11 செப்டம்பர் 2009
யுஎஸ் விமான நிலையங்களில் பமீலா விளம்பர வீடியோவுக்கு தடை
கவர்ச்சி தாரகை பமீலா ஆன்டர்சன் நடித்துள்ள ஒரு விளம்பர வீடியோவை அமெரிக்க விமான நிலையங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் மீதான சித்திரவதைகளுக்கு எதிரான மனிதர்கள் (பெடா) என்ற அமைப்பு பமீலா ஆன்டர்சனை வைத்து ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியாக அதில் பமீலா ஆன்டர்சன் தோன்றுகிறார். கவர்ச்சி கரமான உடையில் காணப்படும் பமீலா, விமான நிலையங்களுக்கு தோல் ஆடைகள், தோல் பை உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகளை முரட்டுத்தனமாக அணுகி அவற்றைப் பறிக்கிறார்.
ஆண்களின் பேன்ட்டுகளை உருவுகிறார். ஜட்டி கூட இல்லாமல் அத்தனை ஆடைகளையும் கழற்றிப் போட்டு விட்டு துரத்துவது போல அந்தக் காட்சிகள் உள்ளன.
இந்தக் காட்சிகள் சிறார்களின் மனதைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக கருதிய அமெரிக்க விமான நிலையங்கள், பமீலாவின் இந்த விளம்பரத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இந்த விளம்பரத்தை வைக்கவிருந்தனர். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.
இந்தத் தடை யையடுத்து விமானங்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப பெடா முயற்சித்து வருகிறதாம்.