எமது கணனியில் இருந்து சில வேளைகளில் சில கோப்புகள் அழிந்து  போய்விடும் அல்லது தவறுதலாக அழித்து விடுவோம், இன்னும் சில வேளைகளில் கணனி இயங்க  முடியாமல் போய் கணனியை முற்றாக அழித்து இயங்குதளத்தை மீள் நிறுவி இருப்போம்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு தேவையான படங்கள், கோப்புகள் போன்றவற்றை  மீளப்பெறுவதற்கு பல மென்பொருட்கள் உள்ளது.அவ்வாறான ஒரு மென்பொருள் தான் இந்த கோப்புமீட்டல் மென்பொருள்.மென்பொருளை  தரவிறக்க
மென்பொருளை பதிவு செய்வதற்கான பயனர் பெயர், தொடரிலக்கம் என்பன  மென்பொருளோடு சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
மென்பொருளை இயக்கி தோன்றும் சாளரத்தில் Fast Format Recover/Complete  Format Recover ஐ தெரிவு செய்து Next கொடுக்கவும்.
பின் மீளப்பெறவேண்டிய கோப்பு இருந்த கணனியின் வன்தட்டின் பகுதியை  அல்லது USB உபகரணத்தை தெரிவு செய்து Next கொடுக்கவும். இவ்வளவு காலமும்  சேமிக்கப்பட்ட கோப்புக்களின் எண்ணிக்கையை பொறுத்தும் மீளப்பெறுவதற்காக நாம் தெரிவு  செய்த கோப்பு வகைகளைப் பொறுத்தும் மீளக்கண்டு பிடிப்பதற்கான நேரம் அமையலாம். கண்டு  பிடிக்கப்பட்ட கோப்புக்களில் தேவையானவற்றை தெரிவுசெய்து கணனி வன்தட்டின் வேறு ஒரு  பகுதியில் சேமிக்கலாம்.
நன்றி :-கணித்தமிழ்