பெற்றோர் - குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் - மாணவர், காதலன் - காதலி என
உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான்.
மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான். ஒரே அலைவரிசையிலிருக்கும் கணவன் - மனைவிக்கு அந்தந்த கணத்தில் எண்ணங்களை பரிமாறப்படுவதால் வார்த்தைகளே வீண்தான்..
எந்த ஒரு செயலுகுமே அடிப்படை எண்ணங்கள்தான். தங்களது மன ஓட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாத கணத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இன்றைய தினத்தில் அதிகரித்து வரும் குடும்ப உறவுப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் மனம்தான்.
கணவன் - மனைவு உறவு முழுக்க, முழுக்க உணர்வுகளால் பின்னிப் பிணைந்த ஒரு கூடு. இதில் ஒரு இழை அறுந்து போனாலும் அந்த முழுமையே (whole) ஆட்டங்கண்டுவிடும்.
சின்ன சின்ன உணர்ச்சிகள் கூட பெரிய விபரீதகளுக்கு காரணமாகிவிடும். அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில் தங்கள் உணர்ச்சிகளுக்கே வேலி போட்டுவிடுவர் சிலர். இந்தப் பாதிப்பு இன்னும் அதிகம். தற்காலிகமாக பிரச்சினையை ஒத்தி வைக்கலாமே தவர, முற்றிலும் தலைபோட முடியாது. ஒரே வழி, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்துங்கள்!
சந்தேகம்!
இந்த வார்த்தையைப் படிக்கும் போதே நாற்காலியின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆண்கள். பலகுடும்பங்களை ஆட்டிவைக்கும் ஐந்தெழுத்து மந்திரவார்த்தை.
“என்னங்க, நான் உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணப்ப யாரோ ஒருத்தி எடுத்தாளே, யாரவ? எதுக்கு உங்கள டேபிளுக்கு வரனும்?”
“நான் இன்னைக்கு பூவே வைக்கலையே. உங்கள் மேல எப்படி மல்லிப்பூ வாசனை அடிக்குது?.”
“உங்க ஆஃபீஸ் என்ன பீச் நடவுலையா இருக்கு? ஷூக்குள்ள ஒரு கிலோ மணல்…!”
“கழுதை மிஸ் பண்ணாலும் பண்ணும். நீங்க பண்ணமாட்டீங்க.. ஒரு சினிமா போஸ்டர் விடாம வீட்டுக்கு வாங்க, கண்ணை தோண்டிடறேன்.”
“குதிரைக்கு திரைகட்டற மாதிரி உங்க ரெண்டு கண்ணையும் கட்டினும் ரோட்ல வண்டி ஓட்டறப்ப அப்படி என்ன ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பிப்பார்த்து ஜொள்ளுவிட வேண்டியிருக்கு…?”
என்ன? இவையெல்லாம் உங்கள் வீட்டு வசனங்கள்தானே…? எல்லா மனைவிகளும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேற்படி வசனங்களைப் பேசிவிடுவார்கள். “வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கறேன்” என்று சொல்லிவட்டு அதுவரை கூட காத்திருக்க பொறுமையில்லாமல் ‘ஆன் தி ஸ்பாட் ஆக்ஷன்’ எடுக்கும் மனைவிகளுமுண்டு.
“புருஷனையே சந்தேக்படறியே, நீயெல்லாம் ஒரு மனைவியா, சே..!” என்று கணவன் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்கும்போது சட்டென்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு, ஐயோ, நான் நல்ல மனைவி இல்லையோ… என்ற குழப்பும், கவலையும் வேதனையில் ஆழ்த்தும் நீங்களும் அபடித்தானா? அப்படியென்றால் ‘சந்தேகம்’ என்ற கடலைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, மூழ்கி முத்தெடுக்க வேண்டிய விஷயகள் ஏராளம்…!
1. பெண்களைப் பொறுத்தவரையில், உங்கள் கணவரைப் புரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் சந்தேகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பசி, தூக்கம், காமம் ஆகிய உணர்வுகளைப் போல் சந்தோஷமும் ஒரு உணர்வுதான். நன்றாக யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். எப்போதெலாம் உங்கள் கணவரை சந்தேகப்படுகிறீர்கள் என்று கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நிச்சயமாக மாத்த்தின் எல்லா நாட்களிலும் சந்தேகம் வராது. மாதவிலக்கு நாட்கில் உங்களின் சந்தேக்க்குணம் தலைதூக்கும். காரணம், பொதுவாகவே இந்த நாட்களில் உடல் சோர்வுடன், மனச்சோர்வும் சேர்ந்திருக்கும். அதனால், உங்கள் கணவர் லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட, ஏதோ அவர் அதீத சந்தோஷத்தில் மிதப்பதுபோல் தோன்றும். “நான் இங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருகேன். இவறு இவ்வளவு குசியா இருக்காரே! ஒருவேளை வேற யார்கூடவாத்து சுத்திட்டு வந்திருப்பாரோ?” என்று ஒரு பொறிதட்டும். அந்தப் பொறியை நீங்கள்
தட்டிவிட்டீர்கள் என்றால் பிழைத்தீர்கள். (உங்கள் கணவர் பிழைத்தார்) இல்லை, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அடுத்தசில மணி நேரங்களில் சந்தேகத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பீர்கள்.
2. அடுத்தது, அந்த சமயத்தில் சோர்வு மட்டுமில்லாமல், தான் அழகாயில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மயும் ஏற்படும். (உண்மையில், அப்போதுதன் பெண்கள்ரொம்ப அழிகாயிருப்பார்களாம்). ஒரு வேளை உற்சாக்க் குறைவால் கூட இந்த எண்ணம் தோன்றலாம். அதன் விளைவும் சந்தேகம்தான். தன்னைத் தவிர மற்ற பெண்களெல்லாம் தேவதைபோல் தோன்ற, கணவர் பக்கத்து வீட்டு மாமியிடம் பேசினால் கூட, உங்கள் மனதில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.
சரி, இப்ப என்னதான் செய்யறது என்று கேட்கிறீர்களா?
முதலில் இந்தக் கால சுழற்சியைக் கவனியுங்கள். சந்தேகம் எப்போது வருகிறது எனக் கவனிக்கத் தடங்கினீர்கள் என்றால், காலப்போக்கில் நாளைக்கு ‘கோடீஸ்வரி’ வரும் என்பதப் போல, நாளைக்கு ‘சந்தேகம்’ வரும் எனச் சரியாக ஊக்ககுமளவற்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள்.
அடுத்து விழிப்பு: சந்தேகம் வரும் சமயங்களில் விழிப்புடன், தன்னுணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். சந்தேகம் இப்போது வருவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
மூன்றாவது முக்கியமான விஷயம். சந்தேகத்தை சந்தேகமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் - அதாவத, நீங்கள் உங்கள கணவரை சந்தேகப்படுகிறீர்கள். அது உண்மையாக இருக்க வேண்டிய அசியமில்லை. கோபம் தணிந்த பிறகு ஓரிரு நாட்களில் கூட “சே, எவ்வளவு முட்டாள்தனமா நினைச்சுட்டேன்” என்று உங்கள் தலையில் நீங்களே கூட குட்டிக்கொள்ள நேரலாம். எனவே உங்கள் சந்தேகத்தை உண்மையென நம்பாதீர்கள்.
சந்தேகப்படும் மனைவிகளே, உங்களை சந்தோஷப்படுத்த சில புள்ளி விபரங்கள்: (ஆய்வின் அடிப்படையில்)
1. சந்தேகப்படும் மனைவிதான் உண்மையான மனைவி என்று நூற்றுக்கு தொண்ணூற்றியெட்டு பெண்களும், எண்பத்தேழு ஆண்களும் கருத்தக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “சந்தேகம் எப்போது வருகிறது? கணவன் தன்னை விட்டுப்போய்விடக் கூடாது என்ற உணர்வு உச்சநிலையை அடையும்போதுதானே, இந்த உணர்வு மனைவிக்கு எப்போது வருகிறது? கணவன் மேல் அதீத அன்பாயிருக்கும் போதுதான். எனவே, அதீத அன்புதான் சந்தேகமாகிறது.
2. அடுத்தது, ஒரு மனைவி எப்போது சந்தேகப்பட தொடங்குகிறாள் தெரியுமா? (சந்தேகப்படத் தகுதியா என்று சிரிக்காதீர்கள்) தன் கணவனுக்கு உண்மையானவளாயிருக்கும் போதுதான்.
கணவனுக்குத் தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா? “இவனும் யார் கூடயாவது போயிட்டால்தான் நிம்மதி. அப்பதான் நாம செய்யறதைக்
05 மே 2009
படித்ததில் பிடித்தது : கணவன் - மனைவி உறவுகள் உணர்வுகள்
இரட்டை குழந்தைகள் பிடிக்கும்!-த்ரிஷா
தனது திருமணம்கணிணியில் இலவச டைரி
கணிணியில் இலவச டைரி
நாம் கணிணியில் புக்மார்க் குறித்து வைப்போம்.
சில நாள் கழித்து அது எதனுடைய புக்மார்க்-
அதனால் என்ன பயன் என மீண்டும் அந்த
புக்மார்க்கை நீங்கள் இணையத்தில் சென்றே
அறிந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்
நீங்கள் குறித்துவைத்துள்ள புக்மார்க்கின்
இணைய முகவரி(URL) கேட்கின்றார். அந்த
சமயம் உங்கள் கணிணியில் இணைய இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பாது என்ன
செய்வீர்கள். அந்த மாதிரியான சமயங்களில்
இந்த கணிணி டைரி நமக்கு உதவுகின்றது.
நாம் நமது கணிணியிலேயே குறிப்புகளை
-இணைய முகவரிகளை –நமது விருப்பமான
புக் மார்க்குகளை -சாப்ட்வேர் களின்
சீரியல் எண்களை எழுதிவைக்க இந்த டைரியை
பயன்படுத்தலாம். இணைய இணைப்பு
இல்லாத சமயங்களிலும் நாம் இந்த புக் மார்க்கை
பயன் படுத்தலாம்.முதலில் நமது கணிணியில்
இந்த டைரியை எப்படி வெளியே எடுத்துவரலாம்
என பார்க்கலாம்.முதலில் நீங்கள் டெக்ஸ்டாப்பின்
வெற்றிடத்தில் மவுஸால் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்தமாதிரி ஒப்பன் ஆகும்.


அதில் உள்ள Text Document –ஐ
மவுஸால் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான
Text Document ஆனது ஓப்பன் ஆகி
டெக்ஸ்டாப்பில் அமர்ந்துவிடும். பின் அதை
ரைட் கிளிக் செய்து Rename-ல்
உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சு
செய்யுங்கள்.நீங்கள் சூட்டிய பெயருடன்
Text Document காட்சியளிக்கும். இதை
ஓப்பன்செய்யுங்கள். உங்களுக்கு இந்த
சாரளம் ஓப்பன் ஆகும்.

சரி அதில் அன்றைய
தேதியை எப்படி எடுத்து வருவது. நீங்கள்
உங்கள் Key-Board –ல் F5 அழுத்துங்கள்.
உங்கள் Text Document –ல் அன்றைய தேதி
வந்துவிடும். நீங்கள் உங்கள் புக் மார்க்
இணைய முகவரியை அதில் பேஸ்ட்
செய்யுங்கள்.அத்துடன் அந்த இணையத்தை
பற்றியும் குறிப்புகளை யும் ஆங்கிலத்தில்
அல்லது தமிழில் தட்டச்சு செய்துவிடுங்கள்.
உங்கள் இணைய இணைப்பு இல்லாத
சமயங்களிலும் நீங்கள் சுலபமாக உங்கள்
புக்மார்க்கை யும் –குறிப்புகளையும்
பார்க்கலாம். ஒருமுறை பயன்படுத்திப்
பாருங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
எந்த மாதிரியான சந்தர்பங்களில் நாம் நமது
கம் யூட்டரை Format செய்யவேண்டும்?
1.விண் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில்
பைல்கள் கரப்ட்(Corrupt) ஆகும் சமயம்.
2.தவறுதலாக விண்டா பைல்களை நாம்
அழிந்து விடும் சமயம்.
3.சாப்ட்வேர்களை முறையாக Uninstall
செய்யாமல் அதனால் பிழை ஏற்பட்டிருந்தால்.
4.சிஸ்டம் ரீ-ஸ்டார் செய்தும் கணிணி செயல்
படாத சமயம்.
5. வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு எந்த விதமான
ஆன்டிவைரஸாலும் அதை நீக்க முடியாத சமயம்.
6.நமது கணிணியில் ஸ்பைவேர் தாக்கிய சமயம்.
7.Registry-ல் பிழை ஏற்பட்டு இருக்கும் சமயம்.
8. வழக்கத்திற்கு மாறாக கணிணி மிகவும்
மெதுவாக செயல்படும் சமயம்.
மேற்கண்ட 8 பிழைகள் உங்கள் கணிணியில்
ஏற்பட்டால் நீங்கள் தயங்காமல் கணிணியை
Format செய்யலாம்.
(பின்குறிப்பு:- இணைய இணைப்பில் ஏற்பட்ட
பழுது காரணமாகவும்-எனது சகோதரியின்
துணைவர் அகால மரணம் காரணமாகவும்
இடையில் என்னால் பதிவிட முடியவில்லை.
தவிர ஆங்கில பாடம் தொடர்ந்து ஞாயிற்றுக்
கிழமைகளில் வெளியிட வேண்டும் என்ற
காரணத்தால் இணைய இணைப்பு இல்லாத
போதும் தன்னுடைய இணைய இணைப்பு மூலம்
ஆங்கில் பாடத்தின் பதிவுகளை பதிவிட
உதவி செய்த நண்பர்
ஆனந்த்துக்கு இந்த பதிவின் மூலம்
நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
நன்றி....)
அப்படியா பழகினாரு சிம்பு....?
02 மே 2009
உலகின் முதலாவது இணையத்தளம்
பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: குடும்ப கோர்ட் அதிரடி தீர்ப்பு
குழந்தை பெற தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்ப மறுத்ததால் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி அவர் மனு செய்தார். இதுதொடர்பா விசாரணைதமிழன் என்பது ஒரு தகுதியில்லை! - கமல்ஹாசன்
தமிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
தனது அடுத்த வெளியீடான உன்னைப்போல் ஒருவன் படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் கமல். மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் கமல். 
இந்தப் படத்தின் முறையான அறிமுக விழாவை வெள்ளிக்கிழமை நடத்திய கமல், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் சக்ரி, எழுத்தாளர் ஈரா முருகன் (திரைக்கதை - வசனம்), கவிஞர் மனுஷ்யபுத்திரன் (பாடலாசிரியர்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் கமல் பேசியதாவது:
இந்தப் படத்தின் கதை ‘எ வெட்னஸ்டே’ என்ற இந்திப் படத்தினுடையதுதான். ஆனால் நல்ல கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு மொழி கிடையாது.
இப்படத்தில் வசனகர்த்தாவாக இரா.முருகன், பாடல் ஆசிரியராக மனுஷ்யபுத்திரன் ஆகிய இரு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் சக்ரி, நான் நடித்த சலங்கை ஒலியில், தப்புத்தப்பாக போட்டோ எடுக்கும் ஒரு சிறுவனாக நடித்தார். பின்னர் ஹாலிவுட்டில் போய் சரியாக படமெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலும்… என் படத்துக்கே இயக்குநர் ஆகியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத் தலைப்புதான் இது. அந்த மேதைக்கு என்னால் செலுத்த முடிந்த மரியாதையாக இநதப் படம் இருக்கட்டும் என்றுதான் இந்தத் தலைப்பைச் சூட்டினோம். தலைவன் இருக்கின்றான் என்ற டைட்டிலும் எங்களிடம்தான் உள்ளது. அப்பெயரில் வேறு படம் எடுப்போம்.
ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும்.
ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பதை நிருபர்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள்.
நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.
இந்தக் கதையில் நடிக்க இரு பெரிய நட்சத்திரங்கள் எதற்கு என்று கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காரணம், முதலில் நாங்கள் நடிகர்கள். உங்களால் நட்சத்திரங்களாக்கப்பட்டவர்கள். நட்சத்திரமானது எங்கள் தப்பா… நட்சத்திரங்கள் ஆகிவிட்டதால் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கக் கூடாதா?
பொன்விழா படமா?
நான் திரையுலகுக்கு நடிக்க வந்தது ஆகஸ்ட் 12, 1959-ல். இது என்னுடைய திரை வாழ்க்கையின் 50 வது வருடம். உன்னைப்போல் ஒருவன் படத்தில் நானும் மோகன்லாலும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. வரும் மே மாதத்துக்குள் முழுமையாக முடிந்துவிடும்.
ஜூலையில் வெளியிடும் திட்டம் உள்ளது. ஆனால் நண்பர்களும், ரசிகர்களும் இந்தப் படத்தை என்னுடைய பொன்விழாப் படமாக வெளியிட விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடவும் ஒரு எண்ணம் உள்ளது… பார்க்கலாம்.
ஸ்ருதி ஏன்?
ஸ்ருதியின் இசையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவரை இசையமைப்பாளராக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். மகள் என்ற பாசத்தில் அல்ல. மூன்று பாடல்கள். மூன்றுமே சிறப்பாக வந்துள்ளன, என்றார் கமல்.
மோகன்லால் பெருமிதம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படம் நடிக்கிறார் மோகன்லால். அவர் கடைசியாகத் தோன்றிய தமிழ்ப்படம் பாப்கார்ன். அதற்குப் பிறகு அரண் என்ற படத்தில் அவர் நடித்தார். ஆனால் அது முழுமையான தமிழ்ப் படமல்ல.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த மோகன்லால், பேசியதாவது:
கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். இப்போது அவருடன் இணைந்து படம் செய்வது மிகப் பெரிய கவுரமாகக் கருதுகிறேன். அவருடன் இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
நல்ல கதைகள் மொழிகளைத் தாண்டியவை, இந்தப் படம் கேரளாவில் தமிழ் படமாகவே ரிலீசாகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்ப் படங்களை மலையாளிகள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். தமிழ்ப் படங்களில் உள்ள உணர்வுகள் அவர்களுக்கு நன்கு புரியும். அடிப்படையில் இரு மொழிகளும் ஒன்றுதான், என்றார்.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஈநாடு எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
பழிக்குப் பழி... காமெடிகளின் வில்லத்தனம்!
இப்போது வடிவேலுவின் முறை...
விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கலைப்புலி தாணுவின் கந்தசாமியில் முதலில் நடிப்பதாக இருந்தவர் விவேக். ஆனால் கடைசி நேரத்தில் நிஜமான இம்சை அரசனாய் விவேக் மாறிவிட, படத்தின் மெயின் பகுதிகளைப் படமாக்கிய பிறகு, விவேக் நீக்கப்பட்டதாக அறிவித்தார் இயக்குநர் சுசி கணேசன். அவருக்குப் பதில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்கள். வெறும் 5 நாட்களில் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை தனியாகப் படமாக்கிவிட்டார்களாம்.
'நாங்கள் நினைத்துப் பார்க்காத புதிய பரிமாணத்தில் பின்னியிருக்கிறார் வடிவேலு...' என்று பாராட்டித் தள்ளுகிறார்கள் தாணுவும், சுசியும்.
படிக்காதவன் காயத்துக்கு கந்தசாமியில் மருந்து கிடைத்த சந்தோஷத்தில், 'விட்ருவோமா... நாங்களும் மதுரைதான்' என்று காலரைத் தூக்குகிறார் வடிவேலு!
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில், சச்சின் தெண்டுல்கர் 34 ரன்களும் ஹர்பஜன் சிங் 6 ரன்களும் எடுத்தனர். டூமினி 52 ரன்களுடனும் ஜாகீர்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹோட்கே 78 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு பலம் சேர்த்தார். எனினும், 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.
இந்தியில் முக்கால் நிர்வாணம்; தெலுங்கில் முழு நிர்வாணம்!!
இந்த நிர்வாணக் காட்சியில் துணை நடிகைகளையோ, வேறு மாடல்களையோ பயன்படுத்தப் போவதில்லையாம். முழுக்க முழுக்க கங்கணாதான், பிறந்த மேனியாகத் தோன்றப் போகிறாராம்.
சென்சார்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாதா...?!
"தெரியும் தெரியும்... ஆனால் எப்படி எடுத்தா அவங்களால காட்சியை வெட்ட முடியாதோ, அப்படி எடுக்கப் போறோம்", என்கிறார் பூரி ஜெகன்னாத்.
ஒரு முடிவோடதான் கிளம்பறாங்க போல!
29 ஏப்ரல் 2009
நைட் ரைடர்ஸ் வெல்லும் வரை தென்னாப்ரிக்கா வர மாட்டேன்!- ஷாரூக் சபதம்
மேலும் அந்த அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டதால் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போன ஷாரூக்கான் தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
எனது அணி தொடர்ந்து தோற்று வருவதைப் பார்க்க முடியவில்லை. அடுத்து அவர்கள் ஜெயித்தால் மட்டுமே தென் ஆப்ரிக்கா வருவேன் என்று கூறியுள்ளார் கிங் கான்!
விரைவில் அப்படி ஒரு சூழலை தனது அணி உண்டாக்கித் தருவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரியலுக்கு வருவாரா மாளவிகா?
மகனை கவனிக்க அவருக்கு நேரமே போதவில்லையாம். இந்த நிலையில் சும்மாதானே இருக்கிறீர்கள், டிவிரசிகர்களை கவராத புதுப் படங்கள்!
சமீபத்தில் நடந்த குயிலு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சேகரன், தமிழ்ப் படங்களின் வர்த்தகம்மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு
கோப்பின் பெயர் : office2007sp2-kb953195-fullfile-en-us.exe கோப்பு அளவு : 290 MB.தொழிலாளர்கள் கையில் அமெரிக்க கார் கம்பெனி?
கிரைசிலர் கார் கம்பெனி சில காலமாகவே அதிக நட்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவி இல்லாமல் அதை இயக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கார் விற்பனை சரிவு, மார்கெட்டுக்கு தேவையான காரை உற்பத்தி செய்யாமை,கடன் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலை செய்யும் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு செலவு என்று கூறபட்டது. இந்நிலையில் ஒபாமாவின் உத்திரவு பேரில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி திட்டத்தை கம்பெனி தயாரித்தது. அமெரிக்க அரசும் முறையான திட்டங்கள் இல்லாமல் பணத்தை மேன் மேலும் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அதன் அடிப்படையில் புதிய திட்டம் வடிவமைக்க படுகிறது.
இத்திட்டத்தின் முன்வரைவு இன்னும் வெளி வர இல்லை என்றாலும் அது பற்றிய செய்திகள் அனைத்து அமெரிக்க பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளது. அதன் படி தொழிற் சங்கத்துக்கு 55% சதவித பங்கு வழங்க படும் என்று தெரிகிறது. இதனால் தொழ்ற்சங்கத்துக்கு கம்பெனியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம்.இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க இருந்த மருத்துவ காப்பீடு மிக அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.அதே சமயம் இம்முடிவை தொழிலாளர்கள் யூனியன் ஒத்து கொள்ளாவிட்டால் அக்கம்பெனி ஒட்டு மொத்தமாக மூட படலாம். அதனால் இழப்பு மிக அதிகம் இருக்கும்.தற்போதைய திட்டத்தின் மூலம் கம்பெனி காப்பாற்ற பட்டால் பிற்கலத்தில் அதனால் கிடைக்கும் லாபம் கொண்டு தொழிலாளிகள் பயன் பெற வாய்ப்புள்ளது.
இத்திட்டதினால் இழப்பு தொழிலளர்களுக்கு மட்டும் இல்லை. அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் அக்கம்பெனியின் தற்போதயைய முதலீட்டளர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு செலவு என்பது கார் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்க அரசுக்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இப்பிரச்சனை தற்போதைய நிதி நெருக்கடி போன்று பெரிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.


