Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 மார்ச் 2009

கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥

நப்கின் ஹோல்டர்

கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥
பழைய cdஇரண்டு, எம்।சீல் - ஒரு பக்கெட், வீட்டில் இருக்கும் ஏதாவது மரத்தில் ஆன கட்டை, பேப்ரிக் கலர், 3டி அவுட்லைனர், பெவிகால்
முதலில் எம்।சீலை நன்றாக மிக்ஸ் செய்து மரக்கட்டையில் கொஞ்சம் பெவிகால் தடவி அதன் மீது சிறிது எம்।சீலை வைக்கவும்.
அதன் மீது cdயினை வைக்கவும்। சிறிது நேரம் பிடித்துக்கொள்ளவும்.
எம்,சீல் சின்ன சின்ன ரோஜாப்பூக்கள் செய்யவும், இலைகளும் செய்யவும். அதனை பெவிகால் தடவி படத்தில் உள்ளது போல் ஓட்டவும் இதை போல் நிறைய பூக்கள், இலைகள், கொடி என்று செய்து ஓட்டவும்। குறைந்தது அரைமணிநேரம் காயவிடவும். பிறகு இலைகளுக்கு பச்சைகலர் கொடுக்கவும்। பச்சை, மஞ்சல் கலந்து கொடுத்தால் இலைகள் மிகவும் அழகாக இருக்கும். பிறகு பூக்களுக்கு சிகப்பு கலர் கொடுக்கவும்॥ அடி பகுதிக்கு கருப்பு கலரில் பெயிட் செய்து காயவிடவும் cdயின் மேல் பகுதியில் 3டி அவுட்லைன் வைத்து விருப்பமான டிசைன் வரையவும்।
காய்ந்த பின்பு டிஸ்யூ பேப்பரை வைக்கவும்॥
எந்த ஒரு பொருளையும் தூக்கி போடாமல் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தவும்

கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது

எல்லோரும் ஏதேனும் ஒரு படத்தை தேட வேண்டும் என்றால் பெரும்பாலும் கூகிள் பட தேடலில் தேடுவோம். கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை.

இப்போது கூகிள் பட தேடலில் சிவப்பு நிற (NOKIA) கைபேசியைன் (Model) பற்றி எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கூகிள் பட தேடலின் (URL)லில் கடைசியில் &imgcolor=red என்று சேர்த்தால் போதும்.

(எடு. கா)

http://images.google.com/images?q=Nokia&imgcolor=red

Search Images in Google with Colors

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு

இந்தியாவில் நடப்பதாக இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அங்கு அடுத்த மாதம் 18 ந் தேதி தொடங்கி மே மாதம் 24 ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 59 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 22 மற்றும் 23 ந் தேதிகளில் அரை இறுதி போட்டிகளும் 24 ந்தேதி ஜோகன்ஸ் பர்க் நகரில் இறுதி போட்டியும் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 தடவை மோத வேண்டும். 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வரும். கேப்டவுன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், பிரிடோரியா, கிழக்கு லண்டன், கிம்பெர்லி, பிளோம்பான்டின், போர்ட் எலிசபெத் ஆகிய 8 நகரங்களில் போட்டி நடக்கும். இதில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டர்பன் நகரில் 16 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிட்டோரியாவில் 12 போட்டிகளும், ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன் ஆகிய இடங்களில் தலா 8 போட்டிகளும் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் 4 போட்டிகளும், பிளோம்பான்டின், கிம்பெர்லி ஆகிய இடங்களில் தலா 2 போட்டிகளும் நடக்கின்றன. பெரும்பாலான நாட்களில் தினமும் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு 2 வது போட்டியும் நடக்கிறது. 18 ந்தேதி கேப்டவுன் நகரில் முதல் நாள் போட்டிகள் நடக்கிறது. இதில் 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்து 8 மணிக்கு நடக்கும் போடடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிகள் மோதுகின்றன.

25 மார்ச் 2009

கம்ப்யூட்டர்கள் பழசு கண்ணா பழசு...!

கணினிகளும் அதி வேகமாக முன்னேற்றம் பெற்று புது பொலிவுடன் நாள்தொறும் புது வடிவமைப்புடன் வந்து கொண்டுள்ளன. TFT மானிட்டர், வயர்லெஸ் மௌஸ், ப்ளூடூத் என்று பல முன்னேற்றங்கள். இந்நேரத்தில் இணையத்தில் பழையகால கணினிகளின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ அவை உங்கள் பார்வைக்காக

சம்பளத்தை ஏற்றினார் சரண்யா!

வெண்ணிலா கபடி குழு ஹிட் ஆகி விட்டதால் டக்கென்று தனது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் க்யூட் நாயகி சரண்யா மோகன். இளம் மலையாள நடிகையான சரண்யா மோகன், தணுஷின் யாரடி நீ மோகினி படம் மூலம் ஹிட் ஆனவர். அதில் நயனதாராவின் தங்கையாக வந்து, தனுஷை டாவடிக்கும் பாத்திரத்தில் அசத்தினார்.
Saranya Mohan with Vishnu
இந்தப் படத்திற்குப் பின்னர் சரண்யாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள். அதில் வெண்ணிலா கபடிக் குழுவில் தனி நாயகி வேடம். படம் சூப்பர் ஹிட் ஆகி விடவே சரண்யா ராசி நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டார். இதைப்ப பயன்படுத்தி தற்போது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் சரண்யா. தற்போது படத்திற்கு ரூ. 15 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். வெண்ணிலாவுக்கு முன்பு வரை அவரது சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தானாம். வெண்ணிலா ஹிட் ஆனதால்தான் இந்த சம்பள உயர்வாம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் கவுன்சில் கூட்டத்தில், நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோல படச் செலவுகளையும் சுருக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பிலிம் ரோலை வேஸ்ட் ஆக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக கோரப்பட்டது. இதன் காரணமாக நயனதாரா, திரிஷா போன்ற பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் ரூ.30 லட்சம் வரை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளனராம். இந்த நிலையில் நேற்று வந்த சரண்யா மோகன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியிருப்பது அவருக்கே வினையாகி விடலாம் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

23 மார்ச் 2009

ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த சச்சின் எதிர்ப்பு!

Sachin Tendulkar
மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வீரர்களின் கருத்து. அதுவே ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையானது, என்றும் சச்சின் கூறியுள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், தீவிரவாத அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாலும், கிரிக்கெட் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டிகளை சில காலம் தள்ளி வைக்குமாறு மத்திய அரசே கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டது. ஆனால் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்தியே தீருவோம் என தீவிரமாக இருந்தது ஐபிஎல். இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு முடிந்த வரை பாதுகாப்புத் தர முயற்சிப்போம் என்றும், ஆனால் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை உள்ளதால் போட்டிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இடையில் தனது போட்டி அட்டவணையை மாற்றியும் அறிவித்தது ஐபிஎல். ஆனால் ஐபிஎல் எதிர்பார்த்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இதனால் போட்டிகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதாக ஐபிஎல் நேற்று அறிவித்தது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இந்த முடிவில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும், முதல்நிலை வீரருமான சச்சின் டெண்டுல்கர், 'ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே,' என்று கூறியுள்ளார். இதேபோல முன்னாள் கேப்டன் கபில்தேவும் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவை விட்டு வெளியில் கொண்டு செல்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜேட்கூடியின் மரணம் சொல்லும் செய்தி..!

23-03-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 27 வயதான ஜேட் கூடி என்ற பெண் தனது இறப்பை எதிர்பார்த்து சில மாதங்களாகக் காத்திருந்து, இப்போது கர்த்தரின் காலடியை அடைந்துவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 'பிக் பிரதர்' என்கிற ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாத வரையில் அவர் யாரென்று இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியுடன் அந்த ரியலிட்டி ஷோவில் பங்கேற்ற ஜேட்கூடி, ஷில்பாவை இனவெறியோடு திட்டியதால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுக.. அந்த அழுகையால் தாங்களும் அழுத லண்டன் மாநகர மக்கள் மொத்த ஓட்டையும் ஷில்பாவுக்கே குத்தி அவரை பரிசு மழையில் நனைய வைத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது நம்மால் கோபமாகப் பார்க்கப்பட்ட அதே ஜேட்கூடிதான் இப்போது நம்மால் பரிதாபகமாப் பார்க்கப்படுகிறார். 27 வயதுதான்.. 5 வயது மற்றும் 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா.. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புற்று நோய் அவரைத் தாக்கியிருக்கிறது. இந்தியாவில் கலர்ஸ் என்கிற சேனல் நடத்திய பிக் பாஸ் ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வந்தவருக்கு மும்பையில் நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. நிச்சயம் இந்திய விஜயம் எனக்கொரு திருப்பத்தைத் தரும் என்று அப்போது சொன்னார். அந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையை முடிக்கிற திருப்பம் என்பதை அவரும், மீடியாக்களும் அறிந்திருக்கவில்லை. ரியலிட்டி ஷோவுக்காக இந்தியா வருவதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் லண்டனிலேயே தகுந்த சிகிச்சையும், உடற்பரிசோதனையும் செய்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார். ரியலிட்டி ஷோவில் ஒரு நாள் ஷில்பாவுக்கு வந்த போன் கால் அவருடைய வாழ்க்கையின் முடிவுரையைச் சொன்னது.. அந்தக் காட்சியை நான் அப்போதே தொலைக்காட்சியில் பார்த்து பேச்சு மூச்சில்லாமல் போனேன். லண்டனில் அவர் செய்துவிட்டு வந்த உடற்பரிசோதனையின் முடிவுகளை அந்த மருத்துவர் தொலைபேசியில் ஜேட்கூடியிடம் சொல்கிறார், "உன்னைத் தாக்கியிருப்பது புற்று நோய். நீ இன்னும் கொஞ்ச நாள்தான் உசிரோட இருக்கப் போற.." - இந்த உண்மையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்..? அதுவும் அம்மா என்கிற கடமையிருக்கிற ஒரு தாய்க்கு.. ஜேட்கூடி மருத்துவர் சொன்னதைக் கேட்டு கதறி அழுததையும், பின்பு வெளியே வந்து தனது சக போட்டியாளர்களிடம் இதைச் சொல்லி அழுவதையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. என்னிடமே இப்போது இந்த வார்த்தையை மருத்துவர் சொன்னால் நான் என்ன ரியாக்ட் செய்வேன் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மும்பை வந்தபோது புன்சிரிப்போடும், உவகையோடும் வந்த ஜேட்கூடி நாடு திரும்பும்போது இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்துவிட்டுத்தான் போனார். லண்டனில் இதன் பின்புதான் ஒரு பெரிய அலையே அடித்திருக்கிறது. அங்கிருந்த மீடியாக்கள் ஜேட்கூடியின் அன்றைய மெடிக்கல் ரிப்போர்ட் என்று தலைப்பிட்டே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போயிருக்கிறது. இதன் விளைவு என்ன தெரியுமா? லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. அந்த வகையில் அவர்கள் ஜேட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நோயோடு போராடிக் கொண்டே சிரித்த முகத்தோடு தினந்தோறும் ஏதாவது ஒரு டிவியிலோ, பத்திரிகையிலோ பேட்டியளித்தவண்ணமே இருந்துள்ளார் ஜேட். அவர் இதன் மூலம் பணம் சம்பாதித்தார் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். பத்திரிகைகளும் அவரை வைத்து சம்பாதிக்கத்தானே செய்தன. அவரைப் பற்றியப் பரபரப்புச் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்களே.. சர்க்குலேஷனும், டிவி ரேட்டிங்கும் ஏறாமலா இருந்திருக்கும்.. மேலே சொன்னபடி குடும்பத்தார் சொல்லியும் கேட்காத இளசுகள் நேரில் பார்த்த ஒரு அனுபவம் தந்த பயத்துடன் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்களே.. இது நல்ல விஷயம்தானே.. ஒன்றும் தவறில்லை. இந்த நேரத்திலும் அவர் தனக்குள் இருந்த காதலை மறைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னார். அவரைவிட ஆறு வயது குறைந்த Tweed என்கிற இளைஞருடனான அவரது காதல் கல்யாணம் வரைக்கும் சென்றது.. இருக்கப் போவது எத்தனை நாட்கள் என்பது தெரியாத நிலையிலும் தனது குழந்தைகளுக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், தனது காதலை நிரூபிப்பிதற்காகவும் அவர் எடுத்த கல்யாண முடிவை வாழ்த்தியே ஆக வேண்டும். பிப்ரவரி 22-ம் தேதி தனது காதலரைக் கைப்பிடித்தார். நோயின் தாக்கத்தால் தலைமுடியினை இழந்து உடல் தளர்ந்து இருந்த நிலையிலும் அவருடைய உற்சாகம் மாறாத திருமண நடவடிக்கைகளையும், ஓய்வு இல்லாத பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் பார்த்தபோது ஆச்சரியம்தான் விளைகிறது. மரணத்தை இவ்வளவு இலகுவாக வரவேற்கிறாரே.. எளிதாகக் கையாளுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நோய் முற்றி படுத்த படுக்கையான பின்பு தான் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை என்று சொல்லி தனது இல்லத்திற்கு வந்து ஒரு அறையில் ஜன்னலோரமாக வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்திருக்கிறார். இனிமேல் தன்னை தனது குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது அத்தனை பேரும் நினைப்பதுதான். தான் நன்றாக இருக்கும்போது பார்த்து ரசித்தவர்கள், தான் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டுவிடக்கூடாது.. அந்தக் கோலம் அவர்கள் மனதில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதனைத்தான் இவரும் செய்திருக்கிறார். இதனால் ஜேட் கூடியைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்ற ஷில்பா ஷெட்டியால்கூட அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. லண்டன் மீடியாக்கள் தினந்தோறும் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்துள்ளன. வீட்டு வாசலில் எந்நேரமும் மீடியாக்கள் நிறுத்தப்பட்டு அவரது மரணச் செய்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அதிகமான கோபம் வந்தாலும் இது போன்றவற்றை பிரபலப்படுத்தியே ஆக வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அவர் சும்மா வெறுமனே வயோதிகத்தால் இறக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக அவரைத் தாக்கிய நோய் அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அந்த நோய் பற்றிய அறிவு இந்நேரம் அதைப் பற்றியே கவலைப்படாதவர்களைக்கூடச் சென்றடைந்திருக்கும்.. தனது குழந்தைகளைக்கூட தனது சாவைப் பார்த்துவிடக்கூடாது என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடச் சொல்லியிருக்கிறார். சாவரசனுடன் ஒரு நீண்ட போராட்டம் நடத்தி ஓய்ந்து போன ஜேட்கூடி, நேற்று நள்ளிரவு 3 மணி 14-வது நிமிடத்தில் தூக்கத்திலேயே இறந்து போயிருக்கிறார். இந்த நாளில் வேறொரு விசேஷமும் உண்டு. 'அம்மாக்கள் நாள்' என்று வரலாற்றில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்குலங்களை நினைத்துப் பார்க்கும் ஒரு நாள்.. இன்றைக்கே இந்தத் தாயின் உயிர் போயிருக்கிறது.. பொருத்தமாகத்தான் உள்ளது.. இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை.. எந்தவொரு நோயும் நாடு, இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை.. வந்த பின்பு அது கொடுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களை பாவப்பட்ட மனிதர்கள் என்கிற ஒரேயொரு அமைப்பில்தான் சேர்க்க முடியுமே தவிர.. அவர்களுக்கு வேறு ஒரு அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியாது.. வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..? நான் என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நோயைப் பற்றிச் சொல்லி உடல் பரிசோதனை செய்யச் சொன்னேன்.. சிலர் செய்திருக்கிறார்கள். பலர் படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள். “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.. இது போன்ற விழிப்புணர்வுகள் நமக்கு மிக மிகத் தேவைகள்.. எவ்வளவுதான் புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், அனுபவ அறிவைவிட மிகப் பெரிய அறிவு வேறில்லை. அனுபவப்பட்டவர்கள் சொல்லும்போதுதான் அந்த பிரச்சினையின் விஸ்வரூபம் மற்றவர்களுக்குப் புரிகிறது.. ஏற்றுக் கொள்கிறார்கள். தீர்க்க முயல்கிறார்கள். முதலில் அனுராதா அம்மா, இப்போது ஜேட்கூடி என்று சிலருக்கு வரக்கூடிய நோய்களைக்கூட தடுக்கும் தெய்வங்களாக மாறியிருக்கிறார்கள்.. நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நான் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் அவர் பக்கத்திலேயே அமர்ந்து தாதி போல் வேலை செய்து அவருடைய துன்பங்களை பார்த்து, பார்த்து மனம் இறுகிப் போய்விட்டது. "முருகா சீக்கிரமா கூப்பிட்டுக்கக் கூடாதா..?" என்று நானும், எனது தாயும், முருகனை வேண்டாத நாளில்லை. அப்படியும் நேரம் வரவில்லை என்று சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நாய் படாதபாடு படுத்திய பின்புதான் எனது தாயை அழைத்துக் கொண்டான். அந்த அனுபவத்தின் வாயிலாகத்தான் ஜேட்கூடியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நோய் வந்ததை மறைத்து வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் தயார்படுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கும் லட்சணக்கணக்கான மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்திருக்கிறார் அந்த புண்ணியவதி.. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

21 மார்ச் 2009

Part 1: PS3-யும் உங்கள் PC-யும்!

PS3-ஐ பத்தின போன பதிவுகளில், அது ஒரு அருமையான மீடியா ப்ளேயர்ன்னு பார்த்தோமில்லையா? அதை எப்படி மீடியா ப்ளேயரா உபயோகிக்கறதுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லுறேன். 1. PS3-யின் ஹார்ட் ட்ரைவ்: உங்கள் படங்கள், பாடல்கள், புகைப்படங்களை PS3-யின் உள்ளிணைந்த ஹார்ட் ட்ரைவில் காப்பி செய்வது. இந்த முறையில்.. உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போறது இல்லை. காப்பி செய்வதற்கு, நீங்க ஒரு மெமரி ஸ்டிக்கையோ, மெமரி கார்டையோ, USB எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்களையோ... யூஸ் பண்ணி.. காப்பி பண்ணிடலாம். அதுக்கப்புறம்... எந்த தொந்தரவும் இல்லாம பார்க்கவோ, கேட்கவோ முடியும். 2. எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்: ஒரு 500GB/1TB எக்ஸ்டெர்னல ஹார்ட் ட்ரைவ் வாங்கிடுங்க. தொந்தரவே இல்லை. உங்க அத்தனை மீடியா ஃபைல்களையும் அதுல போட்டுக்கங்க. அதை.. PS3-யின் USB ஸ்லாட்டில் கனெக்ட் பண்ணிட்டீங்கன்னா.. போதும். முதல் முறையில் இருக்கற... காப்பி-பேஸ்ட் தொந்தரவு இல்லை. இரண்டாவது.. ஒருவேளை உங்களுக்கு, PS3-யின் ஹார்ட் ட்ரைவை, ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால்... எந்த ஃபைலையும் இழக்க தேவையில்லை பாருங்க. ஆனா.. இந்த இரண்டு முறைகளிலும்.. ஒரு பெரிய தொந்தரவு இருக்கு. அதுக்கு பேரு FAT 32. நீங்க ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவை PS3-யோடு கனெக்ட் பண்ணனும்னா அந்த ட்ரைவ், FAT32-க்கு ஃபார்மேட் செய்யப்பட்டிருக்கனும். இது USB மெமரி கார்டுகளுக்கும் பொருந்தும். இந்த FAT 32 பத்தி அதிகமா சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி WINDOWS ME இருக்கற வரைக்கும், இந்த முறையில்தான் நம்ம ஹார்ட் ட்ரைவ், ஃபார்மேட் ஆகியிருக்கும். Win NT/2000, XP வந்த பின்னாடிதான் NTFS-ங்கற ஃபார்மேட்டுக்கு மாறினோம். FAT32-ல என்ன தொந்தரவுன்னா... அதுல 4GB-க்கு மேல ஒரு ஃபைலின் சைசை இருக்க விடாது. அதாவது உங்க கிட்ட.. சிவாஜி படத்தின் 720p ப்ளூரே காப்பி MKV ஃபைலின் சைஸ் ஒரு 7gb (ஒரே ஃபைல்)ன்னு வச்சிப்போம். அப்ப உங்களால.. இந்த ஃபைலை... PS3-யின் ஹார்ட் ட்ரைவிலோ (PS-Operating System) அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிலோ காப்பி பண்ண முடியாது. அப்ப என்னதான் செய்யறது? 3. PC-ஐ PS3-யுடம் இணைப்பது ஆமாங்க.. இதுதான் இப்போதைக்கு பெட்டர் வழி! இவை ரெண்டையும் இணைப்பது ஒன்னும் பெரிய கம்பச்சித்திரம் இல்ல. ஜஸ்ட் லைக் தட்... பண்ணிடலாம். எப்பொழுதும் போல இரண்டு வழிகள் உண்டு. Wired and Wireless. a. Wired: உங்க கிட்ட.. ஏதாவது ஒரு ரவுட்டர் (Router) ஒன்னு இருந்தா போதும். அப்புறம்.. தேவையான நீளத்துக்கு ஒரு நெட்வொர்க் கேபிள். ரெண்டு முனைகளையும் கனெக்ட் பண்ணிட்டா மேட்டர் சால்வ்ட். b. Wireless: இதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு வயர்லெஸ் ரவுட்டர் (Wireless Router) ஒன்னு இருந்தா போதும். எதுவும் பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கொடுக்காம இருந்தீங்கன்னா... PS3 அதுபாட்டுக்கு கனெக்ட் ஆய்டும். கொடுத்து இருந்தாலும் பிரச்சனையில்லை. PS3-யில் அதை கான்ஃபிகர் பண்ணிக்க முடியும். என்ன.... உங்க கிட்ட ஒரு வயர்லெஸ் கீபோர்டும், மவுஸும் இருந்தால்.. பாஸ்வேர்டை அடிக்கறது ஈஸி. இல்லைன்னா... PS3-யின் கன்ட்ரோலரை வச்சி.. ஒவ்வொன்னா தட்டனும். பாஸ்வேர்ட் சைசுக்கு ஏத்த மாதிரி உங்களுக்கு.. தாவு தீரும். ஆனா எந்த பிரச்சனையும் இல்லாம... ஸ்மூத்தா.. கனெக்ட் ஆய்டும்...!! பயப்படாதீங்க. ஓகே... கனெக்ட் பண்ணியாச்சி.! இப்ப.. எப்படி இதை ஒரு மீடியா ப்ளேயரா.. யூஸ் பண்ணுறது? - ஓட்டு போட்டீங்கன்னா.... நாளைக்கு சொல்லுறேன். :-)

ஒபாமாவின் பிரச்சனைக்கும் அசின் பிரச்சனைக்கும் ஒரே தீர்வுதான்

உலகம் ஆரம்பித்த நாட்களில் எல்லாம் பிரச்சனை சந்தித்த மனிதர்கள் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். அவர்களும் பிரச்சனையை எப்படி சமாளித்திருக்கிறார்கள்? எப்படி அதை வென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள்தான் சரித்திர் நாயகர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்பது புலப் படும். உலக மக்களின் பிரச்சனைகள் தீரவும், உலக சமாதானம் உருவாகவும் நம்மாளான் ஒரு பங்களிப்பாக இந்த ஆராய்ச்சியைத் தொடருகிறோம். கிரிக்கெட் விளையாட்டு. கிரிக்கெட் விளையாட்டினை எடுத்துக் கொண்டால் முதலில் காசு சுண்டுகிறார்கள். காசு சுண்டுதலில் வெற்றி பெறுதல் என்பது அதிஷ்டம் தொடர்புடைய விஷயமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து நாம் பேட்டிங் , பவுலிங் தேர்ந்தெடுப்பது என்பது நமது திறமை தொடர்புடைய நிகழ்வாக அமையும். வாழ்க்கை என்பது அப்படித்தான். அதிர்ஷ்டம் வந்தாலும் அதை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும் அவர்களால்தான் வாழ்க்கையை வெற்றி பெற முடியும். பேட்டிங் தேர்ந்தெடுத்து உள்ளே செல்வது என்பது தலைமை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, த்லைமை சொல்வதை நாம் கண்டிப்பாக நாம் கேட்டாக வேண்டும். பேட்டிங் செய்ய தொடங்கினாலும், நம்மை அவுட் ஆக்க நம்மைச் சுற்றி வியூகம் அமைத்து செயல் படுவார்கள். அதுதான் வாழ்க்கை. சில நேரங்களில் நம்மை அவுட் ஆக்க நடுவர்கள் கூட முயற்சி செய்வார்கள். என்னதான் சிறந்த ஆட்டக் காரராக இருந்தாலும், ஒரு பந்தில் நாம் ஏமாந்தாலும் நம்மை ஆட்ட்மிழக்கச் செய்து உள்ளே அனுப்பிவிடுவார்கள். தலைமை நமக்கு கொடுக்கும் பணியினை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உள்ளே நாம் ஆட இறங்கும் போது சற்று நிதானமாக ஆடுமாறு நமக்கு ஆலோசனை கூறப்படலம். அதன் பொருள் ரன் எடுக்காதே என்பதல்ல.. ஆட்ட்ம் இழக்காதே .. என்பது தான் பொருளாக அமையும். என்பதை உணர்ந்து கொண்டு ஆட வேண்டும், விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு ஓட்டங்களைக் குவித்தால் மகிழ்ச்சியே அடைவார்கள். மட்டை பிடிக்கும் போது பந்தை எவ்வாறு அடிப்பது என்பதை பந்து வீச்சாலரின் கையிலிருந்து வெளியேறி தரையில் பட்டு திரும்பிய பின்னரே முடிவு செய்ய வேண்டும். அது சரியான பயிற்சி இல்லையென்றால் மட்டை ஓங்கும் முன்ன்ரே குச்சி காணாமல் போய்விடும். முதலிலேயே எவ்வாறு அடிப்பது என்பதை முடிவு செய்தால் சுலபமாக அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான். எந்த பிரச்சனையும் வரும்போது சரியான முறையில் சமாளிக்கும் திறமை வேண்டும். அதற்கான பயிற்சி அவசியமாக அமையும். தேவையில்லாமல் முதல் பந்தில் இரண்டாம் பந்தைப் பற்றி கவலை படவேண்டிய அவசியமில்லை.இந்த பிரச்சனையைப் பார்க்கும்போது அடுத்த பிரச்சனை பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. நாம் பந்துவீசுதல் என்று வரும்போது வேகமாக வீசுதல் என்பது சில நேரங்கள் மட்டுமே உபயோகப் படும் அதுவும் துவக்க காலத்தில் மாட்டுமே உபயோகப் படும். பழகிவிட்டால் எந்த வேகத்தையும் சுலமாக சமாளித்துவிடுவார்கள். எனவே எதிராளியை ஆட்டமிழக்கச் செய்ய பலவகைகளில் முயற்சி செய்ய வேண்டும். சில ஆட்டக்காரர்கள் தானாக ஆட்டமிழ்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களுக்கான வசதிகளை மாட்டும் செய்து கொடுக்க வேண்டும், அதாவது அவருக்கு விருப்பமான இடத்தில் ஒரு ஃபீல்டரை நிறுத்திவிட்டால் தானே கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்து விடுவார். சில நேரங்களில் பல வகையான பந்துகளையும், வியூகங்களையும் உபயோகப் படுத்த வேண்டும். இந்த மாதிரி வியூகங்கள் அமைப்பதற்கு ந்ல்ல தலைமையும் அவசியம். நாம் விக்கெட் எடுப்பதற்கு நல்ல தலைமையும் அவசியம். தலமைக்கு கீழ்படிதல் என்பது மிக அவசியம். த்லமை டீப் விக்கெட்டில் நிற்கச் சொல்லும்போது நாம் மிட் ஆனில் நின்றால் கண்டிப்பாக அணிக்குத்தோல்விதான். நாம் எவ்வள்வு ஸ்கோர் எடுத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எதிராளியைவிட அதிகமாய் எடுத்திருக்கிறோமா, நம்மைவிட குறைந்த ஸ்கோரில் எதிரியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோமா? என்பதில்தான் நமது வெற்றியே அடங்கியிருக்கிறது. இந்த மாதிரியே கிரிக்கெட் பார்த்து விளையாடி பழகிக் கொண்டால் ஒபாமா, அசின் மட்டுமல்ல , நாமும்கூட எல்லா பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

20 மார்ச் 2009

போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அசின். இவர் அடுத்து நடித்த எம்.குமரன் படம் மூலம் ஸ்டார் அஸ்தஸ்து பெற்றார். சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி செம ஹிட். இதையடுத்து இந்திக்கு போனார். அங்கே அமீர்கானுடன் இந்தி கஜினியில் நடித்தார். தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவிட்டார். தான் நடிக்கும் படங்களால் ஏற்படும் பிரச்சனையை விட தன்னிடம் வேலை செய்பவர்களால் அசினுக்கு ஏற்படும் பிரச்சனைதான் பெரிதாக இருக்கிறது. இதற்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் அசினின் உதவியாளராக இருந்து சென்னை போலீஸில் அசின் கொடுமை படுத்துவதாக புகார் சொன்னார். இப்போது அசினின் உதவியாளர்(ஆண்) காணாமால் போய்விட்டார். அசின் தான் அவரை கடத்திவைத்திருப்பதாக காணாமல் போனவரின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் முத்துகருப்பன். இவரது மனைவி சுடலைவடிவு. இவர்களது மகன் நல்ல முத்துக்குமார். கடந்த 7 வருடத்துக்கு முன்பு சென்னைக்கு வந்த முத்துக்குமார் நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்தார். 4 வருடத்துக்கு முன்பு நடிகை அசினிடம் முத்துக்குமார் வேலைக்கு சேர்ந்தார். அசின் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றபோது முத்துக்குமாரையும் அழைத்து சென்றார். ஒரு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டதால் முத்துக்குமார் சென்னை வந்து சிகிச்சை பெற்றார். 11/2 மாதம் கழித்து உடல் நலம் தேறிய பிறகு மும்பை சென்று மீண்டும் அசினிடம் வே
லைக்கு
சேர்ந்தார்.
கடந்த 1 மாதமாக முத்துக்குமார் தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு பேச வில்லை. இதுபற்றி சுடலை வடிவு அசினின் தந்தை ஜோசப்புக்கு போன் செய்து விசாரித்த போது, முத்துக்குமார் ஜனவரி 21-ந்தேதிக்கு பிறகு வேலையை விட்டு நின்று விட்டதாகவும், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என்றும் கூறினார். தன் மகன் மாயமானது பற்றி சுடலைவடிவு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப் பிரமணியம் விசாரித்தார். அப்போது சுடலைவடிவு போலீசாரிடம் தனது மகன் காணாமல் போனது பற்றி அசினும், அவரது தந்தையும் முன்னுக்குபின் முரண்பாடாக சொல்கிறார்கள். அவர்கள் எனது மகனை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சந்தேகப்படுகிறேன் என்று கூறினார். இது தொடர்பாக அசினின் தந்தை ஜோசப்பிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது, ஜனவரி 21-ந்தேதி முத்துக்குமார் வேலையை விட்டு நிற்பதாக கூறி சம்பளத்தை கணக்கு முடித்து வாங்கி சென்று விட்டார். அவர் வீட்டுக்கு செல்லவில்லை என்பதால் பிப்ரவரி 9-ந்தேதி போலீசில் புகார் செய்து விட்டோம் என்றார். இந்த நிலையில் உதவியாளர் மாயமானது தொடர்பாக நடிகை அசினிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், எனது உதவியாளர் நல்ல முத்துக்குமார் வேலையை விட்டு சென்ற உடனேயே நாங்கள் போலீசுக்கு சொல்லி விட்டோம். எனவே அந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விட்டார்.

19 மார்ச் 2009

இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)

இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.

AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.

Digsby- அரட்டை அரங்கங்களின் சங்கமம்

Digsby- அரட்டை அரங்கங்களின் சங்கமம்

இவையனைத்திற்கும் பதிலாக ஒரு மாற்று மென்பொருள் பயன்பாடுதான் Digsby. இந்த ஒரே பயன்பாட்டை மட்டும் நிறுவிவிட்டு அனைத்து அரட்டை அடிக்கும் தளங்களின் பயனர்கணக்கையும், கடவுச்சொல்லையும் (User Name, Password)கொடுத்துவிட்டால் - இதை மட்டும் பயன்படுத்தி அனைவருடனும் சாட்டிங் செய்து மகிழலாம்.

சிறப்பம்சங்கள் :

1) எந்த பயனர் கணக்கிற்கு புதிய மின்னஞ்சல் வந்தாலும் அதை நினைவூட்டிவிடும். (E-Mail Alert)

2) நண்பர்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்ப உதவுகிறது. (SMS - Short Message Service)

3) Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, மற்றும் POP மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்க இயலும்.

4) நண்பர்களுக்குள் கோப்புப்பகிர்வு செய்வதும் இதன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. (File sharing)

தள முகவரி : http://www.digsby.com/

Tags: , , ,

by - tamilnenjam

இமெயில் அவதாரங்கள்

3dஇமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான இமெயில் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. இது புதுமையான இமெயில் சேவையே தவிர புதிய இமெயில் சேவை அல்ல. உண்மையில் இமெயில்களை முற்றிலும் புதுமையான முறையில் பெற உதவும் சேவை. புதுமையானது மட்டும் அல்ல மிகவும் சுவையான சுவாரசியமான சேவை! இமெயில்களை இனிமை யான அனுபவமாக மாற்ற உதவும் சேவை.

திரைப்பட உலகில் “3டி’ எனப்படும் முப்பரிமாண உத்தி அறிமுகமான போது ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது அல்லவா? அதேபோலத்தான் இப்போது இமெயில் உலகில் “3டி’ உத்தி நுழைந்திருக்கிறது. ‘3dmailbox’ என்னும் அந்த சேவை உங்கள் இமெயில் முகவரி பெட்டியை முப்பரிமாண தன்மை கொண்டதாக மாற்றித் தருகிறது. இதனால் உங்களை தேடி வரும் இமெயில்களும் முப்பரிமாணத் தன்மை கொண்டதாகவே இருக்கும். அந்த முப்பரிமான உலகம் எப்படிப் பட்டது தெரியுமா? எழில் கொஞ்சும் கடற்கரையாக உங்கள் முகவரி பெட்டியை மாற்றி விடக் கூடியது. முகவரி பெட்டி அலைகள் ஆர்ப்பரிக் கும் கடற்கரையானால் அதில் உலாவும் மனிதர்களின் வடிவத்தில் இமெயில்கள் வந்து சேரும். ஆம், புதிய இமெயில் வந்து சேரும்போது, கடற்கரையில் உள்ள ஓட்டல் ஒன்று க்கு நீச்சலுடை அணிந்த அவதாரமாக இமெயில் தோற்றம் தரும்.

வர்ச்சுவல் வேர்ல்டு என்று சொல்லப்படும் இன்டெர்நெட்டில் உயிர் பெறும் பல்வேறு வகையான மாய உலகங்களைப் போலவும் அதில் படைக்கப்பட்ட மனித தோற்றங்க ளைப் போலவும் (இவற்றைதான் இன்டெர்நெட் உலகில் அவதாரம் என்று குறிப்பிடுகின்றனர்). இது இமெயிலுக்காக என்று உருவாக்கப்பட்ட மாய உலகம். இங்கே மெயில்கள் மாய மனிதர்களாக தோற்றம் அளிக்கும். கடிதங்களை நிலப்பறவைகள் என்று உரைநடையில் வர்ணிப்பது போல, இங்கு இமெயில்கள் மாய மனிதர்கள் வடிவம் பெறுகின்றன. இமெயில் களை பெற முற்றிலும் சுவையான வழிதான். இமெயில் என்றால் வீண் மெயில்களாக ஸ்பேம் தொல்லை இல்லாமல் இருக்குமா? இந்த மாய உலகில் வீண் மெயில்களை அடை யாளம் காட்டவும் வழி இருக்கிறது.

நம்பகமான மெயில்களை மட்டுமே காவலாளி அனுமதிப்பார். சந்தேகத்திற்கு இடமான மெயில்கள் வாயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு விடும். அந்த மெயில்கள் சுமோ பயில்வான் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும் என்பது விசேஷம். சுவாரசியம் இத்தோடு முடிந்து விடவில்லை. சந்தேகம் அளிக்கும் இமெயில்களை தேவை இல்லாதது எனத் தீர்மானித்து அவற்றை டெலிட் செய்ய முன் வந்தால் சுறா மீன் போல் தோற்றம் உண்டாகி அந்த இமெயில் மறைந்து போகும். இதனிடையே பிடிக்கப்படாத இமெயில்கள் ஓட்டல் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும். இமெயில்களை படித்தீர்கள் என்றால், அவற்றுக்கான அவதாரம் ஜாலியாக சூரியக் குளியல் எடுக்கத் துவங்கி விடும். மெயில்கள் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அவை சுற்று வட்டாரத்திலேயே உலாவிக் கொண் டிருக்கும். அவற்றை அனுமதித்து வரவேற்பதா (அ) வெளியேற்றுவதா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். சொல்லப்போனால் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் நீங்கள் விடுமுறையை கழிப்பது போன்ற உணர்வை இந்த “3டி’ முகவரி பெட்டிஅளிக்கும். 3டி மெயில் பாக்சை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ் இந்த சேவை இமெயில்களை இனிமையானதாக ஆக்கும் என்கிறார்.

வீடியோ கேமின் தன்மையை இமெயில்களுக்கு ஏற்பத்தி தரும் முயற்சி இது என்கிறார்அவர். உங்களுக்கு வீடியோ கேம் பிடிக்கும் என்றால் இமெயில் மீது மிகுந்த மோகம் இருக்கிறது என்றால் இந்த சேவை நீச்சயம் உங்கள் மனதை கவர்ந்து விடும் என்கிறார் அவர். இமெயில்களை மனிதர்கள் வடிவில் மாற்றித் தரும் அனுபவம் வீடியோ கேமில் மூழ்கி இருப்பதற்கு நிதானமாக இருக்கும் என்றும் அவர் சொல்கிறார்.

முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற மியாமி கடற்கரையை போல இந்த இமெயில் மாய உலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல்வேறு வகையான பின்னணியில் மாய உலகங்களை படைத்து இமெயில் களை வித்தியாசமான முறையில் தோற்றம் தர வைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இமெயில்கள் எல்லாம் போயிங் விமானமாக வந்து நிற்கும். நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இமெயில்களில் இருந்து முற்றிலும் வேறானது. வித்தியாசத்தை வரவேற்பவர்கள் இந்த இமெயில் முறையை ஆதரிக்கலாம். அப்படி பரவலான வரவேற்பு இந்த சேவைக்கு கிடைக்கும் என்றால் மேலும் பல விமான உலகங்கள் இமெயில் களுக்காக உருவாக்கப் படலாம். எல்லாம் சரி இமெயில் சேவை இலவசமானது ஆயிற்றே! இந்த சேவை எப்படி? இந்த சேவையை சோதித்து பார்ப்பது இலவசமானது. சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறது. என்றால் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த சேவையை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ், ஏற்கனவே இன்டெர்நெட் உலகில் பல டாட்காம் நிறுவனங்களை துவக்கி நடத்தினார். 1994ம் ஆண்டு வாக்கிலேயே மார்க்கெட் வாட்ச் என்னும் டாட் காம் நிறுவனத்தை துவக்கிய அவர் ஐஜம்ப், டிரேடிங் புளோர் என மேலும் டாட்காம்களை நடத்தி இருக்கிறார். இப்போது இமெயில்களை புதிய அவதாரம் எடுக்க வைத்து இருக்கிறார்.

18 மார்ச் 2009

உலகை மாற்றிய டாப் 10 சங்கதிகள்

technology.jpg

கிரெடிட் கார்டுகள், பயிற்சிக்கான ஷூஸ், சமூகத்தை ஒன்றிணைக்கும் இணைதளங்கள், ஜி.பி.எஸ். டெக்னாலஜி உள்ளிட்ட 10 சங்கதிகளை உலகை மாற்றிய சங்கதிகளாக வரிசைப்படுத்தி உள்ளனர் அறிவியலாளர்கள். பிரிட்டனின் தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் வாரத்தை ஒட்டி, 20 அறிவியலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, உலகை மாற்றிய டாப் 10 சங்கதிகள் குறித்து அலசப்பட்டது.

அவர்கள் வரிசைப்படுத்திய டாப் 10 சங்கதிகள் இதோ:

ஜி.பி.எஸ். டெக்னாலஜி: அமெரிக்க ராணுவம் தங்கள் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்த டெக்னாலஜி இது. ஆனால், உலகின் முகத்தை நம் முன்னாடி காட்டிவிடும் இந்த தொழில்நுட்பம் கார்கள், விமானங்கள், படகுகள் என சிறந்த வழிகாட்டியாக மாறிவிட்டது.

சோனி வாக்மேன்: இன்றைக்கு காதுக்குள்ளேயே பாட்டு கேட்டுக்கற பல சங்கதிகள் வந்துவிட்டாலும், அதற்கு முன்னோடி சோனி நிறுவனம் தான். அது 1979 இல் கண்டுபிடித்து விற்பனைக்குவிட்ட சோனி வாக்மேன்தான் 2வது முக்கிய சங்கதிபார்கோட்: எந்த பொருளானாலும் தற்போது பார்கோடு இல்லாமல் வருவதில்லை. பார்கோடில் உள்ள கருப்பு வெள்ளைக் கோடுகள்தான் ஒரு பொருளின் விலையை உலக அளவில் துல்லியமாகக் குறிப்பிட உதவுகின்றன. நார்மன் வுட்லேண்ட் என்பவர் 1949இல் கண்டறிந்தது இது

ரெடிமேட் உணவுகள்: அவசரகதியில் இயங்கும் உலகை அதே சீரான இயக்கத்தில் வைக்க உதவும் சங்கதி. 1970க்குப் பிறகு சுறுசுறுவென எகிற ஆரம்பித்த ரெடிமேட் உணவு ஜூரம் இப்போது உலகம் முழுக்க காய்ச்சி எடுக்கிறது என்றால் மிகையில்லை.

ப்ளே ஸ்டேஷன்: அடுத்தது சோனி 1994 இல் கண்டுபிடித்த ப்ளே ஸ்டேஷன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தனி ப்ளே ஸ்டேஷன் முதல் குழந்தைகளின் படுக்கை அறை வரை வியாபித்திருக்கும் சங்கதி இது. குழந்தைகள் உலகத்தில் இதற்கு முக்கிய இடமுண்டு.

சோசியல் நெட்வொர்க்கிங்: சமூகத்தை ஒன்றிணைக்கும் இணையதளங்கள் என்று சொல்லலாம். ஃபேஸ்புக் என்ற இணை தளம் மூலம் மட்டுமே 3 கோடி மனித நிமிடங்கள் தினசரி செலவழிக்கப்படுகிறதாம். மேலும், மனிதர்களை இணைக்க உதவும் மைஃபேஸ் மற்றும் டிவிட்டர் இணையதளங்களும் இவ்விஷயத்தில் முக்கிய பங்கை ஆற்றிவருகின்றன. இந்த இணையதளங்களால் உரையாடல் கலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது. இவற்றின் மூலம் உலகம் முழுக்க உள்ள எண்ணற்ற நண்பர்கள் மற்றும் புதியவர்களுடன் நம்முடைய தொழில் ரீதியான, தனிப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது..

மெசேஜ்ஜிங்: செல்போனில் மெசேஜ் அனுப்பும் முறை மொழியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மொழியை பயன்படுத்தும் முறை, சுருக்கமாகக் குறிப்பிடுதல், இலக்கணம் என நிறைய மாற்றங்களை இந்த மெசேஜ் அனுப்பும் முறை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆங்கில மொழியில் நிறைய மாற்றங்களை இது ஏற்படுத்தியுள்ளதாம்.

எலக்ட்ரானிக் மணி(கிரெடிட் கார்டுகள்): இவை இல்லாவிட்டால் நிறைய பேருக்கு வாழ்க்கை நகராது. கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ள வசதியானவை மட்டுமல்ல பாதுகாப்பானவையும்கூட. இது இருந்தால் போது உலகை வெறும் கையால் முழம் போட்டுவிடலாம் அல்லது வலம் வந்துவிடலாம். எதை வேண்டுமானாலும் எங்கிருந்தபடியும் வாங்கமுடியும் அப்பா, அம்மா உறவுகளைத் தவிர.

மைக்ரோ வேவ்ஸ்: இது மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு பேச்சு மூச்சு இருக்காது. ஆமாங்க, நாம் பயன்படுத்தும் செல்போன்கள், இணையதள இணைப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, அவற்றை இயக்குவது எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் எனப்படும் நுண்ணிய அலைகளே. மேற்கூறிய சாதனங்கள் இயங்க, சிக்னல்பெற இந்த நுண்ணிய அலைகள் (அலை நீளம்) ஒரு மில்லி மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றி சுழன்றுக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியாது.

டிரெய்னர்ஸ்: டிரெய்னர்ஸ் எனப்படும் பயிற்சி மற்றும் சாதாரண பயன்பாட்டுக்கு உதவும் ஷூக்கள். குட்இயர் மெட்டாலிக் ஷூ கம்பெனி ரப்பரை துணிகளில் உருக்கி ஊற்றி, 1892 இல் கண்டறிந்தது தான் இந்த வித ஷூக்கள். இவை இல்லாவிட்டால் இன்றைக்கு யாராவது ஓடுவார்களா ஆடுவார்களா என்பது சந்தேகம்தான்.

Most Commented Posts

17 மார்ச் 2009

உலகின் பணக்கார நடிகைகள்!

நிறைய ஆங்கிலப்படங்கள் படங்கள் பார்க்கிறோம்! அதில் நடிக்கும் நடிகைகளைப்பற்றி நிறைய நமக்குத்தெரியாது!

அவர்களில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட சில நடிகைகள் பற்றிப் பார்ப்போம்!

1.ட்ருவ் பார்ரிமோர் அமெரிக்க நடிகையும், drew_barrymore18.jpg drew barrymore picture by milkshake_f27படத்தயாரிப்பாளரும் ஆவார்.11 வது மாதத்தில் குழந்தையாக நடிக்க(?) ஆரம்பித்தார். ஈ.டி. படத்தின் மூலம் குழந்தை நடிகையாகப் புகழ் பெற்றார்! இளம் வயதிலேயே மதுவுக்கும், இதர போதைப்பொருட்களுக்கும் அடிமை ஆனார். அதன் பின் கவர்ச்சி நடிகை ஆனார்.இவருடைய ”பாய்ஸன் ஐவி”படம் பார்த்து இருக்கீங்களா? இந்த கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்???

2.ஜெனிஃபர் அனிஸ்டன்

ஜெனிஃபர் அனிஸ்டன் 1969 ல் பிறந்தார். 1990 களில் வந்த ”ஃப்ரண்ட்ஸ்” சீரியலில் நடித்து எம்மி விருது,நம்ம ரஹ்மான் வாங்கிய கோல்டன் குளோப் விருது போன்றவற்றை அள்ளினார்..புரூஸ் அல்மைட்டி போன்ற நிறைய காமெடி படங்கள் நடித்து உள்ளார்.

3.ஜெனிஃபர் லோபெஸ்.1969 ல் பிறந்தார்.ஜெ.லோ என்று அழைக்கப்படும் இவர் 7 பாடல் தொகுப்புகள் வெளியிட்டு உள்ளார். சிறந்த பாடகி விருதுகள் நிறைய வாங்கியுள்ளார்.

ஜெனிஃபர் லோபெஸ் எல்லோருக்கும் தெரிந்த முகம்.ஆனால் அவருடைய திறமைகளைப்பாருங்கள்:நடிகை,பாடகி,ஃபாஷன் டிசைனர்,டி.வி.தயாரிப்பாளர்,டான்ஸர்!! அப்பாடி.ஒரு கவர்ச்சிப்புயலுக்குள் இவ்வளவு திறமைகளா?

4.நிகொல் கிட்மேன் 1967 ம் ஆண்டு பிறந்தார்.ஹவாயில் பிறந்த ஆஸ்திரேலிய நடிகை இவர்.இவரும் பாடகி,மாடல்,நடிகை என்று தூள் கிளப்புபவர். ”ஐ.நாவின் சிறந்த மனிதர்”என்ற விருது ”பெற்றவர். ஆஸ்திரேலியாவின் ”உயர்குடிமகன் விருது பெற்றவர். டு டை ஃபார்,தி ஹவர்ஸ் போன்றபடங்கள் குறிப்பிடத் தகுந்தவை.

5.ஜூலியா ராபர்ட்ஸ்!!

ப்ரெட்டி உமன் படத்தின் மூலம் உலக ஆண்,பெண் அனைவரையும் கவந்தவர்! 1967 ல் பிறந்தவர்.ப்ரெட்டி உமன் படம் 1990களில் $463 மில்லியன் சம்பாரித்தது.எரின் ப்ரொக்கோவிச் படத்துக்காக சிறந்த நடிகை விருது ஆஸ்கார் பெற்றவர்.நாட்டிங் ஹில்,ரன் அவே ப்ரைட் ஆகிய காதல் காமடிகள் பிரபலமானவை..2002லிருந்து 2005 வரை உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக இருந்தார்..படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார்..

ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

மேலேகண்ட நடிகைகளிடம் மனிதாபிமானமும் திறமையும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை அவர்களைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிகிறது.

வீடியோபேட் - இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

VidoPad - A Freeware Application for Video Editing Purpose

டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.

ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

VideoPad - Video Editing

VideoPad - Video எடிட்டிங்

avi, .wmv, .3gp, .wmv, .divx மற்றும் இன்னும் பல விதமான வடிவங்களில் இருக்கும் கோப்புகளையும் இதனால் கையாள இயலும்.

சிறப்பு விளைவுகள் (special effects), தலைப்பிடுதல் (Video titling), ஏற்கனவே இருக்கும் ஒலிப்பகுதிக்குப் பதிலாக வேறொன்றைச் செருகுதுல் போன்றவற்றை இதன் மூலம் எளிமையாகச் செய்திடலாம்.

இது முழுக்க முழுக்க இலவசமாக (Freeware) இருப்பினும் கைதேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதால் சிறப்பம்சங்கள் மிகுந்தது.

இணையிறக்கச் சுட்டி : http://www.nchsoftware.com/videopad/vpsetup.எஷெ

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?

வழக்கமாக My DocumentsC:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும். ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால்,
1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும்.
2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" -ஐ ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.)
3. இதில் Target எனும் இடத்தில் நீங்கள் புதியதாக உருவாக்கிய "My Documents"- Folder-ன் சரியான பாதையை டைப் செய்து Apply -ல் கிளிக் செய்யவும்.

16 மார்ச் 2009

ஏ.ஆர்.ரகுமான் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை ..!

அஜ்மீர்: பிரபல இசை அமைப்பாளர், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் நேற்று அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்தார். அங்குள்ள கவாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டி மகான் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி வேண்டுதலை நிறைவேற்றினார். ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ..!

தமிழ் சினிமாவில் 'கலைக் குடும்பம்' என்று செல்லமாக அழைக்கப்படும், நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று விமரிசையாக நடந்தது. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். வனிதாவுக்கும், பிரீதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 3-வது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் ராகுல் ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியின் மகன். ஹைதராபாத்தில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி-ராகுல் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமார்-மஞ்சுளா வீட்டில் நேற்று மாலை விமரிசையாக நடந்தது. இரவு 7.15 மணிக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓத நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. மணமகன் ராகுலுக்கு மணமகள் ஸ்ரீதேவியின் அண்ணன் நடிகர் அருண் விஜய் மாலை அணிவித்தார். அதன்பிறகு சம்பந்திகள் நிச்சய தாம்பூல தட்டுகளை மாற்றிக் கொண்டனர். புரோகிதர்கள் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்ததும் ஸ்ரீதேவியும், ராகுலும் மோதிரம் அணிவித்துக் கொண்டார்கள். திரண்டது திரையுலகம்: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா, நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுந்தர்.சி, சந்திரசேகர், தியாகு, சஞ்சீவ், முன்னா, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகைகள் மீனா, குஷ்பு, சங்கவி, சங்கீதா, லட்சுமி, ராஜஸ்ரீ, லதா, மகேஷ்வரி, டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி, இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழி, பேத்தி ஐஸ்வர்யா, பட அதிபர்கள் டி.சிவா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள். திருமணம்: ஸ்ரீதேவி- ராகுல் திருமணம் ஜுன் மாதம் 18-ந் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com