் போன்று செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களை கள்ளச் சாவி போட்டுத் திறந்தால்கூட ஒரிஜினல் சாவி இல்லாமல் அதை ஐம்பது மீட்டருக்கு மேல் ஓட்டிக்கொண்டு போக முடியாது. இந்தக் காரணத்தினாலேயேகூட காரின் உரிமையாளரான முத்துக்குமாரசாமி அலட்சியமாக இருந்திருக்கலாம். இறந்து கிடந்தவரின் உடலைப் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கலப்படமான உணவு சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவத்தன்று, காரைத் திறந்து உள்ளே போயிருப்பார், உள்ளே சென்று கதவை மூடியதும் அது லாக் ஆகி இருக்கும். உள்ளே இருந்து கார் கதவைத் திறப்பது எப்படி என்று தெரியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் போராடி இறந்துள்ளார்'' என்றார் கண்ணன். மனிதக் கைகளில் ஆறாவது விரலாக நீண்டுவிட்டது ரிமோட். எலெக்ட்ரானிக் உபகரணங்களில் தவறே நிகழாது என கூற முடியாது. காரை ரிமோட் மூலம் லாக் செய்தவர், அனைத்துக் கதவுகளும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று காரின் கதவை இழுத்து ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தால், ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கக் கூடும்!
03 ஜூலை 2009
பதிலடி கொடுக்குமா இந்தியா?- இன்று வெ.இண்டீசுடன் 3வது போட்டி
உங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி?
வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.
காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C , Ctrl+V மூலமாக காப்பி செய்வார்கள். இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.
2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.
3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும்.
அவ்வளவுதான் இனி செவ் செய்து வெளியேறிவிட்டு உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்து பாருங்கள்.
தேங்க்ஸ்:-கார்த்திக்
புரளியால் எனது காதல் தடம் புரண்டு போய் விட்டது - ஷாயாலி புலம்பல்
பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை நான் விழுந்து விழுந்து காதலிப்பதாக பத்திரிகைகளில் எழுதித் தள்ளி விட்டார். ஆனால் இப்போது அவரை பிரிந்தும் விட்டதாக இன்னொரு கதையைக் கிளப்பி விட்டுள்ளனர்.
உண்மையில் எங்களுக்குள் காதலே கிடையாது. பிறகு எங்கே பிரிவது..
நானும், சோயிப்பும் ஓரிரு முறை காபி சாப்பிடப் போயுள்ளோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் பெரிய அளவில் சந்திக்கவே இல்லை.
இதில் கொடுமை என்னவென்றால், நான் உண்மையில் வேறு ஒருவரைக் காதலித்தேன். மாலிக்குடன் காதல் என்ற செய்தியால் எனது உண்மையான காதலர் பிரிந்து போய் விட்டார்.
ஏன்தான் இப்படி புரளி மேல் புரளியைக் கிளப்பி இப்படி வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொள்கிறார்களோ என்று புலம்புகிறார் ஷாயாலி..
ஷாயாலி புலம்பல் ரொம்ப நியாயமாவுல்ல இருக்கு..
Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!
-
ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .
இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.
கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!
ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.
என்ன தவறு ஏற்பட முடியும்?
எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.
தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.
உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.
இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
-
உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
-
பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
-
MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
-
தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
-
உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.
-
உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.
இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.
என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?
நாடோடிகள் - விமர்சனம்
சுப்பிரமணியபுரத்தில் விசுவாசத்துக்காக கொலையும் செய்யும் நண்பர்கள், இந்தப் படத்தில் காதலைச் சேர்த்து வைக்க வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள்.
ஒரு கவர்ன்மெண்ட் வேலை கிடைத்தால் போதும், மாமா மகளை கைப்பிடிக்கலாம் என்ற கனவில் காத்திருக்கும் கர்ணா (சசிகுமார்), வங்கி லோன் கிடைத்ததும் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாகத் துடிக்கும் சந்திரன் (சென்னை 28 விஜய்), பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாட்டுக்குப் பறக்கும் கனவில் மிதக்கும் பாண்டி (பரணி)... என மூன்று நண்பர்கள். ராத்திரியானதும் தண்ணியடித்து மொட்டை மாடியில் கைலி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஒன்றாகத் தூங்கும் அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். ரொம்ப நல்லவர்கள்...
இவர்களுக்கு இடையில் வருகிறான் இன்னொரு நண்பன் சரவணன். முன்னாள் எம்பியின் மகன். நாமக்கல் பழனிவேல் ராமன் (ஜெயப்பிரகாஷ்) எனும் கோடீஸ்வரரின் மகளைக் காதலிக்கிறான். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்கள் கவுரவம் பார்த்து குறுக்கே நின்றதால், காதலியைப் பிரிகிறான். கர்ணா மற்றும் அவனது நண்பர்கள் இருக்கும் ஊருக்கு வரும் அவன், திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறான்.
அவனைக் காப்பாற்றும் கர்ணா, விஷயம் அறிந்து, காதலர்களைச் சேர்த்து வைக்க சபதம் ஏற்கிறான். நாமக்கல்லுக்குப் போகிறார்கள் நண்பர்கள். உயிரைப் பணயம் வைத்து பழனிவேல் ராமனின் பெண்ணைத் தூக்குகிறார்கள். இதில் கர்ணாவுக்கு ஒரு கண்ணே பறிபோகும் அளவு படுகாயம் ஏற்படுகிறது. பாண்டிக்கு இரண்டு காதும் செவிடாகிப் போகிறது. சந்திரன் ஒரு காலையே இழக்கிறான். அதுமட்டுமல்ல... மூவரையும் போலீஸ் கைது செய்கிறார்கள்.
விஷயம் தெரிந்ததும் பழனிவேல் ராமன் ஆட்கள் கர்ணாவின் வீட்டில் புகுந்து நடத்திய வன்முறையில், கர்ணாவின் பாட்டி மரணிக்கிறார். இனி கர்ணாவுக்கு அரசு வேலை கிடைக்காது என்று தெரிந்து, அவர் மாமா தன் மகளை வேறு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துவிட, வாழ்க்கையே பறிபோகிறது கர்ணாவுக்கு.
இவ்வளவு இழப்புகளையும் அவர்கள் நட்புக்காக தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த ஜோடிகளோ, ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி, உடல் பசி தீர்ந்ததும் பிரிந்து விடுகிறார்கள்.
கொதித்துப் போகிறார்கள் நண்பர்கள். மீண்டும் புறப்படுகிறார்கள்... தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்திய அந்த ஜோடிகளுக்கு பாடம் கற்பிக்க. அது எந்த மாதிரி பாடம் என்பது திரையில்!
அநேகமாக, இன்றைய இளைஞர்கள் அல்லது இளமையை ஜஸ்ட் பாஸ் செய்த முன்னாள் வாலிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்த அனுபவமே படத்தின் முதல்பாதி என்பதால், எடுத்த எடுப்பிலேயே படம் மனசுக்கு மிக அருகில் நெருக்கமாகி விடுகிறது.
கிராமங்களில் படித்துவிட்டு, வேலை தேடுகிறோம் என்ற பெயரில் சும்மா இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் அன்றாட செயல்களே திரைக்கதை என்பதால் இன்னும் இணக்கமான மனசோடு படம் பார்க்கிறோம். மிகப் பிடித்துப் போகிறது.
நண்பன் தங்கையைக் காதலிப்பதா என்ற உறுத்தலோடு திரியும் இளைஞர்களுக்கு புதிய விளக்கம் கொடுத்து அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் நண்பனை தங்கை விரும்புகிறாள் என்பது தெரிந்த பிறகு அதை கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்ளும் சசிகுமார் மாதிரி தங்களுக்கும் ஒரு நண்பனில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு வரக்கூடும்!
மூன்று நண்பர்களில் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்பவர் சசிகுமார். நடிப்பு என்பது வலிந்து திணித்து வருவதல்ல. இயல்பாக, ஒரு மனிதனின் உணர்வுகளைக் காட்டக் கூடியதாக இருந்தாலே போதும். அதைத்தான் சசிகுமார் செய்திருக்கிறார். நம்மில் ஒருவராகவே மாறியிருப்பதால், சசிகுமாரின் சின்ன சின்ன தடுமாற்றங்கள் (நடனம்) கூட ஒரு ப்ளஸ்ஸாகவே தெரிகின்றன. நண்பன் செவித்திறன் இழந்து பரிதவிப்பதைப் பார்த்து அவர் கலங்கும் காட்சியும், தன் பாசத்துக்குரிய பாட்டியின் மரணத்தை எண்ணி அவர் உருகும் காட்சியும் மகா இயல்பானவை.
தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்து விட்டார்.
மற்ற இரு நண்பர்களில் 'கல்லூரி' புகழ் பரணி கலக்குகிறார். தன் கண்ணெதிரே நண்பனின் தங்கை இன்னொரு நண்பனுக்கு பச்சக் கென்று கன்னத்தில் 'இச்' கொடுத்து விட்டுச் செல்ல, மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் அவர் திகைத்து நிற்பதில் அரங்கம் அதிர்கிறது.
'சென்னை 28' விஜய் ஓகே. ஆனால் அவர் தந்தையாக வரும் நபர் அவரை விட அருமையாக நடித்துள்ளார்.
நாயகிகளில் அனன்யா அசத்தல் அழகு. அபிநயாவுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.
மற்ற புதுமுகங்களும் நிறைவாகச் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பகுதிதான் பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால் இந்தக் கதைக்கு வேறு எந்த மாதிரியான தொடர்ச்சியைத் தந்தாலும் அதில் செயற்கைத்தனமே மிஞ்சியிருக்கும். சமுத்திரக்கனி செய்த தவறு, இந்த இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட சீரியலில் வருவது போல காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பதுதான். அதைத் தவிர்த்திருக்கலாம். க்ளைமாக்ஸ் வசனங்களில் இன்னும் அழுத்தம் தேவை.
ஆனால் படத்தின் நிறைவுக் காட்சி அட்டகாசம். அதுதான் நட்பின் இயல்பும் கூட... தன்னோடு சேரும் எதையும் எரிக்கும் நெருப்பு மாதிரி நட்பு என்பதை உணர்த்தும் காட்சி அது!
நண்பர்களால் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கப்பட்ட காதல், இணை பிரியாமல் இருக்கிறதா இல்லையா என்று தொடர்ந்து கண்காணிப்பதில், அந்த நண்பர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் சமுத்திரக்கனி சொல்லும் நீதி. சரிதான்... ஆனால் பல நட்புகள், அவரவருக்கு திருமணமாகி குடும்பம் குழந்தை என செட்டிலானதும் பிரிந்து போகிற யதார்த்தத்தையும் மறந்துவிடக் கூடாதல்லவா... (அது தனியாக படமாக்கப்படவேண்டிய சமாச்சாரம் என்கிறீர்களா!!)
சுந்தர் சி பாபு இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. அந்த 'சம்போ...' பாடல் படத்துக்கு ஜெட் வேக எபெக்ட் தருவது நிஜம்.
கதிரின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது. எடிட்டர் ரமேஷ் தனது கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.
நாடோடிகள் ஒரு மிகச்சிறந்த படமாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படம் என்பது மட்டும் உண்மை.
நடிப்பு: சசிகுமார், பரணி, விஜய், கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா, ஷாந்தினி தேவா
ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்
இசை: சுந்தர் சி பாபு
தயாரிப்பு: எஸ்.மைக்கேல் ராயப்பன்
எழுத்து, இயக்கம்: பி சமுத்திரக்கனி
மக்கள் தொடர்பு: நிகில்
அதனால்தான் பாக்ஸ் ஆபீஸில் இந்த நாடோடிகளுக்கு ஏற்கெனவே க்ரீடம் சூட்டிவிட்டார்கள் ரசிகர்களும்!
01 ஜூலை 2009
ஜாக்சன் குழந்தைகளுக்கு டாக்டர்தான் அப்பா?
மைக்கேல் ஜாக்சனுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இருவரையும் அவர் விவாகரத்து செய்து விட்டார்.
முதல் மனைவியான லிசா மேரிக்கு குழந்தை எதுவும் கிடையாது. 2வது மனைவியான நர்ஸ் டெபோரா ரோவுக்கு பிரின்ஸ், பாரிஸ் என இரு குழந்தைகள். இதுதவிர வாடகைத் தாய் மூலம் இன்னொரு குழந்தையையும் ஜாக்சன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், டெபோராவுக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் ஜாக்சன் உண்மையான தந்தை இல்லை என்று டெபோரா சமீபத்தில் கூறி பரபரபப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜாக்சனின் சரும வியாதிக்கான டாக்டர் ஆர்னால்ட் க்ளீன் என்பவர்தான் அந்த இரு குழந்தைகளுக்கு் உண்மையான டாக்டர் என்று தற்போது அமெரிக்க வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டாக்டர் க்ளீன், லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்தவர். இவரிடம்தான் டெபோரா முன்பு நர்ஸாக வேலை பார்த்து வந்தாராம்.
பிரின்ஸ், பாரிஸ் குறித்த ரகசியங்களை எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்று டெபோராவும், க்ளீனும் ஒப்பந்தம் வேறு செய்து கொண்டுள்ளனராம்.
80களில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார் டெபோரா. அப்போதுதான் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரைப் பார்க்க வந்தவர்தான் டெபோரா. அந்த சமயத்தில் க்ளீனின் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார் டெபோரா.
ஜாக்சனுடன் காதல் மலரவே இருவரும் மணம் புரிந்து கொண்டனர். ஆனால் குழந்தைகளை மட்டும் க்ளீன் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறார் டெபோரா என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது.
இதுகுறித்து டாக்டர் க்ளீன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் அவரது வக்கீல் ரிச்சர் சார்ன்லி கூறுகையில், வெளியாகி வரும் செய்திகள் அனைத்தும் டாக்டர் க்ளீன் அறிவார். ஆனால் நோயாளியின் (மைக்கேல் ஜாக்சன்) ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது டாக்டர் தொழிலின் கண்ணியம் என்பதால் எது குறித்தும் டாக்டர் க்ளீன் விளக்கமளிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
பெயரில் உள்ளது டாக்டரிடம் நிஜத்தில் இல்லையே..!
வைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி!
சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.
தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.
இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார்.
வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்
கல்யாணப் பத்திரிக்கையை வைத்து திருப்பதி கோவிலில் வழிபட்டார் மீனா
கல்யாணம் நிச்சயமானதும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே வந்து தரிசனம் செய்வதாக வேண்டியிருந்தாராம் மீனா. அதன்படி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் அவர் திருப்பதி சென்றார்.
தந்தை துரைராஜ், தாயார் மல்லிகாவுடன் திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து படிகள் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார்.
அங்கு ஏழுமலையான் பாதத்தி்ல கல்யாணப் பத்திரி்க்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் பிரசாதத்தை பெற்றுக் கொண்டார்.
பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டார் மீனா. அவர்களிடம் அவர் பேசுகையில், திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன். டிவி தொடர்களிலும், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீனா.
காதல்,கற்பு பற்றிய சமீபத்திய சர்வே
பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் - உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை - குரான் - பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவற்றை எதிர்கொண்டு ஜெயித்த முறை என மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.
ஆய்வு நடத்தப்பட்ட 21 வயதுக்குட்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த பின், வெகு சீக்கிரத்திலேயே, தமது கன்னித் தன்மையை இழந்தது குறித்து வருந்துகின்றனர்.
இதில் 16 வயதுக்கு முன்பே கன்னித் தன்மையை இழந்ததால் வருந்துபவர்கள் மூன்றில் இரண்டு பங்கு; ஆனால், இதே காலக்கட்டத்தில் உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வருந்துகின்றனராம்!
"அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே பொதுக்காரணமாக பெரும்பாலும் இருபாலரும் கூறியுள்ளனர்!
பெண்கள் தமது கன்னித் தன் மையைப் பெரும்பாலும் இழந் துள்ள வயது 16; ஆண்கள் 17!
மேலே சொன்ன கணக்குகளெல்லாம் காதலர்களுடையது அல்ல; காதல், கீதல் எல்லாம் கிடையாது... பள்ளித் தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்துத் தெரு சிறுவன்... இவர்களுடையது!
* நிஜமாகவே, ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பவர் களில், 16 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும் "காதலே எங்கள் கற்பு பறி போனதற்குக் காரணம்!' எனக் கூறுகின்றனராம்!
* "உணர்ச்சி மேலீட்டால், "தப்பு' செய்து விட்டோம்...' என 13 சதவீதம் பெண்களும், ஆறு சதவீதம் ஆண்களும் கூறியுள்ளனர்.
* கொஞ்சம் போதை போட்டது தான் முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என 10 சதவீதம் இருபாலரும் கூறியுள்ளனர்.
* எதை இழக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன் கன்னித் தன்மையை இழந்ததாக 14 சதவீதம் ஆண்களும், 5 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.
* ஆண்களை விடப் பெண்களே தமது தோழியரின் நடத்தையால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். 6 சதவீத பெண்களும், 3 சதவீத ஆண்களும், தமது நண்பர்கள், "இதில்' ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.'காத்ரீனா, கரீனா ரொம்ப செக்ஸி'
இந்த நிலையில் இன்னொரு வில்லங்கப் பேச்சைப் பேசியுள்ளார் குமார். காத்ரீனா மற்றும் கரீனா ஆகிய இருவருக்குமே நல்ல செக்ஸியான பாடி என்று கூறியுள்ளார் குமார்.
நான் இதுவரை நடித்த நடிகைகளிலேயே மிகவும் செக்ஸியான உடலமைப்புக் கொண்டவர்கள் காத்ரீனாவும், கரீனாவும்தான் என்கிறார் குமார்.
கடந்த 18 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷய் குமார், இதுவரை காத்ரீனா மற்றும் கரீனாவுடன் மட்டுமே அதிக படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். கரீனாவுடன் 5 முறையும், காத்ரீனாவுடன் 4 முறையும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாரை விடுவது, யாருடன் இணைவது என்பதை தேர்வு செய்ய முடியாமல் தான் திணறிப் போய் விடுவேன் என்கிறார் சிலிர்ப்பு குறையாமல்.
தான் ஒரு மூத்த நடிகர் என்பதால் காத்ரீனாவும், கரீனாவும் தன்னிடம் டிப்ஸ் கேட்டு அணுகுவதாக கூறும் அக்ஷய், மூத்த நடிகர் என்ற முறையில் நிச்சயம் நான் அவர்களுக்கு உதவுகிறேன். நான் கற்றுக் கொண்டதை அவர்களுக்கும் கற்றுத் தருகிறேன் என்கிறார்.
அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று மடக்கலாக கேட்டால், இருவரிடமிருந்தும் நான் கற்றுக் கொண்டதை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே நல்ல அனுபவம்தானே என்கிறார்.
கரீனாவுடன் அக்ஷய் ஜோடி போட்டுள்ள கம்பக்த் இஷ்க் ஜூலை 3ம் தேதி ரிலீஸாகிறது.
அக்ஷய் ரொம்ப பத்திரமா இருங்க, சல்மானும், சைபும் சேர்ந்து வந்து 'புட் பால்' ஆடிடப் போறாங்க!
29 ஜூன் 2009
இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்! - ஏ.ஆர் ரஹ்மான்
"நம் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த இசையமைப்பாளர் மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணம் பற்றிய தகவல் அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த தலைமுறையில் யாரோடும் ஒப்பிட முடியாத ஒரு அடையாளமாக மைக்கேல் ஜாக்சன் இருந்தார்.
'பாப் இசை'யில், மைல் கல்லாக இருந்த அவர், நம்ப முடியாத சிகரங்களை தொட்டார். 80களிலும், 90களிலும் அவர் ஆற்றல் மிகுந்த, நேர்த்தியான, தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு கலைஞராக திகழ்ந்தார்.
நான், 'ஆஸ்கார்' விருது பெற்ற பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். இந்தியாவையும், இந்திய மக்களையும் அவர் நேசிப்பதாக என்னிடம் சொன்னார். என்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாக கூறி, 'ஜெய் ஹோ' பாடலைப் புகழ்ந்து பேசினார்.
தன்னுடைய நடன அசைவுகள் ஆத்மாவில் இருந்து வெளிப்படுவதாக கூறிய அவர், 5 வினாடிகள் என் முன் ஆடி காண்பித்தார். அவருடைய நடனம் ஒரு மின்னல் போல் இருந்தது.
உலகம் வெப்பமயமாதல் பற்றியும், யுத்தங்களால் மனித இனத்துக்கு ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும் அவர் மிகவும் வருத்தப்பட்டார். உலக ஒற்றுமைக்காக ஒரு கீதத்தை உருவாக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் சம்மதித்தேன்.
அவருடைய 3 குழந்தைகளிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த குழந்தைகள், 'ஐ லவ் யூ டாட்'என்றார்கள். பதிலுக்கு அவர், "ஐ லவ் யூ மோர்'' என்றார்.
அவருடைய இசைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். 'காட் ப்ளஸ் யூ' (கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்) என்று கூறினார். அவர் மரணம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும், அது வதந்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்புவதற்கு ரொம்ப நேரமானது.
என் முதல் படமான `ரோஜா'வுக்காக, 'காதல் ரோஜாவே' என்ற பாடலுக்கு நான் இசையமைத்து கொண்டிருந்தபோது, மறைந்த சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீதர், 'ரிமெம்பெர் தி டைம்' என்ற மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தை கொண்டுவந்து கொடுத்தார். அது, எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது.
வாழும் போதே கலைஞர்களை கவுரப்படுத்துங்கள்!
இப்போது ஸ்ரீதரும் இல்லை. ஜாக்சனும் இல்லை. மனித உயிர்களின் மேன்மையை உணர்ந்து, உயிரோடு இருக்கும்போதே அவர்களை மதிக்க வேண்டும். கவுரவத்தைத் தரவேண்டும்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. கலைஞர்களும், அவர்களின் கலையும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். ஜெய் ஹோ மைக்கேல் ஜாக்சன். நாங்கள் உங்கள் இசையை நேசிக்கிறோம்... சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு... என்று கூறியுள்ளார் ரஹ்மான்.
நடிகர் சங்கம் அஞ்சலி
மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளைப் புகுத்தி ஒரு மாபெரும் கலை பொக்கிஷமான திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மறைவு இசையுலகுக்கு ஒரு பேரிழப்பு. தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி புகழடைந்துள்ளனர். உலக கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
கூகுளுக்கு (Google) ஓ போடுவோம்.
அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
கருத்து கந்தசாமி
பரிச்சையில கிடைக்கிற மார்க்கைவிட, வாழ்க்கையை எவ்வளவு புத்திசாலித்தனமா அணுகறோம்கரது மிக முக்கியம். நம்ம நாட்டிலயும் ஏன் உலகத்திலயும் எத்தனயோ படிக்காத மேதைகள் இல்லையா?. சரி, எல்லாரும் மேதையாயிட்டா, ரொம்ம போர் அடிக்கும். அதனால, கொஞ்சம் புத்திசாலித்தனமும், நெறய தன்னம்பிக்கையும் இருந்த போதும். தாரளமா சந்தோசமா வாழலாமே?. இத எப்பத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது?
அர்ஜுன் அண்ணன் கிஷோர் மரணம்
கிஷோர் கன்னடப் படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். தமிழில் படிச்சபுள்ள உள்பட சில படங்களை தயாரித்துள்ளார் கிஷோர்.
சிலி தினங்களுக்கு முன் கிஷோருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் அர்ஜுன்.
தீவிர சிகிச்சை மேற்கொண்டும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
மனைவி அபர்னா மற்றும் மகன் சூரஜ் உடன் வசித்து வந்தார் கிஷோர். நாளை அவரது உடல் தகனம் பெங்களூரில் நடக்கிறது.
கிஷோருக்கு தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
‘தம்’ அடிக்காமல் முடியலியே தவிக்கிறார் அதிபர் ஒபாமா
சிகரெட் உட்பட புகையிலை பயன்பாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகிறார். ஆனால், அவரால் “தம்’ அடிக்காமல் இருக்க முடியவில்லையாம்.
அமெரிக்காவில் புகையிலை மற்றும் அதை சார்ந்த பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிதாக பல சட்டங்களை போட்டுள்ளார் ஒபாமா. சமீபத்தில் கூட, புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார்.இப்புதிய சட்டம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துதுறையினருக்கு, புகையிலைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.
கையெழுத்திட்ட அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், “புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தற்போது கடுமையாக போராடி வருகிறேன். நான் எனது குடும்பத்தினர் முன் புகைப்பிடித்தது இல்லை. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து 95 சதவீதம் விடுபட்டுள்ளேன். எனினும், சில நேரங்களில் நான் மனம் தடுமாறி விடுகிறேன். புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில், 90 சதவீதத்தினர் தங்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுகின்றனர். அதில் நானும் ஒருவன்’ என்றார்.






