Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 செப்டம்பர் 2009

உபுண்டு 9.04 இன் கூகிள் குரோமில் Flash நிறுவுதல்

லினக்ஸ்க்கான கூகிள் குரோம் பதிப்பில் எந்த சொருகிகளும் செயற்படுவதில்லை. இன்னமும் உத்தியோக பூர்வ பதிப்பு வெளிவராத காரணத்தால் லினக்ஸ் ஊராக்கள் Flash செயலிகள், கோப்புகளை கூகிள் குரோமில் இயக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு மாற்ற வழி மூலம் கூகிள் குரோமில் Flash ஐ நிறுவலாம்.

terminal

படத்தில் காட்டியவாறு Terminal ஐ திறக்கவும்.

பின்னர் பின்வரும் கொமாண்டை டர்மினலில் இயக்கவும். இதன் மூலம் Flash plugin ஐ நிறுவிக்கொள்ளுங்கள்

sudo aptitude install flashplugin-installer

பின்னவரும் கொமாண்டை நிறுவி Flash Plugin நிறுவப் பட்டுள்ள இடத்தை அறியவும்

sudo updatedb sudo locate libflashplayer.so

உங்களுக்கு பின்வருமாறு ஒரு விடைகிடைக்கும்

mayooresan@Struti:~$ sudo locate libflashplayer.so /usr/lib/flashplugin-installer/libflashplayer.so mayooresan@struthi:~$

இதன் அர்த்தம் /usr/lib/flashplugin-installer/ எனும் இடத்தில் பிளாஷ் பிளேயர் உள்ளது என்பதேயாகும்

இப்போது பின்வரும் கொமாண்டை இயக்கி கூகிள் குரோமிற்காக ஒரு டிரக்ட்ரியை உருவாக்கவும்

sudo mkdir /opt/google/chrome/plugins

பிளாஷ் கோப்பை இந்த Directory இனுள் பிரதி செய்யவும்

sudo cp /usr/lib/flashplugin-installer/libflashplayer.so /opt/google/chrome/plugins

அடுத்த தடவை கூகிள் குரோம் இயங்கும் போது, பிளாக்கின்களை சரிபார்க்குமாறு கூறவேண்டும் அதற்கு பின்வரும்மாறு Applications மேல் வலது சொடுக்கு ஒன்று போடுங்கள். அதிலே Edit Menu என்பதை படத்தில் காட்டியவாறு தெரிவு செய்யுங்கள்.

Edit Menu

Menu Editor இல், to Internet > Google Chrome பின்பு Properties பொத்தானை அமுக்கவும்.

Launcher Properties windowஇல், Command field இல் உள்ளதை பின்வரும் உரையில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்….

Properties

/opt/google/chrome/google-chrome –enable-plugins %U

இப்ப Close பொத்தானை அம்முக்கி வெளியே வாருங்கள் ஒருதடவை Log off ஆகி Log on ஆகுங்கள். இப்போது Application -> Internet ->Google Chrome என்று கூகிள் குரோமை ஆரம்பியுங்கள். YouTube போன்ற ஒரு தளத்திற்கு சென்று வீடியோக்களை இயக்குங்கள்.

Google Chorme Plays YouTube in Ubuntu 9.04

மேலே பாருங்கள், உன்னைப் போல் ஒருவன் ட்ரேயிலர் என்னமா ஓடுது என்று ;)

Firefox, Opera போன்றவற்றில் சரியாக இயங்களாத Flash Contents இந்த முறைமூலம் Google Chrome இல் சரியாக இயங்குகின்றது. ஆனால் கூகிள் குரோம் தமிழ் எழுத்துக்களை சரியாக Render பண்ணுவதில்லை. தற்போதைக்கு Firefox உலாவி மட்டுமே அந்த வேலையைச் சரியாக செய்கின்றது. இந்த கூகிள் குரோம் புண்ணியத்தால் எனது விருப்பமான விளையாட்டுக்களான FarmVille, Barn Buddy என்பவற்றை தங்குதடையின்றி விளையாடுகின்றேன். யிப்பீஈஈஈஈஈ……….!

அடிப்பாரா ரம்லத்...?' எகிறும் நயன்தாரா!

என்னை அடிக்க ரம்லத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் என்னை அடிக்க முயன்றால் நான் யார் என்று காட்டவேண்டி வரும் என்று நடிகை [^] நயன்தாரா கூறியுள்ளார்.
Nayantara
நடிகர் - இயக்குநர் [^] பிரபுதேவா காதலித்து கைப்பிடித்தது ரம்லத்தை. ஆனால் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ரம்லத்தை விட்டுப் பிரிந்து நயன்தாராவுடன் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இருவரும் ரகசியத் திருமணம் [^] செய்து கொண்டதோடு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துவது வரை போய்விட்டார்களாம். இந்நிலையில் சமீபத்தில் தான் இயக்கிய முதல் இந்திப் படமான வான்டட் ப்ரிமியர் ஷோவுக்கு நயன்தாராவுடன் ஜோடியாகச் சென்ற பிரபுதேவா, பத்திரிகையாளர்களையும் ஜோடியாகவே சந்தித்து பேட்டி கொடுத்தார். இதன் எதிரொலியாக, பிரபு தேவா மனைவி [^] பிரபல பத்திரிகையாளர்களை தனித்தனியாக அழைத்து தனது குமுறலை பேட்டியாகத் தந்தார். அதில், அடுத்தவர் கணவர் மீது ஆசைப்பட்டு அபகரித்துக் கொள்ளும் நயன்தாரா போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், நயன்தாராவை எங்காவது இனி நேரில் பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறியிருந்தார் ரம்லத். இது பற்றி கேரளாவில் இருந்த நயன்தாராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் காதலா என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து நச்சரித்த போதும் பல முறை தெளிவான என் பதிலைக் கூறிவிட்டேன். என்னை அடிக்க அவர் யார்... என்ன உரிமையிருக்கிறது அவருக்கு? ரம்லத் என்னை நேரில் பார்க்கும்போது அதை நான் பார்த்துக்கொள்வேன். என்னை சபிக்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் தகுதியோ, உரிமையோ கிடையாது. எனது வாழ்க்கையை நான்தான் முடிவு செய்ய வேண்டும். என்னைப் பற்றி என் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். மற்றவர்களின் பேச்சுகளை பற்றி நான் கவலைப்படவில்லை..." என்றார் நயன்தாரா.

21 செப்டம்பர் 2009

ரோசாவின் சூடான யோகா!

இந்தித் திரையுலகில் புகுந்துள்ள இத்தாலி நடிகை [^] ரோசா காடலோனா, படு சூடான அறையில், கடும் வெப்பத்துக்கு மத்தியில் வியர்க்க விறுவிறுக்க யோகாசனம் பயின்று வருகிறாராம். காத்ரோன் கே கிலாடி என்ற படத்தில் நடிக்கிறார் ரோசா. படத்தில் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் பிரமாதப்படுத்தி வருகிறார். இதற்காக கடுமையான பயிற்சியையும் அவர் மேற்கொண்டுள்ளார். அத்தோடு உலகப் புகழ் பெற்ற யோகா ஆசிரியர் பிக்ரமின் நேரடி கண்காணிப்பில், யோகாசனமும் பயின்று வருகிறார். தினசரி அவர் யோகா செய்யும் அறை 40 டிகிரி சூடு கொண்டதாக வைக்கப்படுகிறதாம். இந்த சூட்டோடு, வியர்க்க விறுவிறுக்க யோகா செய்கிறாராம் ரோசா. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகக் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கும் அறையில் நான் தினசரி யோகாசனம் செய்கிறேன். அவ்வளவு சூட்டில் யோகா செய்வது சாதாரணமான காரியமல்ல.
Rosa Catalano
ஆனால் அப்படிப்பட்ட கடும் சூட்டுக்கு மத்தியில் யோகா செய்தால்தான் அது நமக்கு பலன் தரும். புத்துணர்ச்சி கிடைக்கும். மன அமைதி ஏற்படும். இந்த யோகாவை நான் மிகவும் அனுபவித்து செய்து வருகிறேன் என்கிறார் ரோசா. யோகாவை மிக மிக சீரியஸாக கற்றுக் கொண்டு வருகிறார் ரோசா. எதிர்காலத்தில் யோகாசன டீச்சராக வரப் போகிறாராம் ரோசா.

தமிழ், தெலுங்கு போதும் -ஷ்ரியா

தமிழ், தெலுங்கில்தான் அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போது கைவசம் இந்திப் படம் எதுவும் இல்லை என்கிறார் ஷ்ரியா. கந்தசாமியில் கலக்கல் கிளாமரில் வலம் வந்த ஷ்ரியா தற்போது டோரண்டோவில் மையம் கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பட விழாவில், ஷ்ரியா நடித்த திலீப் மேத்தா இயக்கத்தில் உருவான குக்கிங் வித் ஸ்டெல்லா என்ற படம் திரையிடப்படுகிறது. தனது தாயுடன் டோரண்டோ போயுள்ளார் ஷ்ரியா. இது ஷ்ரியாவுக்கு முதல் கனடா பயணமாம். தற்போது தமிழில் இரு பெரிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ரியா. இரண்டுமே தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஒரு படத்தில் ஜோடி தனுஷ் [^]. இன்னொரு படத்தில் ஜோடி சரத்குமார் [^]. தனுஷுடன் குட்டி படத்தில் நடித்துள்ளேன். சரத்குமாருடன் ஜக்குபாயில் நடித்துள்ளேன். இரண்டு படங்களும் எனக்குப் பெயர் வாங்கித் தரும்.
Shriya
தற்போது எந்த இந்திப் படத்திலும் நான் நடிக்கவில்லை. தமிழ், தெலுங்குதான் எனக்கு எப்போதுமே பேவரைட். எனவே அதில்தான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்கிறார் ஷ்ரியா.

மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி...

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம். 1920 இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது. 1947 ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது. 1954 காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது. 1970 பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது. 1973 மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி. 1979 ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது. 1983 டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். 1984 விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள். 1989 மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. 1990 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது. 1991 அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின. 1992 மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது. 1996 மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1997 எரிக்சன் ஆர்380 அறிமுகமானது. 2000 இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது. 2001 வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது. 2002 டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது. 2004 மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது. 2006 மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது. 2007 ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு. 2010 எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம். THANKS-கார்த்திக்
கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார்ரஜினிபார்த்து ரசித்தார். ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில்ரஜினி்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கமல்ஹாஸன். Kamal Hassan and Rajini ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில்கமல்இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார்ரஜினி ரஜினி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்டகமல்ாஸன் வெளியில் காத்திருந்தார். படம் முடிந்து வெளியில் வந்தவர், கமலை நோக்கி வேகமாகப் போய் கட்டிப் பிடித்துக் கொண்டார். "ஃபெண்டாஸ்டிக் கமல்... அருமையா வந்திருக்கு படம். என்னுடைய வாழ்த்துக்கள்!" என ஆத்மார்த்தமாக வாழ்த்த, கமல் முகத்தில் பரவசம். படத்தின் நாயகன் மோகன்லாலுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் ரஜினி [^]. ரஜினிக்கு நன்றி சொன்ன கமல் [^], படம் பற்றிய பல விஷயங்களை நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகள் !!!

இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம். 1969 ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது. 1972 ரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார். 1973 ஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின. 1974 டி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது. 1983 டொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து ".com, .edu .gov" என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன. 1988 Morris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது. 1989 இப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.
1990 நியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார். 1993 இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.
1994 ஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர். 1995 அமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது. 1996 ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது. 1998 ஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது. 1999
இசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது. 2000 1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது. 2002 உலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது. 2004 ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார்.
2005 வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது. 2006 இன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது. 2007 ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது. 2008 இன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர். 2009 முழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.

பிரபுதேவாவுடன் 'வான்டட்' பார்த்த நயன்!

பிரபுதேவா முதல் முதலாக இந்தியில் இயக்கியுள்ள வான்டட்படம்சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தை பிரபுதேவாவுடன் சேர்ந்துமும்பைில் பார்த்தாராம் நயன்தாரா. முதல்முதலாக தனது அன்புக்குரியவர் இந்தியில் இயக்கியுள்ளபடம்என்பதால், அந்தப் படம் ரிலீசாகும்போது பிரபுதேவாவுக்கு 'பக்கபலமாக' நிற்க மும்பை [^] போனாராம் நயன்தாரா. இந்தப் படத்துக்காக மும்பையில் எந்த பிரிமியர் ஷோவும் நடத்தப்படவில்லை. எனவே பிரபுதேவாவே நயன்தாராவுக்காக தனி ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஷோ வேண்டாம் என்று கூறிய நயன்தாரா, ரசிகர்களுடன் சேர்ந்துபடம்பார்க்கலாம் என பிரபு தேவாவுக்கு கூற, அப்படியே செய்தாராம்.
Nayanatara
பாந்த்ராவில் உள்ள சினிமாக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை இருவரும் ரசிகர்களுடன் பார்த்தார்களாம். படம் முடிந்ததும், பிரபு தேவாவை பாராட்டித் தள்ளிய நயன், இந்தியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இனி வரும் என வாழ்த்தினாராம். சும்மா சொல்லக் கூடாது, படமும் அங்கு வெற்றிகரமாக ஓட ஆரம்பித்துள்ளதாம்.

பிரபுதேவாவுடன் 'வான்டட்' பார்த்த நயன்!

பிரபுதேவா முதல் முதலாக இந்தியில் இயக்கியுள்ள வான்டட்படம்சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தை பிரபுதேவாவுடன் சேர்ந்துமும்பைில் பார்த்தாராம் நயன்தாரா. முதல்முதலாக தனது அன்புக்குரியவர் இந்தியில் இயக்கியுள்ளபடம்என்பதால், அந்தப் படம் ரிலீசாகும்போது பிரபுதேவாவுக்கு 'பக்கபலமாக' நிற்க மும்பை [^] போனாராம் நயன்தாரா. இந்தப் படத்துக்காக மும்பையில் எந்த பிரிமியர் ஷோவும் நடத்தப்படவில்லை. எனவே பிரபுதேவாவே நயன்தாராவுக்காக தனி ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஷோ வேண்டாம் என்று கூறிய நயன்தாரா, ரசிகர்களுடன் சேர்ந்துபடம்பார்க்கலாம் என பிரபு தேவாவுக்கு கூற, அப்படியே செய்தாராம்.
Nayanatara
பாந்த்ராவில் உள்ள சினிமாக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை இருவரும் ரசிகர்களுடன் பார்த்தார்களாம். படம் முடிந்ததும், பிரபு தேவாவை பாராட்டித் தள்ளிய நயன், இந்தியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இனி வரும் என வாழ்த்தினாராம். சும்மா சொல்லக் கூடாது, படமும் அங்கு வெற்றிகரமாக ஓட ஆரம்பித்துள்ளதாம்.

அசினுக்கு ஆபரேஷன்!

இருங்க... இருங்க... பதறாதீங்க. நடிகை [^]களுக்கு ஒண்ணுன்னா நம்ம மனசுதான் தாங்காதே... மேட்டர் அவ்வளவு சீரியஸில்லை... நடிகை அசினுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் இன்று மும்பையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கிறது.
Asin
இந்த ஆபரேஷனில் அவரது மூக்குப் பகுதியில் உள்ள சதை சீரமைக்கப்பட உள்ளதாம். அசினுக்கு நீண்ட நாட்களாகவே சளித் தொல்லை இருந்து வருகிறதாம். இதைச் சரிசெய்ய எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்கிறார்களாம். மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் இன்று இந்த அறுவைச் சிகிச்சை நடக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசின், "இது சின்ன சர்ஜரிதான். இரண்டு மூன்று நாட்களில் குணமாகி வந்துவிடுவேன். இப்போதைக்கு கைவசமிருந்த விளம்பரப் படங்களையெல்லாம் முடித்துவிட்டேன். ஆபரேஷன் முடிந்து வந்ததும் பழையபடி லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்காக சல்மான் கானுடன் படம் தொடர்பான விளம்பர வேலைகளில் பிஸியாகி விடுவேன்," என்றார்.

11 செப்டம்பர் 2009

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம். முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால் http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும். உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் . இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

சிறந்த பயர்பாக்ஸ் ஆட்ஆன்கள்

சிறந்த பயர்பாக்ஸ்(Firefox) ஆட்ஆன்களின்(Addons) தொகுப்பு இதோ: 1.ஆட்-பிளாக் பிளஸ்(Ad Block Plus): இணையதளங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க சிறந்த வழி இந்த ஆட்-பிளாக் பிளஸ் ஆட்ஆன்.இதனால் இணையதளங்கள் இன்னும் வேகமாக இயங்கும். இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 2.கலர்புல் டேப்ஸ்(Colourful Tabs): ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்யும் நபரா நீங்கள் ?? அப்படியெனில் இது உங்களுக்கு கட்டாயம் தேவை. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 3.ஐ.ஈ டேப்(IE Tab): சில இணையதளங்கள் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் ஒழுங்காக வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும்.அத்தகைய இணைய தளங்களை பார்ப்பதற்காக உபயோகப்படும் ஆட்ஆன் இது. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 4.பிளாக்பாக்ஸ் (Flagfox): நீங்கள் பார்க்கும் தளம் எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது என்பதை காண்பிக்கும் ஆட்ஆன் இது. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 5.ஸ்கிப் ஸ்க்ரீன்(Skip Screen) நீங்கள் ராபிட்ஷேர் , மெகாஅப்லோட் போன்ற தளங்களை பயன்படுத்துபவரா? அப்படியெனில் இந்த ஆட்ஆன் உங்கள் காத்திருக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும்.நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

யுஎஸ் விமான நிலையங்களில் பமீலா விளம்பர வீடியோவுக்கு தடை

கவர்ச்சி தாரகை பமீலா ஆன்டர்சன் நடித்துள்ள ஒரு விளம்பர வீடியோவை அமெரிக்க விமான நிலையங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் மீதான சித்திரவதைகளுக்கு எதிரான மனிதர்கள் (பெடா) என்ற அமைப்பு பமீலா ஆன்டர்சனை வைத்து ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கியுள்ளது. அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு [^] அதிகாரியாக அதில் பமீலா ஆன்டர்சன் தோன்றுகிறார். கவர்ச்சி [^]கரமான உடையில் காணப்படும் பமீலா, விமான நிலையங்களுக்கு தோல் ஆடைகள், தோல் பை உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகளை முரட்டுத்தனமாக அணுகி அவற்றைப் பறிக்கிறார். ஆண்களின் பேன்ட்டுகளை உருவுகிறார். ஜட்டி கூட இல்லாமல் அத்தனை ஆடைகளையும் கழற்றிப் போட்டு விட்டு துரத்துவது போல அந்தக் காட்சிகள் உள்ளன. இந்தக் காட்சிகள் சிறார்களின் மனதைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக கருதிய அமெரிக்க விமான நிலையங்கள், பமீலாவின் இந்த விளம்பரத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
Pamela Anderson
நியூயார்க் நகரில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இந்த விளம்பரத்தை வைக்கவிருந்தனர். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. இந்தத் தடை [^]யையடுத்து விமானங்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப பெடா முயற்சித்து வருகிறதாம்.

எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள்-பிரகாஷ்ராஜ்

அமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் பிரகாஷ் ராஜ். காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு தேசிய விருது கிடைத்ததை விட, அதற்கு காரணமான காஞ்சிவரம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருதை நல்ல உழைப்புக்கான அங்கீகாரமாக கருதுகிறேன். 18 வருடங்களுக்குப்பின், ஒரு தமிழ் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அமீர்கான், ஷாருக்கான், மோகன்லால், சத்யராஜ் ஆகியோரை தாண்டி இந்த விருதை எனக்கு கொடுத்து விட்டதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஷாருக்கான் டி.வி. நடிகராக அறிமுகமாகி, இன்று தயாரிப்பாளர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். `சக்தே இந்தியா'வில் சிறப்பாக நடித்து இருந்தார். அமீர்கான் ஒரு லவ் பாயாக அறிமுகமாகி, `லகான்,' `தாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் மூலம் அவர் நடிப்பு பேசப்படுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர். அதேபோல் சத்யராஜ், ஒரு அற்புதமான நடிகர். நான் தேசிய விருது வாங்கியதால், இவர்கள் திறமையில் எதுவும் குறைந்து போய்விடவில்லை. எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. தேசிய விருது நிரந்தரமானது அல்ல. இந்த வருடம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அடுத்த வருடம் வேறு ஒருவருக்கு கிடைக்கும். இந்த விருது மூலம் தமிழ் படத்தின் தரம் தேசிய அளவுக்கு உயர்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படங்களில் பணிபுரிய நடிகர் [^]கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ரசிகர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். காஞ்சிவரம் படத்தில் நடித்தபோதே இந்த படத்துக்கு விருது [^] கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் என்றார். முன்னதாக முதல்வர் [^] கருணாநிதியை தனது இரு மகள்களுடன் சென்று சந்தித்து பிரகாஷ் ராஜ் ஆசி பெற்றார். ''உனக்கு அண்ணா விருதையும், தேசிய விருதையும் நமது 'காஞ்சிபுரம்' வாங்கித் தந்துள்ளது'' என்று தனக்கே உரிய பாணியில் கூறினார் கருணாநிதி [^]. (அறிஞர் அண்ணா காஞ்சியில் பிறந்தவர்). பின்னர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரகாஷ் ராஜ்.
Prakashraj meets The Press
பிரஸ் மீட்டில் இயக்குனர் [^] ராதாமோகன், நடிகை ஷம்மு உள்ளிட்டோரும் பிரகாஷ் ராஜுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தனது டூயட் சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் `மயில்' `இனிது இனிது' என இரு படங்கலை தயாரித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் `பயணம்' என்ற படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.

பணக்கார நகரங்கள்-ஐரோப்பா முதலிடம்

உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
Luxembourg
உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது. ஆசியாவின் பணக்கார நகரங்கள் வரிசையில் டெல்லி [^]க்கு 41, மும்பைக்கு 43, சென்னைக்கு 44, பெங்களூருக்கு 45, ஹைதராபாத்துக்கு 46, புனேவுக்கு 47, கொல்கத்தாவுக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. யுபிஎஸ் நடத்திய இந்த சர்வேயில் உலகில் உள்ள 73 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. உலக நகரங்களிலேயே கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனீவா, நியூயார்க் ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்கள்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகின்றனராம். இந்த சர்வேயில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்துள்ளது. அது உலக நாடுகளில் பணியாற்றுவோர் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் வாங்கப்படும் சம்பளமும் குறித்தது. நியூயார்க் அல்லது ஜூரிச்சில் பணியாற்றும் ஒருவர் ஒரு ஐபாட் நானோ வாங்குவதாக இருந்தால் 9 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்குவதாக இருந்தால் 177 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம். உலகின் பத்து பணக்கார நகரங்கள் குறித்த ஒரு பார்வை... 1. கோபன்ஹேகன் உலகின் மிகப் பணக்கார நகரம். டென்மார்க்கின் பொருளாதார கேந்திரம். 2008ம் ஆண்டு 50 எதிர்கால ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இந்த நகரம். 2. ஜூரிச் உலகின 2வது பணக்கார நகரம். உலகின் தரமான வாழிட நகரங்களில் ஜூரிச்சுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம். யுபிஎஸ், கிரெடிட் சுவிஸ், ஸ்விஸ் ரெ, ஜூரிச் பினான்ஷியல் சர்வீஸ் உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் வங்கிகள் இந்த நகரில்தான் உள்ளன. சம்பளம் கொடுப்பதில் ஜூரிச்தான் நம்பர் ஒன். உலகின் வேறு எந்த நகரத்தையும் விட ஜூரிச்சில்தான் அதிக அளவில் சம்பளம் தரப்படுகிறதாம். 3. ஜெனீவா உலகின் 3வது பணக்கார நாடு. தரமான வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதில் ஜெனீவாவுக்கு உலக அளவில் 3வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் சிறிய பெருநகர் என்ற பெருமையும் ஜெனீவாவுக்கு உண்டு. 4. நியூயார்க் உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க், பணக்கார நகரங்கள் [^] வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. மான்ட்ரீல், டோரன்டோவை விட நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்சலெஸ், சிகாகோ நகரங்களில் கூடுதல் சம்பளம் தருகிறார்களாம். 5. ஆஸ்லோ நார்வே நாட்டின் வர்த்தகம் [^], வங்கித் துறை, தொழில் மற்றும் கப்பல் துறையின் கேந்திரமாக விளங்குகிறது ஆஸ்லோ. 6. லாஸ் ஏஞ்சலெஸ் அதிகம் சம்பளம் தரும் முதலாளிகள் நிறைந்த நகரம். ஹாலிவுட் [^] இந்த நகரில்தான் உள்ளது. உலகின் பொழுதுபோக்கு [^] தலைநகர் என்ற செல்லப் பெயரும் உண்டு. 7. மியூனிக் ஜெர்மனியின் 3வது பெரிய நகரம் மியூனிக். ஐரோப்பாவின் பொருளாதார கேந்திரம். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகம் இதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு மிக மிக குறைவு. 8. லக்சம்பர்க் அதிகம் சம்பளம் தரும் உலக நகரம்/நாடுகளில் லக்சம்பர்க்கும் ஒன்று. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாகக் கொண்ட 2,586 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச் சிறிய நாடு தான் லக்சம்பர்க். 9. பிராங்க்பர்ட் ஜெர்மனியின் முக்கிய வர்த்தக மையம் பிராங்க்பர்ட். பல நூற்றாண்டுகளாகவே ஜெர்மனின் பொருளாதார மையமாக திகழ்கிறது பிராங்க்பர்ட். பல்வேறு பெரிய பெரிய வங்கிகள் இந்த நகரத்தைச் சேர்ந்தவைதான். 10. டூப்ளின் உலகின் 10வது பணக்கார நகராக உள்ளது டூப்ளின். அயர்லாந்து நாட்டின் தலைநகர். 2008ம் ஆண்டு டூப்ளின் நகரம், உலகின் ஐந்தாவது பணக்கார நகரமாக இருந்தது. தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.டெல்லி: உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com