ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார்.
தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!)
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம்.
இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ.
அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.
படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!
25 ஜூன் 2009
பாடகராகிறார் சூர்யா!
கோலிவுட்டில் இன்றைய ட்ரெண்ட் என்ன தெரியுமா... நடிகர்கள், தங்களுக்கான பாடலை தாங்களே பாடுவதுதான்.
கமல்ஹாசனில் தொடங்கி இன்றைய சுள்ளான்கள் வரை அவரவர் தங்கள் குரல் வளத்தை ரசிகர்களிடம் சோதித்துப் பார்த்துவிட்டனர்.
ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார்.
தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!)
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம்.
இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ.
அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.
படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!
ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார்.
தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!)
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம்.
இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ.
அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.
படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!
சுயம்வரம்-16 பேரை மணக்க ராக்கி விருப்பம்!
தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.
ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.
ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.
இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம்.
இதுகுறித்து செய்தியாளர்களைக் கூட்டி ராக்கி பேசுகையில், மகாபாரத்தில் திரவுபதி இருந்தது போல நானும் மாடர்ன் திரவுபதி ஆக விரும்புகிறேன்.
காரணம், நான் தேர்வு செய்த 16 பேரும் அட்டகாசமானவர்கள். இவர்கள் அனைவரையும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.
உதய்ப்பூரில் நடந்த இந்த சுயம்வரம் நிகழ்ச்சியை நான் நன்றாக அனுபவித்தேன். எனக்கு ஒரு இளவரசியைப் போன்ற எண்ணம் ஏற்பட்டது. உதய்ப்பூரின் இளவரசியாக என்னை நான் நினைத்துக் கொண்டேன். இது மிகச் சிறந்த அனுபவம் என்றார் ராக்கி.
உதய்ப்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் போட்டியாளர்களை தங்க வைத்து ஒவ்வொருவரையும் நேரிலும் பரிசீலித்தார் ராக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Teen Girl Lost her life while Twittering
Teen Girl Lost her life while Twittering
Favia Boricea was 17 years old girl. She found dead at bath dub with her Laptop. She was using Twitter all over the day. She addicted to twitter. She used her laptop while bathing in her bath dub to continue the twitter session. Her hands were wet. She continued the twitter session using her wet hands. Unfortunately she got electric shock and died immediately.
The Crime report clearly says that "There was electric leakage due to improper precaution, invalid usage of laptop with wet hands". The report also says "The accident may happened due to laptop fell down to the bath dub".
Related Post from Cybersimman's Blog : Twitter saved a women's Life
Source : inquisitr.com

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க
பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.
ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.
தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள்.
தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம்.
இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன்.
வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds.
நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார்.
பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும்.
Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது.
RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது.
Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள்.
அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts .
இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.
இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன்.
ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.
சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம்.
பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.
இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன. மேலும் சிலர் பதிவு எழுதுவதை சில காலம் நிறுத்தி விட்டு மீண்டும் துவங்குகிறார்கள். நீங்கள் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுதினாலும் நீங்கள் தக்க வைத்து கொண்டுள்ள வாசகர்களுக்கு உங்கள் படைப்புகளை கொண்டு செல்ல முடியும்.
அல்லது புதிய வலைப்பதிவு எழுதினாலும் Edit Feed Details மூலம் புதிய Feed மாற்றி அளித்து அங்கும் இவர்களுக்கு நம் படைப்புகள் கொண்டு செய்ய வைக்க முடியும். இது போன்ற வசதிகள் நம் வாசகர்களை இழக்காமல் வைத்து கொள்ள உதவும்.
இதன் மூலம் வாசகர்கள் பெருகும் போது நாம் எழுதுவதை நம்மால் எடை போட்டு கொள்ள முடியும். அதிகரித்தால் துணிச்சலாக எழுதலாம் :) . எழுதும் போதும் நம்மை நம்பி சந்தாதாரர் ஆகி உள்ளவர்களுக்காக எழுதுகிறோம் என்று உற்சாகம் பிறக்கும்.
RSS Feed வசதி அளிப்பதால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர மாட்டார்கள். Feed Reader , ஈமெயில் மூலம் வாசித்து இருந்து விடுவார்கள் என்ற தவறான குற்றசாட்டு உண்டு. தளத்திற்கு வந்து படிப்பவர்களை இது பாதிப்பதில்லை. ஒன்றுமில்லாமல் போவதற்கு பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்களையாவது கையில் வைத்து கொள்ளலாமே. Feedburner உங்கள் வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தும். கண்டிப்பாக உபயோகியுங்கள்.Vista/Windows7 - இல் Check Boxes option கொண்டு வருவது
ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோப்புகளை காப்பி செய்யும் போது நாம் Ctrl Key - யை அதிகமாக பயன்படுத்துவோம்.இதனை தவிற்க இந்த முறைய பயன்படுத்தலாம்
இதனை செயல்படுத்த எளிமையான வழி பின் வரும்மாறு செய்யவும்
Organize ->Folder and search options ->view tab
then check the option "Use Check Boxes to select items" and select ok
இந்த படத்தை பர்க்கவும் இதில் உள்ள Check Box - யை டிக் செய்யவும்.
பின்பு Ok - அழுத்தவும் .
இனிமேல் நாம் கோப்புகளை காப்பி செய்ய Ctrl key அழுத்தி mouse -யை போட்டு அட்டமாட்டோம் .cut,copy delete -செய்வது எளிமையாக இருக்கும்.
ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு!
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது.
பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.
எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம். |
23 ஜூன் 2009
பில் கேட்ஸ் வீட்டில் iPod, iPhone-க்கு தடை+ மற்ற IT செய்திகள்
1. உலகமே விருப்பத்துடன் பயன்படுத்தும் ஆப்பிளின் ஐபோட்(iPod), ஐஃபோன்(iPhone) மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பசங்க (2 பெண்கள், ஒரு பையன்) ஆசைப்பட்டு கேட்டாகூட கிடையாது.
இதை நான் சொல்லலைங்க! பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸே Vogue பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க!
தன் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருக்கும் ஐஃபோன்களை திருமதி. பில் கேட்ஸ் பார்த்துட்டு, நமக்குன்னு ஒன்னு இல்லையே என்று ரொம்பத்தான் ஏங்கிப் போய் கிடக்கறாங்க.
2. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது. IE8-ல் மட்டுமே தெரியும் மாதிரி ஒரு web page-ஐ உருவாக்கி மறைத்து வைத்துள்ளது.
3. ஒரு ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பேர், கம்பெனி கொடுத்த லாப்டாப்பை அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போட (sincerely) பயன்படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
4. இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். விலை குறைந்து போச்சுன்னு டபுள் டிஜிட் மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா வாங்கி நாம இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் இதில் சேர்த்தி.
5. இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
6. Redhat ஸ்பான்சர் செய்யும் ஃபெடோரா(Fedora) லினக்ஸ் புதியதாக Fedora 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20 நொடியில் booting ஆக முயற்சிப்பது, default ஃபைல் சிஸ்டமாக புதிய ext4, ஓப்பன் ஆபீஸ் 3.1, KDE 4.2.2 ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில சிறப்பு அம்சங்கள். செல்லப் பெயர் Leonidas.
7. V1*GRA வாங்கலியோ.. இப்படி இதை வாங்கு. அதை வாங்குன்னு அழையா விருந்தாளியா வந்து தொல்லை கொடுக்கும் குப்பை ஈமெயில்களைத்தான் Spam என்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் தன் அறிக்கையில் உலகின் மொத்த ஈமெயிலில் 97 சதவீதம் spam என்று சொல்கிறது. அவ்வளவு ஒன்னும் என் inbox-க்கு வரலியேன்னா அதுவும் சரிதான். Mail server-லியே Spam filter வைத்து அதிகபட்சம் ஸ்பாமை நசுக்கிடறாங்களே!
நீங்கள் ஓட்டு போட்டு இந்த பதிவை மேலும் பலர் படிக்க வழி செய்யுங்களேன்.
இன்று விஜய் பிறந்த நாள்: இலவச கம்ப்யூட்டர் மையங்கள் திறப்பு
தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்குஇன்று 36-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய்.22062009
அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய்.
பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.
பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார்.
வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!

அப்ரிதிக்கு 'டோப்' டெஸ்ட்!-யூனிஸ் கான் ஓய்வு!!
லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல பேருதவி புரிந்த ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திடீரென ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது.
நேற்று லண்டனில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது. ஊக்க மருந்து சோதனை நடத்த வருமாறு அப்ரிதிக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டதாம். போட்டியின் முடிவில் சோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார் அப்ரிதி.
இதனால் அப்ரிதியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் வியப்படைந்தனராம்.
ஆனால் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கமானதுதான் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அணியில் இல்லை..
இதற்கிடையே, இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணியில் அப்ரிதி சேர்க்கப்படவில்லை.
வருகிற 26-ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது பாகிஸ்தான்.
இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அப்ரிதி இடம் பெறவில்லை.
மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்ரிதி இடம் பெறவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
யூனிஸ் கான் ஓய்வு!!:
இதற்கிடையே டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ல் நடந்த முதல் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் வீழ்த்தி கோப்பை வென்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாடிய யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழத்தி கோப்பை வென்றது.
இந்நிலையில் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோப்பையை என் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இது தான் நான் விளையாடிய கடைசி டுவென்டி-20 போட்டி. இந்த போட்டியுடன் டுவென்டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு தற்போது 34 வயதாகிவிட்டது. இந்த வயதுக்கு மேல் டுவென்டி-20 விளையாட முடியாது.
பாகிஸ்தான் வாருங்கள்...
சமீபகாலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அப்போது தான் எனது மகனும், பக்கத்து வீட்டு சிறுவர்களும் கிரிக்கெட் விளையாட அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்க்க முடியும்.
பாகிஸ்தான் வீரர்களாக சிறப்பாக விளையாடினார்கள். அதிரடி அப்ரிதி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் உலக கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டி ஆகியவற்றில் தோல்வியடைந்தோம்.
இதனால் நாங்கள் சூப்பர்-8 தொடருக்கு முன்னேற மாட்டோம் என விமர்சித்தார்கள். தொடரை தோல்வியுடன் துவக்கினாலும் இறுதியில் கோப்பையுடன் நாடு திரும்புகிறோம் என்றார் யூனிஸ்.
XP Themes இவைற்றை பயன்படுத்துவதில் Computer வேகம் குறையாது .
நமது windows XP-யை பலப்படுத்த நான் பயன்படுத்தி பார்த்த சில Themes உங்களுக்காக . நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு பின்னுட்டம் எழுதுக.
1. Royale XP(SP3)
இவை windows xp (SP3) வகை (Logon Sound) வித்தியாசமானவை . மேலும் இவை முற்றிலும் Control Panel மாறுப்பட்டு காணப்படும் .
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
2.Crystal XP
இவற்றின் சிறப்பு கோப்புகளை விரைவாக Copy செய்ய உதவும்.மேலும் Booting screen மாறுப்பட்டு கானப்படும்
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
3.Windows 7
விண்டோஸ்7 இல்லையா என்று கவலை பட்டவர்களுக்கு இவை உதவும்
விண்டோஸ்7 போலவே முற்ற்றிலும் மாறுப்பட்டு காணப்படும்.
இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும்.
இவைற்றை பயன்படுத்துவதில் கனியின் வேகம் குறையாது .
Note:
i don't Tamil writing but try any mistake in my Tamil writing sorry friend.
2.Crystal XP
இவற்றின் சிறப்பு கோப்புகளை விரைவாக Copy செய்ய உதவும்.மேலும் Booting screen மாறுப்பட்டு கானப்படும்
3.Windows 7
இவைற்றை பயன்படுத்துவதில் கனியின் வேகம் குறையாது .
Note:
i don't Tamil writing but try any mistake in my Tamil writing sorry friend.
தேங்க்ஸ்:_Tamil-English Computer சாம்பார்!
Twenty-20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்
ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் கடைசியாக இலங்கை என்று வெற்றி பெரும் அணிகளை எதிர்பார்த்து இருந்த அனைவரின் நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டு அசத்தலாக கோப்பையை "பாக்" அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடி விட்டது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்தார், இலங்கைக்கு பாக் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் முழுவதும் ஜொலித்த தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமல் முக்கிய போட்டியான இதில் "டக்" அவுட்டானார் இளம் வீரர் முகமது அமர் பந்தில் அதுவும் முதல் ஓவரிலேயே. அதன் பிறகு அப்துல் ரசாக் மூன்று விக்கட்டுகள் விரைவில் எடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களை நிலைகுலைய செய்தார், இதன் பிறகு இலங்கை பாடு திண்டாட்டமாகி விட்டது, அணியின் ரட்சகனாக சங்ககரா திறமையாக சமாளித்து விளையாடினார் ஆனால் அவருக்கு அவர்கள் தரப்பில் மாத்யுஸ் தவிர யாரும் சரியான ஒத்துழுழைப்பு தராததால் அதிகளவில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. கடைசியாக 138 ஓட்டங்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
பாக் அணியில் துவக்க வீரர்களான கம்ரன் அக்மல், ஹசன் இருவரும் நல்ல துவக்கம் தந்ததால் எந்தவித நெருக்கடியும் பாக்கிற்கு ஏற்படவில்லை. கடைசியில் அப்ரிடி சோயப் மாலிக் இருவரும் எளிதாக வெற்றியை உறுதி செய்தனர். எந்த வித பரபரப்பும் இல்லாமல் சாதாராணமாக முடிந்தது.
போன முறை இறுதி போட்டி வரை வந்த பாக் இந்த முறை உலக கோப்பையை வென்று சாதித்து விட்டது.
எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.
நமக்கு பிடிக்கிறது பிடிக்கலை அது வேற விஷயம் ஆனால் திறமைசாலிகள் வெற்றி பெற்றார்கள் எனவே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.
நம் இந்திய அணி முதலில் இருந்தே குழு மனப்பான்மையுடன் விளையாடவில்லை, சேவக் நீக்கம், சரியான துவக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய அணி குழப்பத்திலேயே இருந்தது. விளையாடியவர்களும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியதை போல தெரியவில்லை, எதோ உள்ளூர் போட்டிகளில் விளையாடும் எண்ணத்துடன் ஏனோ தானோ வென்று விளையாடி சொதப்பி பல கோடி இந்திய ரசிகர்களின் இதயங்களை தங்கள் பொறுப்பற்ற தனத்தால் நொறுக்கி விட்டார்கள். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்றாலும் கவுரவமாக தோற்று இருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை கேவலமாக தோற்றதினால் தான் கடுப்பாகி விட்டார்கள்..அட! தென் ஆப்ரிக்காவுடன் ஆறுதல் வெற்றி கூட பெறலைங்க.. என்னத்தை சொல்றது!
டோனிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரது அதிரடி ஆட்டம் எல்லாம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது, மொக்கை போட்டுக்கொண்டு உள்ளார். இந்த போட்டிகளில் டோனி சோபிக்கவே இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம், ஹிட்டரான இவரை போன்றவர்களை நம்பியே Twenty-20 போட்டிகள் உள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளர், இந்திய அணி IPL போட்டிகளில் கலந்து கொண்டதாலே சோர்வடைந்து விட்டார்கள், இதனாலேயே நம் அணியின் வெற்றி பறி போய்விட்டது என்று குற்றம் சாட்டி உள்ளார், ஆனால் இதை டோனி மறுத்து பேசியுள்ளார். ஒரு அணி தோல்வி அடையும் போது இதை போல சர்ச்சைகள் வருவது சகஜமே. ஆனால் எனக்கும் IPL போன்ற போட்டிகளில் வீரர்கள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்பதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக இந்தியாவில் அறிவித்து!! விட்டதால் இனி என்னத்தை பேசி என்ன பயன்? ரசிகர்கள் வழக்கம் போல இதற்க்கு புலம்பி விட்டு அடுத்த போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் போது சூப்பர்! சூப்பர்!! னு சொல்லிட்டு வழக்கம் போல பிழைப்பை! பார்க்க வேண்டியது தான்.
நம்ம நிலைமை ஆஸ்திரேலியாவை ஒப்பிடும் போதும் பரவாயில்லை :-) அவர்கள் கேவலமாக தோற்று விட்டார்கள், அதற்க்கு சைமண்ட்ஸ் இல்லாததே காரணம் என்று ஒரு சப்பை காரணம் கூறி இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் சிறப்பாக விளையாடின இருந்தாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி விட்டு இறுதி போட்டியில் சொதப்பி விட்டார்கள். போட்டி நடத்தும் இங்கிலாந்து, மானம் காக்க கடுமையாக போராடியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
ஆடவர் போட்டி பற்றி தானே பேசிட்டு இருக்கோம் பெண்களும் Twenty-20 போட்டியில் கலக்கி உள்ளனர், ஆமாங்க! நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்த முதல் Twenty-20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்தை ஆண்கள் அணி கை விட்டாலும் பெண்கள் அணி கோப்பை கைப்பற்றி நிம்மதி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இந்த வருடம் அமர்க்களமான வருடம். இந்த வருடம் தான் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் (இதிலும் நியுசிலாந்துடன் இறுதி போட்டி) வெற்றி பெற்றார்கள், தற்போது Twenty-20 முதல் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
21 ஜூன் 2009
3வது முறையாக நடிகர் சங்கத் தலைவரானார் சரத்குமார்
திரையுலகின் பலமான அமைப்புகளில் ஒன்றான நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாம் முறை தேர்வாகியுள்ளார் நடிகர் சரத்குமார்.
அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து அனைத்து நிர்வாகிகளுமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் ஜூலை 12-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலுக்கு அவசியமில்லாமல் போனது.
நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார்
உள்பட அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த பிறைசூடன் அறிவித்தார்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், முரளி, சார்லி, மும்தாஜ் உள்பட 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களுடன் வைத்யநாதன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு தேர்தல்
விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 57 ஆண்டுகளில் தலைவர் உள்பட 29 பேர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்தார்.
புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா, ஜுலை 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சரத் பேட்டி
பின்னர் நிருபர்களுக்கு சரத் குமார் அளித்த பேட்டி:
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடம் இந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். ஏறக்குறைய ஒரு லட்சம் சதுர அடியில் புதிய கட்டிடம், குளிர்சாதன வசதியுடன் அமையும்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற இருக்கிறோம். அப்போது புதிய இடத்தில், சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்றார்.
இந்த முறையாவது நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து கெளரவம் தேட முயலட்டும் நடிகர் சங்கம்.
நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் விஜய் அவார்ட்ஸ்- ஒரு பார்வை
கொடுக்கப்பட்ட விருதுகளை விமர்சித்திருப்பன்யா!! பின்னூட்டம் போட்டுக் கொல்லலாம் என்று வந்தீர்களா.... ஏமாந்த காக்கா ஏமாந்த காக்கா... நான் சொல்லப் போறது என்னான்னா.. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி வந்தாங்கோ!!... மேடையில என்னென்ன ஃபிலிம் காட்டினாங்கோ!! என்னெல்லாம் நல்லாருந்திச்சு! என்னெல்லாம் கடுப்பைக் கிளப்பிச்சு என்று சும்மாங்காட்டியும் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்பமே என்றுதான் இந்தப் பதிவு.
உடையலங்காரம்
நம்மவர்கள் கொஞ்சம் இதுல வீக். எங்க எப்பிடி உடை உடுத்துவது என்ற வரையறை பெரும்பாலும் இவர்களுக்கு இருப்பது இல்லை. சிலபேர் ஏதோ வெளிநாட்டில் நடக்கும் விருது விழாவுக்கு வருவது போலவும், சிலபேர் எதோ பக்கத்து வீட்டு நிகழ்ச்சிக்கு வருவது போலவும், சிலபேர் (சில பேர் என்ன சில பேர், இரண்டே இரண்டு பேர்) டிஸ்கொத்தேக்கு வருவது போலவும் வந்திருந்தார்கள். கமல் வழமை போலவே இளமையாய் வந்தார். உடையிலும் பெரிதாக குறை சொல்ல முடியாது. ஆனால் அவர்கூட வந்த அந்த 4 வேற்றுக் கிரகவாசிகள்தான் யாரென்று தெரியவில்லை. தனுஷ் போன வருடம் போட்ட அதெ உடையோடு வந்த மாதிரி இருந்தது. நயன்தாரா உடுக்கணுமே என்று உடை உடுத்தி வந்திருந்தார். தமன்னா ஓ.கே ரகம். நம்ம இளைய தலைவலிகூட ஏனோ தானோ என்று வந்திருந்தார். முருகதாஸ், பார்த்திபன் எல்லோரும் அவ்வாறே. மனோரமாவும், பூர்ணிமாவும் சேலையில் வந்திருந்தார்கள். சங்கீதா, சினேகா looked O.K. தாய்மை பெண்களின் அழகைக் கூட்டும் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதற்கு சமீபத்திய உதாரணமாக வந்திருந்தார் ‘ஜோ'. 'ஜோ' வுக்கே ஜோதி போல் அழகாக வந்திருந்தார் சூர்யா. கார்த்தி உடைத்தெரிவில் அண்ணனிடமும் அண்ணியிடமும் நிறையக் கற்கவேண்டும். பழைய முகங்கள் பாலசந்தர், சிவகுமார் போன்றோர் சட்டை போட்டு இன் பண்ணி வந்திருந்தார்கள். பிரசன்னாவின் நிறத்தேர்வு உவ்வே. ஜெய், அஜ்மல் பரவாயில்லை. மிஷ்கினுக்கு பிறந்ததிலிருந்தே 'மெட்ராஸ் ஐ' போல. அந்தக் கண்ணாடியைக் கழட்டுங்க பாஸூ.
கண்ணுக்கு அழகு
சூர்யா- ஜோதிகா ஜோடி. (வெள்ளாடை தேவதையும் கொள்ளை கொண்ட கந்தர்வனும்), கமல், பரத். விருது நிகழ்ச்சிக்கு முன் சிகப்பு கம்பள வரவெற்புக் கொடுத்த திவ்யதர்ஷிணி. (அவங்க பேசின தமிழைச் சொல்லலீங்கோ)
கண்ணுக்குக் கடுப்பு
கௌதமி, கமல் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, கௌதமி மகள் சுப்புலட்சுமி. (இதுல கௌதமிக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்னு விருது வேற). வெங்கட் பிரபு- பிரேம்ஜி அமரன் சகோதரர்களின் Slogan எழுதிய T-Shirts. அதிலும் I think he is a Gay என்ற வாசகம் பொறித்த சட்டையோடு வந்த பிரேம்ஜி கடுப்புகளைக் கிளப்பினார். நீங்க எடுக்கிற படம் ஜாலியா இருக்கலாம் வெங்கட். ஆனா எங்க எப்படி நடக்கணும்னு சிலது இருக்கு. ஓவர் ஃபிலிம் உடம்புக்காகாது பாஸூ.
மேலும் படங்கள் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.
நல்லாருந்தது
- போன வருடத்தின் சிறந்த Entertainer விருது பெற்ற தனுஷின் பேச்சு, நாகேஷ், ஆர். சி. சக்தி, அனந்து பற்றிய கமலின் பேச்சு, 'அஞ்சாதே' படத்தில் குருவியாக நடித்த 'பாம்' ரமேஷின் எளிமையும் அப்பாவித்தனமும் கலந்த பேச்சு.
- மேடையின் பின்புறத்திலிருந்த பெரிய திரை.
- தன் வழமையான உற்சாகதோடு தேவா, லெஸ்லி சகிதம் ஹரிஹரன் பாடிய 'மோதி விளையாடு' பாடல்.
- ருக்மணி டான்ஸ்.
- 'சத்யம் சினிமாஸ்'சுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். (இவங்கதான் சினிமா நல்லா ஓட தியேட்டர் தேவைன்னு முதன் முதலாகக் கண்டு பிடிச்சிருக்காங்க)
- ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம் மேனன் காட்சிகள். மற்றும் ஹாரிஸின் சிம்பிளான பேச்சு. அவர் ஜேம்ஸ் வசந்தனின் ‘கண்கள் இரண்டால்' பற்றி சொன்ன வரிகள்
- கோபிநாத். கோபி.. நீங்க 'நீயா நானா ' நிகழ்ச்சி பண்ணலை. பள்ளிக்கூடப் பசங்களை வாத்தியார் கேள்வி கேட்பது போல் அதட்டிக் கேள்விகேட்கிறார் இல்லை புகழ்கிறேன் பேர்வழி என்று வழிந்துக கொண்டே................ இருக்கிறார். இவருக்கு யூகி சேது எவ்வளவோ தேவலை. (அந்த Best Wishes, வாஆஆஆஆஅவ், கூ.........ல் மூணையும் விட்டு வெளிய வாங்க கோபி. அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் சரக்கிருக்கு என்று எங்களுக்கு தெரியும். அதுக்காக அதிமேதாவித்தனமான கேள்விகள் எல்லாம் ஒரு விருது மேடையில் ஓவர். ஹாரிஸ்-கௌதம் எபிசோடில் ரொம்ப எல்லை மீறிட்டார்.
- கமலைப் புகழ்கிறோம் பேர்வழி என்று எல்லாரும் புகழ்ந்து கொண்டே........ இருந்தார்கள். திகட்டுகிறது.
- அப்புறம் கமல், சூர்யா, சிவகுமார் குடும்பம், பாலசந்தர், மனோரமா சம்பந்தப் பட்ட தருணங்கள் எல்லாம் ஏதோ விக்ரமன் படம் பார்க்கும் உணர்வு. விருது மேடையை நட்சத்திரங்கள் நாடக மேடையாகக் கற்பனை பண்ணிவிட்டார்கள் போல். ஒரே கண்ணீர் மயம்... அடப் போங்கப்பா.
- 'செவாலியேர் சிவாஜி' விருதை வாங்க ரஹ்மான் வராதது.
- டான்ஸில நம்ம அடிச்சுக்க முடியாது என்று சொன்னார் கோபி. ஆனா கிட்டத்தட்ட எல்லா டான்ஸுமே சுமார்தான். அதுவும் அந்த தோனிய வச்சுப் பேர் பாத்திச்சே ஒரு பொண்ணு... அத இனிமே ஆடக்கூடக் கூப்பிடாதீங்க ஆமா.
மெய் சொல்லப் போறேன்
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை - ஆகஸ்டில் ஏலம்
டெல்லி: நவீன செல்போன் தொழில் நுட்பமான 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் விடுகிறது மத்திய அரசு. இதன் மூலம் அரசுக்கு ரூ.32 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமும் நிதியமைச்சகமும் அறிவித்துள்ளன.
அடுத்த தலைமுறைக்கான நவீன செல்போன் சேவைகளை உள்ளடக்கிய 3-வது தலைமுறை (3 ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அலைவரிசை வசதி இருந்தால் போதும், செல்போனில் அதிவேக இண்டர்நெட், வீடியோஸ் மற்றும் சில மதிப்பு கூட்டு சேவைகளைப் பெறலாம்.
இப்போதைக்கு மத்திய அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுடன், 6 தனியார் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.2 ஆயிரத்து 20 கோடியாக நிர்ணயம் செய்ய தொலைத் தொடர்புத்துறை விரும்பியது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தியது.
இதனைத தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா ஆகியோர் சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், இந்தப் பேச்சுக்கள் நடந்தன. இறுதியில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
அதன்படி, குறைந்த பட்ச ஏலத்தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டது மத்திய தகவல் தொடர்புத் துறை. ஆகஸ்டு மாத மத்தியில் ஏலம் நடைபெறும். இந்த ஏல விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.32 ஆயிரத்து 320 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலப் போட்டியில், அரசுத் துறையின் இரு நிறுவனங்கள் தவிர, பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடாஸ் மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வயர்லெஸ் பிராடுபேண்ட் எனப்படும் வி மேக்ஸ் சேவையையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது தொலைத் தொடர்பு அமைச்சகம். இதற்கு ஆரம்பத்தில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.1010 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.2020கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மே. இந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை
லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இலங்கை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை டுவென்டி 20 சாம்பியன் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது.
முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின.
மிகச் சிறப்பாக ஆடிய இலங்கை அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மிரட்டி விட்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் அதிரடியாக ஆடி 96 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் சில விக்கெட்கள் மடமடவென்று சரிந்தபோதும் கூட தில்ஷான் நங்கூரமிட்டது போல நின்று விட்டதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படவில்லை.
இறுதியில், 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வந்தது. ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறி கொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இலங்கை பந்து வீச்சாளர் ஏஞ்செலோ மாத்யூஸ் முதல் ஓவரிலேயே முத்திரை பதித்தார். சேவியர் மார்ஷல், லென்டில் சிம்மன்ஸ், பிரேவோ ஆகியோர் ஒவ்வொரு பந்து வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் நிலை குலைந்தது.
அதன் பின்னர் அந்த அணி எழுந்திருக்கவே இல்லை. கேப்டன் கெய்ல் நிலைமையைப் புரிந்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்குத் துணையாக ஒரு வீரரும் நிலைக்கவில்லை. கெய்ல் 50 பந்துளில் 63 ரன்களைக் குவித்தார்.
தனி ஒருவராக கிணறு தோண்டியதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் கரை சேர முடியாமல், 17.4 ஓவர்களிலேயே 101 ரன்களுடன் சுருண்டு போனது அந்த அணி.
மாத்யூஸ் 3 விக்கெட்களையும், முரளீதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் பாக்.குடன் மோதல்
..
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இலங்கை, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை சந்திக்கிறது.
முதலாவது உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. இந்த முறையும் இரு ஆசிய அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின.
மிகச் சிறப்பாக ஆடிய இலங்கை அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மிரட்டி விட்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் அதிரடியாக ஆடி 96 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் சில விக்கெட்கள் மடமடவென்று சரிந்தபோதும் கூட தில்ஷான் நங்கூரமிட்டது போல நின்று விட்டதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படவில்லை.
இறுதியில், 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வந்தது. ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறி கொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இலங்கை பந்து வீச்சாளர் ஏஞ்செலோ மாத்யூஸ் முதல் ஓவரிலேயே முத்திரை பதித்தார். சேவியர் மார்ஷல், லென்டில் சிம்மன்ஸ், பிரேவோ ஆகியோர் ஒவ்வொரு பந்து வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் நிலை குலைந்தது.
அதன் பின்னர் அந்த அணி எழுந்திருக்கவே இல்லை. கேப்டன் கெய்ல் நிலைமையைப் புரிந்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்குத் துணையாக ஒரு வீரரும் நிலைக்கவில்லை. கெய்ல் 50 பந்துளில் 63 ரன்களைக் குவித்தார்.
தனி ஒருவராக கிணறு தோண்டியதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் கரை சேர முடியாமல், 17.4 ஓவர்களிலேயே 101 ரன்களுடன் சுருண்டு போனது அந்த அணி.
மாத்யூஸ் 3 விக்கெட்களையும், முரளீதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் பாக்.குடன் மோதல் உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்
நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .
(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது .
நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் .
எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும்.
நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.