Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 ஜூன் 2010

ஒபன் ஆபிஸ் கோப்புகளை மைக்ரோசாப்டில் திறக்க எளிய வழி நிறைய மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே நீங்கள் செல்லும் வலைத்தளங்களில் ஏதும் வைரஸ் மற்றும் மால்வேர் உள்ளதா என்று சோதித்து பிறகு உள்ளே நுழைவது நல்லது. அது எப்படி வலைத்தளங்களை சோதிக்க முடியும். ஏன் முடியாது யாருடைய வலைத்தளத்தையும் நாம் சோதித்து அறிந்து பின்னர் உள்ளே செல்லலாம். இந்த முகவரிக்கு செல்லுங்கள் சுட்டி இங்கு நீங்கள் சோதிக்க விரும்பும் வலைத்தளத்தின் முகவரியை அளித்து Scan கிளிக் செய்தால் போதும் சில நொடிகளில் உங்களுக்கு முடிவுகள் அளிக்கும். இதை நேரடியாக உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் வழி உண்டு.
இணையத்தள சுட்டி
உங்களுக்கு பிடிஎப் 2 வேர்ட் கன்வெர்டர் வேண்டுமா?? உங்களுக்கான பேஸ்புக் கணக்கில் நுழைந்து இதை கிளிக் செய்யுங்கள் சுட்டி இதில் Like என்று பட்டன் மேலே இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் மென்பொருள் தரவிறக்கம் செய்ய இரண்டு பட்டன்கள் இருக்கும் அதன் மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மிகவும் நம்பகமானது இதன் பெயர் AnyBizSoft Word Converter 3.0
ஒபன்ஆபிஸ் கோப்புகளை மைக்ரோசாப்ட் ஆபிஸில் திறக்க எளிய வழி உண்டு. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்கள் இந்த சிறு மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள் சுட்டி மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 உபயோகிப்பவர்கள் முதலில் ஆபிஸ் சர்வீஸ் பேக் 1 நிறுவி இருக்க வேண்டும் நிறுவிய பிறகு இந்த மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள் சுட்டி பின்னர் ஒபன் ஆபிஸ் கோப்பை திறந்தால் எதன் மூலம் திறக்க வேண்டும் என்று கேட்கும் நீங்கள் வேர்ட் கிளிக் செய்யுங்கள் முடிந்தது. இனி ஒபன் ஆபிஸ் நிறுவாமலே உங்கள் ஒபன் ஆபிஸ் கோப்புகளை மைக்ரோசாப்ட் ஆபிஸ் மூலம் படிக்கலாம்.
உங்கள் கணினியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கிறது அதே போல நிறைய புகைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று காப்பி செய்து வைத்திருக்கிறீர்கள் இதனால் இடம் அடைக்கிறது. அப்பொழ்து தேவையில்லாத ஒரே மாதிரி உள்ள புகைப்படங்களை நீக்க விரும்புவீர்கள் ஒவ்வொரு புகைப்படத்தையும் நீங்கள் திறந்து பார்த்து நீங்கள் நீக்குவதற்குள் உங்களுக்கு வெறுத்து விடும் வாழ்க்கை. இதற்கு தீர்வு ஒரே மாதிரி உள்ள படங்களை நீக்க இந்த மென்பொருள் உபயோகியுங்கள் சுட்டி இதன் அளவு வெறும் 1 எம்பி மட்டுமே இந்த மென்பொருள் ஒரே மாதிரி உள்ள புகைப்படங்களை தேடி தருகிறது. அதுவும் எத்தனை சதவீதம் என்று பட்டியலிடுகிறது. அதை பார்த்து நீங்கள் நீக்கலாம்.
இந்த மென்பொருள் எங்கு வேண்டுமானலும் எடுத்து செல்லும் வகையில் போர்டபிள் மென்பொருளாகவும் உள்ளது. போர்டபிளாக தரவிறக்க சுட்டி இதன் அளவு வெறும் 600 கேபி மட்டுமே. பழைய டூம் சூட்டிங்க் விளையாட்டு ஆன்லைனில் விளையாட இங்கே செல்லுங்கள் சுட்டி
உங்கள் டாஸ்க் மேனஜர் டிஸபிள் மற்றும் எனபிள் செய்ய இந்த சிறு மென்பொருள் உதவும். சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன் இந்த பதிவை பிடிஎப் ஆக சேமிக்க‌
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com