Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

11 ஜூன் 2010

ராவணன் ஒரு முன்னோட்டம்

ராவணன் ஒரு முன்னோட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ராவணன் இன்னும் ஒருவாரத்தில் திரை காணவிருக்கிறான்.விக்ரம்,ப்ரித்விராஜ், ஐஸ்வர்யா பச்சன்,கார்த்திக்,பிரபு,ப்ரியாமணி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ்சிவன், இசை ரஹ்மான்.இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சமாச்சாரம்தான், ராவணன் தொடர்பான எனது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளுமே இந்தப்பதிவு. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்பிலிருந்து பல தடைக்கற்களையும் தாண்டி வெண்திரை காண்கிறபடம்தான் ராவணா.முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், தமிழில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ஹிந்தியில் அதற்கு எதிரான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்,ஒரேபடத்தின் இரண்டு பதிப்புகளில் வேறு வேறு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை(எனக்குத் தெரிந்து).2005 இலிருந்து 2010வரை விக்ரமின் இரண்டு படங்களே ரிலீசாகியுள்ளது,இரண்டும் சொல்லிக்கொள்ளும்படியாய் அமையவில்லை,விக்ரம் மலைபோல நம்பியிருக்கும் படமிது. அண்மையில் ஒரு பேட்டியில் ராவணன் பற்றிக்குறிப்பிட்ட விக்ரம் ஒருவித மிதப்பில் இருப்பதாக கூறியுள்ளார்,படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் அதே மிதப்பு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. நவீன கர்ணனாக 'தளபதியை' செதுக்கிய மணி ராவணனை எப்படி கையாண்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு பட அறிவிப்பிலிருந்து என்னைத் தொற்றிக்கொண்டது. ஏனெனில் ராவணன் கதையும் அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கான திரைக்கதையை மணி எப்படி கையாண்டிருப்பார்? யார் எந்தக் கதாபாத்திரம்? என்பவை இன்னும் எதிர்பார்ப்பை எகிறச்செய்கிறது. எனது சிற்றறிவுக்கு எட்டியபடி ராவணனாக விக்ரம்,ராமனாக ப்ரித்விராஜ்,சீதாவாக ஐஸ்வர்யா,கும்பகர்ணனாக பிரபு,(குருவில் அம்பானிக்கு இரட்டைப் பெண்குழந்தைகள் போல கும்பகர்ணன் கதாபாத்திரம் ராவணனின் அண்ணனாக ஆக்கப்படலாம்)சுக்ரீவன் அல்லது ஹனுமனாக கார்த்திக்,சுர்ப்பனகையாக ப்ரியாமணி, நிச்சயம் மண்டோதரி,விபிஷணன் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.யாரென்பது புலப்படவில்லை,மண்டோதரியாக ரஞ்சிதா நடித்திருக்கலாம். 'உசுரே போகுதே' தவிர பாடல்கள் எதுவும் பெரியளவில் இல்லை என்றாலும் காட்டுசிறுக்கி,கோடுபோட்டா என்பவை படம் வந்தபின் பிக்கப் ஆகலாம்.சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவிலும் மணிரத்னத்தின் படமாக்கலிலும் பாடல்கள் விஷுவல் ட்ரீட் ஆக அமையலாம்.பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகள் பலம். "மனசு சொல்லும் நல்லசொல்லை மாய உடம்பு கேக்கல", "என் கட்டையும் ஒருநாள் சாயலாம் என் கண்ணில உன் முகம் போகுமா" "செத்தகிழவன் எழுதிவச்ச மொத்த சொத்து வீரம்தான்" "பாம்புகூட பழகி பால ஊத்தும் சாதி,தப்பு செஞ்சுபாரு அப்ப தெரியும் சேதி" இவை நான் ரசித்த வரிகள்,கதாபாத்திரத்தின் தன்மையை பாடல்களுக்குள் அடைத்திருக்கிறார் கவிப்பேரரசு. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவர்,வித்தியாசமான கதைசொல்லும் விதமும்,இவர் தனது நாயகர்களுக்கு கொடுக்கும் முற்போக்குத்தனமான ஹீரோயிசமும் என்னைக் கவர்ந்தவை.கதையில் அர்ஜுனன் இருக்க கர்ணனை நாயகனாக்கவும்,ராமனிருக்க ராவணனை நாயகனாக்கவும் மணியால் மட்டுமே முடிந்தகலை. படம் தொடர்பான சில துளிகள்: * மணிரத்தினம் ஆய்தஎழுத்துக்குப் பின் நேரடியாக இயக்கும் தமிழ்ப்படம். * கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்குப் பின் ஐஸ்வர்யா நடிக்கும் தமிழ் படம். * ஐந்து வருடங்களாக ஹிட் கிடைக்காமல் விக்ரம் பெரிதும் நம்பியிருக்கும் படம் * தமிழ் ஹிந்தி தெலுங்கு மூன்று மொழிகளிலும் ஒரே நேரம் வெளியாகிறது * விக்ரம் தமிழில் வீரா என்னும் பாத்திரத்திலும் ஹிந்தியில் தேவ் என்னும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். * ஓடியோவில் வெளிவராத பாடலை பார்க்கும்போது விக்ரம் இறுதியில் இறந்துபோவது போல காட்சி இருக்கலாமென்று நினைக்கறேன். மணிரத்னம் மற்றும் விக்ரமின் கூட்டணியைக் காண இன்னும் ஒரு வாரம் இருக்கிறது,எதிர்பார்ப்பு வீண் போகாது என்ற நம்பிக்கையுடன்.... நன்றி :-*மயூரதன்*

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com