10 செப்டம்பர் 2009
போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!
நோக்கியாவின் புதிய 'சீரிஸ்' வகை மொபைல் போன்கள்?
மொபைல் சந்தையில் பெருகி வரும் கடும் போட்டியை சமாளிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் புதிய புதிய மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நோக்கியா நிறுவனம் ஏற்கனவே பல சீரிஸ் வகை பெயர்களில் புதிய புதிய போன் களை நமக்கு தந்துள்ளது. அதில் 'ஈ - சீரிஸ்' மற்றும்' என்- சீரிஸ்' வகை மொபைல் போன்கள் குறிப்பிடத்தக்கவை.
இதில் 'ஈ - சீரிஸ்' வகை மொபைல் போன்கள் பிசினஸ் வகை போன்களாகும் இந்த வகை போன்கள் நமது அலுவலக வேலைகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 'என்- சீரிஸ்' வகை போன்கள் ஒரு மல்டிமீடியா வகையை சேர்ந்தவைகளாகும்.
இந்த வகை போன்களில் இல்லாத டிஜிட்டல் வசதிகளே கிடையாது.கேமரா,மொபைல்,ரேடியோ,மொபைல் டிவி,மியூசிக்,கேம்ஸ் என்று எல்லா வசதிகளும் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நோக்கியா நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்போகும் சீரிஸ் வகை தான் X - SERIES (எக்ஸ் - சீரிஸ்)
இந்த வகை சீரிஸ்களில் தற்போது இரண்டு போன்களை நோக்கியா அறிமுகப்படுத்தப் போகிறது.அதில் ஓன்று ஜாவா வகை சேர்ந்தது, மற்றொன்று சிம்பியன் 5th version touch ஸ்க்ரீன் வகையை சார்ந்ததாகும்.
இந்த வகை சீரிஸ் போன்களின் வடிவமைப்பு புதுமையாகவும்,பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாவும் உள்ளது.கிட்டத்தட்ட 'என்- சீரிஸ்' வகை போன் களில் உள்ள எல்லா டிஜிட்டல் வசதிகளும் இதில் உள்ளது.அதையும் தாண்டி இதன் நினைவகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பார்த்தவுடன் வாங்க தூண்டும் வகையில் உள்ள இந்தவகை போன்கள் அடுத்த மாதம் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கிரிக்கெட்-சில சுவையான தகவல்கள், ஆய்வுகள்: பாகம்-1
- ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29. 2 (பந்துகளுக்கு ஒரு விக்கெட், 308 விக்கெட்டுகள், 22.98 Average, 4.71 Economy Rate)
- சக்லெய்ன் முஷ்தாக் (பாகிஸ்தான்): 30.4 (288, 21.78, 4.29)
- ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்)*: 30. 4 (223, 23.86, 4.69)
- வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்): 30.5 (416, 23.84, 4.68)
- அலன் டொனால்ட் (தென்னாபிரிக்கா): 31.4 (272, 21.78, 4.15)
- மக்காயா என்ரினி (தென்னாபிரிக்கா)*: 32.6 (266, 24.65, 4.53)
- அஜித் அகார்கர் (இந்தியா)*: 32.9 (288, 27.85, 5.07)
- கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா): 34.0 (381, 22.02, 3.81)
- முரளிதரன் (இலங்கை)*: 35.0 (511, 22.77, 3.90)
- ஸாஹீர் கான் (இந்தியா)*: 35.9 (225, 29.18, 4.86)
- அஜந்த மெண்டிஸ் (இலங்கை)*: 21.8 (66, 14.48, 3.98)
- ரயான் ரென் டொஸ்காட்டே (நெதர்லாந்து)*: 25.8 (44, 20.86, 4.84)
- ஷேன் பொண்ட் (நியூசிலாந்து)*: 27.3 (128, 19.21, 4.20)
- ஷோன் ரெய்ற் (அவுஸ்திரேலியா)*: 28.4 (38, 25.28, 5.33)
- அன்ரனி கிரே (மேற்கிந்தியத் தீவுகள்): 28.8 (44, 18.97, 3.94)
- ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29.2 (308, 22.98, 4.71)
- ஜெஃப் அலொட் (நியூசிலாந்து): 29.3 (52, 23.21, 4.73)
- லென் பாஸ்கோ (அவுஸ்திரேலியா): 29.5 (53, 20.11, 4.07)
- நவீத்-உல்-ஹசன் (பாகிஸ்தான்)*: 29.8 (100, 27.61, 5.54)
- மிச்செல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)*: 29.9 (93, 24.11, 4.83)
09 செப்டம்பர் 2009
bIT bIT IT செய்திகள்
"Freemium" கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அது வேறு ஒன்றும் இல்லீங்க. Free + Premium = Freemium.
இந்த புதிய வார்த்தை Web 2.0 கம்பெனிகளின் தாரக மந்திரமாக திகழ்ந்து வருகிறது.
அடிப்படை வசதிகளை இலவசமாகவும், மற்ற சிறப்பு/அதிக/விரும்பத்தக்க வசதிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தும் நடத்தப்படும் ஒரு Business Model-தான் இந்த Freemium.
இதற்கு பல உதாரணங்களை காட்டலாம். எளிதான ஒன்று இதோ.
Box.net வலைத் தளத்தில் 1 GB வரை இலவசமாக ஃபைல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 1 GB-க்கு மேல் இடம் தேவை என்றால் பணம் கொடுக்க வேண்டும்.
நண்பர்களோடு அரட்டை அடிக்கும்போது “அது Freemium வெப்சைட்டுன்னு சொன்னாங்களே! ” என்று ஒரு பிட்டு போட்டு அவங்களை குழப்பி, கொஞ்ச நேரம் ரசிக்கலாம். அதுதான் என் ஸ்டைல்.
ஓபெரா (Opera ) இலவச இணைய உலாவியின் Version 10 வெளியாகி உள்ளது. Extension எதுவும் தேவைப்படாத அளவுக்கு நிறைய வசதிகளை உலாவியிலேயே (Browser) சேர்த்து இருக்கிறார்கள். Visual Tabs வசதியை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இது விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல இயங்குதளங்களுக்கும் (Operating Systems) கிடைக்கிறது. டவுன்லோட் சுட்டி.
ஆகஸ்ட் 2009-ல் எடுத்த கணக்குப்படி இணைய உலாவிகளின் (Web Browser) பங்குச் சந்தை விகிதம்
ஓபெரா சுமார் 2%
கூகிள் குரோம் சுமார் 3 %
ஆப்பிள் சஃபாரி சுமார் 4 %
மொஸில்லா
ஃபயர்ஃபாக்ஸ் சுமார் 24%
மைக்ரோசாஃப்ட்
இன்டெர்நெட்
எக்ஸ்ப்ளோரர் சுமார் 67%
கூகிள் குரோம் உலாவியை வெளியிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரே வருஷத்தில் வெர்ஷன் 3-க்கு தூக்கிகிட்டு போயிட்டாங்க. மற்றபடி என்னத்த சொல்ல?
லினக்ஸ், மேக் (Apple Mac) வெர்ஷன் இன்னும் வரவில்லை. ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும் Add-on/Extension வசதி இன்னும் இதில் வரவில்லை.
ஃபயர்ஃபாக்சுக்கு இணையாக வரவே ரொம்ப நாளாகும் போல இருக்கிறது.
அமிதாப் பச்சனுக்கு Big B-ன்னு செல்லப்பேர். அப்போ நம்ம கூகிளுக்கு என்ன செல்லப்பேர் வைக்கலாம். Big G.
உற்சாக ஃப்ளாஷ்பேக்… சக நடிகர்களுக்கு கேக் ஊட்டிய ரஜினி!
பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதைப் போன்றதொரு உற்சாகமான, இனிமையான விஷயம் உலகில் வேறேதும் இருக்குமா…
இல்லையென்பதுதான் பெரும்பானயினரின் பதிலாக இருக்கும்.
பள்ளி நாட்களையும், கல்லூரி காலத்தையும் பழைய மாணவர்கள் தங்கள் பழைய தடங்களில் பாதம் பதித்து நடந்து பரவசப்படுவதைப் போல, தாங்கள் வெற்றியின் உச்சத்தில் இருந்த பழைய காலங்களை நினைத்துப் பார்க்க திரையுலக நட்சத்திரங்களுக்கும் சமீபத்தில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
இந்த நிகழ்விலும் கதாநாயகன்… சாட்சாத் நமது சூப்பர் ஸ்டார்தான்.
பழைய நாட்களையும், பழகிய மனிதர்களையும் மதிப்பதில் அவருக்கு நிகர் அவரே அல்லவா… எனவே இந்த நிகழ்விலும் இந்த சூரியனைச் சுற்றியே மற்ற நட்சத்திரங்களின் கவனமும் அமைந்ததில் வியப்பில்லை அல்லவா!
விருந்து, பழைய நினைவுகளை பகிர்தல், உற்சாகமான நகைச்சுவை, கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துதல், குடும்பம் பற்றிய நலம் விசாரிப்பு என அந்த கலந்துரையாடல் உணர்வுபூர்வமாக இருந்தது. சென்னையில் உள்ள லிஸி ப்ரியத்ர்ஷன் வீட்டில் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
நடிகைகள் சுஹாஸினியும் லிஸி ப்ரியதர்ஷனும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவி ஒளிபரப்பவிருக்கிறது.
அக்காலத்தில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரபு, மோகன், பிரதாப்போத்தன், கார்த்திக், சுமன், சுரேஷ், பானுசந்தர் முதலாவதாக வந்தனர். அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடனும், விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதியுடனும் கலந்து கொண்டனர். சுரேஷ் மொட்டை தலையில் அடையாளமே தெரியாமல் இருந்தார்.
நடிகைகள் ராதிகா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ரேவதி, சுகாசினி, பூர்ணிமா, லிசி பிரியதர்ஷன், ஷோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிகரம் வைப்பது போல் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு விருந்தை கலகலப்பாக்கினார். ரஜினி வந்த கையோடு ‘கேக்’ கொண்டு வரப்பட்டது.
பழைய கதாநாயகர்கள், நாயகிகள் சூழ்ந்து நிற்க ரஜினி கேக் வெட்டினார். எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள். பின்னர் ரஜினியே கைப்பட தன் நண்பர்கள், சக நட்சத்திரங்களுக்கு ‘கேக்’ ஊட்டினார்.
ரஜினி ஜோடியாக நடித்த நதியா, ராதா, ராதிகா, பூர்ணிமா போன்றோர் அவருடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு சுவையான உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டபடியே ஒருவருக்கொருவர் ஜோடியாக நடித்த பழைய மலரும் நினைவுகள் பற்றி பேசி அதில் மூழ்கினர்.
ஒரு சுவாரஸ்யமான ஆட்டோகிராபை புரட்டிப் பார்த்த சந்தோஷத்துடன் நட்சத்திரங்கள் கலைந்து சென்றனர்.
12 வேடம்- கின்னஸில் பிரியங்கா!
ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ
இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.
சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.
இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.
புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.
கூகுளிற்கு வயது பதினொன்று...!!!
செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.
கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.
1995
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996
பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.
1997
கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.
1999
கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.
2000
குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.
2001
கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.
2002
கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது.
2003
அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.
2004
மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.
2005
கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006
யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.
2007
டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.
2008
கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.
2009
கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.
மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?
தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.
இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
30 ஆகஸ்ட் 2009
விஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்
, சரத்குமார்
, கார்த்திக்
பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள்
வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன் வந்தாலோ, அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.
இந்தியா வழங்கிய ராணுவ உதவிகள்...
மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது.
இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கையின் தற்காப்புக்கு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல்கள், டாங்கிகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார்.
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) 'பீஷ்மா' ரக டாங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளவாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2007 ஜூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சொன்னார்.
இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு
அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் -திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தமிழர்களை அழிக்க நினைக்கும் ராகுல்
இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா
வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ்
ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
அனாத்து திரையரங்குகளின் வசூல் விவரம்
திரையரங்கத்தின் பெயர் மொத்த வசூல்
அபிராமி காம்ப்ளக்ஸ் 27,18,184.00 (33790 ரசிகர்கள்)
சத்யம்
காம்ப்ளக்ஸ் 43,17,072.00 (44899)
ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் 12,77,317.00 (21659)
ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸ் 14,58,045.00 (14258)
ஐடிரிம்ஸ் காம்ப்ளக்ஸ் 9,23,463.00 (13947)
கமலா தியேட்டர் 11,76,679.00 (15697)
மகாராணி தியேட்டர் 8,60,161.00 (19859)
மெலோடி தியேட்டர் 6,82,536.00 (13944)
சங்கம் தியேட்டர் 15,64,458.00 (21707)
சாந்தி காம்ப்ளக்ஸ் 8,28,214.00 (16646)
உதயம் காம்ப்ளக்ஸ் 15,37,649.00 (31641)
மொத்தம்............... 1,73,43,778.00 2,48,047
இந்த ஏழு நாட்களில் படம்
பார்த்தவர்கள் மொத்தம் இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து ஏழு பேர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும், என்று குறிப்பிட்டுள்ளார்.
கோப்புகளை மறைப்பது எப்படி?
எம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா!
லலிதா குமாரிக்கும், குழந்தைகளுக்கும் பிரகாஷ்ராஜ் எந்த உதவியும் செய்வதில்லை: டிஸ்கோ சாந்தி
நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜூக்கும், லலிதாகுமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார். நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த பிரகாஷ் ராஜ் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.
பிரகாஷ் ராஜ் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருத்தியிருந்தது. இதற்கிடையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜுடன் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்த மனுவும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜை பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கணவர் பிரகாஷ் ராஜுடம் இருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி விவாகரத்து பற்றி டிஸ்கோ சாந்தி கூறியதாவது,
என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். வடபழனியில் உள்ள முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.
ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு பேரும் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். என் தங்கை 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடிக்கிற தண்ணீர் சப்ளை செய்வதை கூட நிறுத்தி விட்டார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம், என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பூப்படைந்தாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியை நடத்தினேன்.
பெற்ற மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். குழந்தைகளுக்கு உடைகள் கூட வாங்கி தருவதில்லை. இரண்டாவது மகளின் பிறந்தநாளுக்கு நான்தான் உடை வாங்கி கொடுத்தேன்.
எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன் என்றார்.
கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க
பார்த்துட்டு ஒட்டு போட மறக்காதீங்க.
Google - புத்தகங்களும் இனி இலவசம் ...
http://books.google.com மூலம் புத்தககங்களை தேட,படிக்க
மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள்,
இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது.
இப்புத்தகங்களை Public Domain மூலம் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF அல்லது
EPUB Format-ல் தரவிறக்கலாம்.
உதாரணமாக William Shakespeare-இன் படைப்பான
Hamlet இலவசமாக கொடுக்கின்றது.தரவிறக்க
இங்கே சொடுக்குங்கள்.
மேலும் 10 லட்சம் புத்தகங்கள் படிக்கவும்,தரவிறக்கவும்
காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள்
Google Books
28 ஆகஸ்ட் 2009
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.
ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
1.Eraser
தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download
2.Kill Disk
தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/
நன்றி வணக்கம் !
தொடர்புடைய பதிவு :
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
ரவியுடன் நடிக்க மறுத்த நடிகை!
விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது.
மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது.
ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.
"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்
தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'தட்டச்சு' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'தட்டச்சு' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(MS Office,Corel draw,Pagemaker..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.
கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..
குறிப்பாக" தன்னியக்க திருத்தம் "( Autocorrect ) எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "Font Sampler" எனப்படும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம் அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குறி மூலமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச்சிக்கல்கள், விசைப்பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான " தன்னியக்க திருத்தம் "(Auto Correct) வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது.
மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது ஒருங்குறியிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற மொழிமாற்றும் ( transliteration )விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், ஒருங்குறியிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பப்படி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.
மேலதிக தகவல்களுக்கு: http://auw.sarma.co.in/Info/flasha/index.htm
எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்! - சோனியா அகர்வால்
நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!
விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்
சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்

THANKS
சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!












