Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 செப்டம்பர் 2009

கிரிக்கெட்-சில சுவையான தகவல்கள், ஆய்வுகள்: பாகம்-1

என்னடா இவன் அடிக்கடி கிரிக்கெட் பதிவுகளை எழுதுகிறானே என்று நினைக்கக் கூடாது. நான் இந்த விளையாட்டில் ஒரு பைத்தியம். 1996ல் பிடித்த இந்தப் பைத்தியம், 2005ல் உச்சக்கட்டத்தை எட்டி, இப்போது கொஞ்சம் சமநிலை அடைந்திருக்கிறது. நான் அணு அணுவாக ரசிக்கும் இந்த விளையாட்டின் புள்ளி விபரம் சார்ந்த சில ஆய்வுகளை www.cricinfo.com அடிக்கடி வெளிவிடும். அவற்றில் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தித் தரலாம் என்று நினைக்கிறேன்.
விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார்?
இதைத் தீர்மானிப்பதில் ஒரு கருதுகோளை நான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது இந்த ஆய்வில் நான் பார்க்கும் எல்லாப் பந்து வீச்சாளர்களுமே ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி இருக்கவேண்டும். ஏனெனில், ஒன்றரை வருடக் கிரிக்கெட் வாழ்வில் யாரையும் தீர்மானிக்க முடியாது. (உதாரணம்: இர்ஃபான் பதான், ஷோயப் அக்தர்). ஆகையால் இந்த 200 விக்கட் எடுத்தவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்று ஆராய்வோம். இந்தப் பதிவை நான் இடும் இந்தக் கணத்தில் (09.09.09 மாலை 7:25) 30 பேர் 200 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்தி, சாதனை படைத்துள்ளார்கள். அதிகபட்சமாக முரளிதரன் 332 போட்டிகளில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை முரளியும், வசீம் அக்ரமும் மட்டும் கடந்திருக்கிறார்கள். 400 விக்கெட்டுகளுக்கு மேல் சமிந்த வாஸ் மற்றும் வக்கார் யூனுசும், 300 விக்கெட்டுகளுக்கு மேல் ஷோன் பொலொக், கிளென் மக்ராத், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், சனத் ஜயசூரிய, ப்ரெட் லீ ஆகியோர் கடந்திருக்கிறார்கள். 20 பேர் 200 க்கும் 300 க்கும் இடையில் இருக்கிறார்கள். இவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்பதை Strike Rate எனப்படும் ஒரு விக்கெட் எடுப்பதிற்கு எத்தனை பந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் இருந்து மட்டுமே கணித்தால் முதல் 10 இடங்களில் இருப்பது யார் தெரியுமா? (குறிப்பு: ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகள் என்பதை ஞாபகத்தில் கொள்க)
  1. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29. 2 (பந்துகளுக்கு ஒரு விக்கெட், 308 விக்கெட்டுகள், 22.98 Average, 4.71 Economy Rate)
  2. சக்லெய்ன் முஷ்தாக் (பாகிஸ்தான்): 30.4 (288, 21.78, 4.29)
  3. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்)*: 30. 4 (223, 23.86, 4.69)
  4. வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்): 30.5 (416, 23.84, 4.68)
  5. அலன் டொனால்ட் (தென்னாபிரிக்கா): 31.4 (272, 21.78, 4.15)
  6. மக்காயா என்ரினி (தென்னாபிரிக்கா)*: 32.6 (266, 24.65, 4.53)
  7. அஜித் அகார்கர் (இந்தியா)*: 32.9 (288, 27.85, 5.07)
  8. கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா): 34.0 (381, 22.02, 3.81)
  9. முரளிதரன் (இலங்கை)*: 35.0 (511, 22.77, 3.90)
  10. ஸாஹீர் கான் (இந்தியா)*: 35.9 (225, 29.18, 4.86)
இவர்களில் லீ மட்டுமே ஒரு போட்டியில் அதிகளவாக வீசக்கூடிய 60 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். முரளி, மெக்ராத் போன்ற ஜாம்பவான்களைவிட அகார்கர், என்ரினி போன்றோர் முன்னிலையில் இருக்கிறார்கள். வசீம் அக்ரம், சமிந்த வாஸ், ஷோன் பொலொக், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஷேன் வோர்ன் போன்ற இன்னபிற ஜாம்பவான்கள் இந்த முதல் பத்துப் பேரில் இல்லை. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு போட்டி இரு போட்டிகள், ஒரு வருஷம் இரண்டு வருஷம் மட்டும் விளையாடிய இளம் வீரர்களையும் சேர்த்து ஒரு முதல் 10 பட்டியல் தயாரித்தால், அதில் ப்ரெட் லீ தவிர வேறு யாருமே இடம்பெற மாட்டார்கள். அந்தப் பட்டியல் இதோ
  1. அஜந்த மெண்டிஸ் (இலங்கை)*: 21.8 (66, 14.48, 3.98)
  2. ரயான் ரென் டொஸ்காட்டே (நெதர்லாந்து)*: 25.8 (44, 20.86, 4.84)
  3. ஷேன் பொண்ட் (நியூசிலாந்து)*: 27.3 (128, 19.21, 4.20)
  4. ஷோன் ரெய்ற் (அவுஸ்திரேலியா)*: 28.4 (38, 25.28, 5.33)
  5. அன்ரனி கிரே (மேற்கிந்தியத் தீவுகள்): 28.8 (44, 18.97, 3.94)
  6. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29.2 (308, 22.98, 4.71)
  7. ஜெஃப் அலொட் (நியூசிலாந்து): 29.3 (52, 23.21, 4.73)
  8. லென் பாஸ்கோ (அவுஸ்திரேலியா): 29.5 (53, 20.11, 4.07)
  9. நவீத்-உல்-ஹசன் (பாகிஸ்தான்)*: 29.8 (100, 27.61, 5.54)
  10. மிச்செல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)*: 29.9 (93, 24.11, 4.83)
* தற்போதும் களத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கை மாறலாம். ஆக, இப்போதைய நிலவரப்படி, 200 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி தன்னுடைய திறமையை நீண்ட காலம் நிரூபித்தவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் விண்ணன் என்று ப்ரெட் லீயைச் சொல்லலாமா??
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com