விண்டோஸ் 7/ விஸ்டா இயங்குதளத்தை பயன்படுத்தி வரும் பயனாளர்கள், புதிதாக ஏதாவது மென் பொருளை கணினியில் நிறுவ முயலும் பொழுது, Program Compatibility Assistant விண்டோ தோன்றி, 'This Program might not have installed correctly' என்ற அறிவிப்பை அடிக்கடி நீங்கள் பார்த்து டென்ஷன் ஆகியிருக்கலாம்.
இந்த Program Compatibility Assistant அவசியமானது என்றாலும், இப்படி அறிவிப்பு வரும் பல மென்பொருட்கள், நன்றாகவே வேலை செய்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் கணினியில் தொடர்ந்து பணி புரிபவராக இருந்தால், இந்த அறிவிப்பு தொடர்ந்து உங்களை டென்ஷன் ஆக்கியிருந்தால், இதை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் Start menu வில் உள்ள search box இல் gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில், இடது புற பேனில் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள்.
User Configuration
Administrative Templates
Windows Components
Application Compatibility யில் க்ளிக் செய்து, பின்னர் வலதுபுற பேனில் உள்ள Turn off Compatibility Assistant என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் Turn off Compatibility Assistant திரையில் Disabled என்பதை க்ளிக் செய்து, Apply மற்றும் OK கொடுங்கள்.
அவ்வளவுதான்!. இனி இந்த தொல்லை இருக்காது. மறுபடியும் இது உங்களுக்கு தேவைப்பட்டால், இதே முறையை பின்பற்றி, enable செய்து விடுங்கள்.